Reading Time: < 1 minuteகனடாவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நயாகரா பகுதியில் உள்ள ஒன்பது உள்ளூர் வர்த்தக நிறுவனங்களுக்குள் புகுந்து 35000 டொலர் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்களை திருடியதாகக் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பெல்ஹாமில் கடந்த மாதம் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கடைகளை உடைத்து பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்கள் பாதுகாப்பு பெட்டகத்தை குறி வைத்து செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்களை அடையாளம் கண்டRead More →

Reading Time: < 1 minuteரெறான்ரோ சிறைச்சாலையில் தாக்குதலுக்கு இலக்காகி கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 69 வயதான கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 54 வயதான கைதி ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார். சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteஈ ஸ்கூட்டர்கள் மற்றும் ஈ பைக்குகளுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும் என கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். வீதிகளில் ஈ ஸ்கூட்டர்கள் மற்றும் ஈ பைக்குகளை பயன்படுத்துவதற்கு அனுமதி நடைமுறை ஒன்று அறிமுகம் செய்யப்பட வேண்டும் என கனடிய மக்கள் தெரிவித்துள்ளனர். நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பில் பங்கேற்ற சுமார் 57 வீதமானவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர். அனுமதி பத்திரம்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் பிரான்சிக்கு அதிகாரப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். பிரான்கோபொயின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் இவ்வாறு பிரான்சிற்கு விஜயம் செய்துள்ளார். இன்றைய தினம் நடைபெற உள்ள மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு தொடர்பில் அவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் காலகட்டத்தில் பிரெஞ்சு மொழி பேசும் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அவர் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளார். பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளின்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் அல்பர்ட்டாவில் கடைகளில் மதுபானம் விற்பதற்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் ஒன்றாரியோ மாகாணத்தில் கடைகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறு கடைகள், மளிகை கடைகள் போன்றவற்றில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக்கு அமைய இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபான வகைகளை கடைகளில் விற்பனை செய்வது மூலம் வாடிக்கையாளர்களுக்கு நன்மை ஏற்பட்டாலும் மதுபான சில்லறை விற்பனையைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொலிஸ் உத்தியோகத்தர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 21 வயதானவர் கைது செய்யப்பட்டுள்ளார். 29 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இருந்தார். குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 வயதான நபருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டிருந்தபோது குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. 21 வயதான டிபோர் ஓர்கொனா என்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் வௌவால் ஒன்றின் மூலம் பரவிய வைரஸ் தொற்றினால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒன்றாரியோ சுகாதார அதிகாரிகள் இந்த விடயத்தை உறுதி செய்துள்ளனர். வடக்கு ஒன்றாரியோ பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. டாக்டர் மெல்காம் லாக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். வீட்டின் அறையில் வௌவால் ஒன்று இருந்ததாகவும் அந்த வௌவால் சிறுமியை கடிக்கவில்லை எனவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர். எவ்வாறு எனினும் துரதிஷ்டவசமாக வௌவாலின் மூலம் பரவிய வைரஸ்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்துரையாடியுள்ளார். இதன்படி, காங்கேசன்துறை துறைமுகத்தை நவீனமயமாக்கும் நடவடிக்கைகளுக்காக 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இந்தியா வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கை தொடருந்து திணைக்களத்துக்கு 22 டீசல் இயந்திரங்களைப் பரிசாக வழங்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் தெரிவித்துள்ளார். இதேவேளை, எரிசக்தி, வலுசக்தி, சுகாதாரம்,Read More →

Reading Time: < 1 minuteரொன்ரோவின் மிட் டவுன் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மிட் டவுன் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்று தொடர்பிலான விசாரணைகளில் ஈடுபட்டிருந்த நேரம் இந்த துப்பாக்கிச் சூடுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கான நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதிப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டிய ப்ரீலாண்ட் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். கனடிய மக்களிடம் அறவீடு செய்யப்பட்ட வரித்தொகை இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பொருட்கள் சேவைகள் வரி மற்றும் விற்பனை வரி போன்றன இவ்வாறு மீள வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மத்திய மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் கன்னியர்கள் இந்த திட்டத்தின்Read More →

Reading Time: < 1 minuteயோர்க் பிராந்தியத்தில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யோர்க் பிராந்திய பொலிஸார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாகன கொள்ளை சம்பவங்களின் எண்ணிக்கை 31 வீதமாக குறைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை 2440 வாகனங்கள் களவாடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் இதே காலப்பகுதியில் 3460 வாகனங்கள் களவாடப்பட்டிருந்தன. சுமார் 80 வாகனங்கள் மீட்கப்பட்டதாகவும் இவற்றின் பெறுமதிRead More →

Reading Time: < 1 minuteஇணைய வழி துன்புறுத்தல் தடைச் சட்டத்தை அமல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் பெரும் எண்ணிக்கையிலான தாய்மார் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். இணைய வழியில் தங்களது பிள்ளைகள் துஷ்பியோகத்திற்கு உள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். எனவே இந்த புதிய சட்டத்தை அமல்படுத்துவது அத்தியாவசியமானது என தெரிவித்துள்ளனர். பில் சீ-63 என்ற இந்த உத்தேச சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் சட்டவிரோதமான உள்ளடக்கங்கள் பிரசூரமாவதை தடுப்பதற்கு இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் மீண்டும் ஒரு சிறுமி மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், 30 பேர் தாக்குதலை வேடிக்கை பார்க்க, இரண்டு சிறுவர்கள் மட்டும் துணிச்சலாக தாக்குதலைத் தடுத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலுள்ள Kelowna நகரில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில், 13 வயது சிறுமி ஒருத்தி மீது ஐந்து பதின்ம வயதினர் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். விடயம் என்னவென்றால், இந்த சம்பவத்தை சுமார் 30 பேர் வேடிக்கைRead More →