Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பகுதியில் இன வெறி அடிப்படையில் செயற்பட்ட ஒருவரை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டிடிசி பஸ்ஸில் கடந்த மாதம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 33 வயதான நபர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர். கருப்பின நிறவெறி அடிப்படையில் குறித்த நபர் நடந்து கொண்டதாகவும் கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. டிடிசி பஸ்ஸில் பயணம் செய்த போது குறித்த நபர் இவ்வாறு இனக்ரோத அடிப்படையில்Read More →

Reading Time: < 1 minuteஉலகின் பிரபல்யமான புகைப்படங்களில் ஒன்றாக கருதப்படும் ரோரிங் லயன் என்ற புகைப்படம் கனடாவில் காணாமல் போய் இரண்டு ஆண்டுகளின் பின்னர் இத்தாலியில் மீட்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் புகைப்படமே இது என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இந்த புகைப்படம் அரிய புகைப்படம் மீட்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை நாட்டுக்கு கொண்டு வருவதற்காக இரண்டு போலீஸ் உத்தியோகத்தர்கள் இத்தாலியன் ரோம் நகருக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteகல்கரியில் புயல் காற்று காரணமாக 2.8 பில்லியன் டொலர் நட்டயீட்டுக் கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கல்கரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட புயல் காற்று காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்காக இவ்வாறு 2.8 பில்லியன் டொலர்கள் நட்டஈடு பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. கனடிய வரலாற்றில் பதிவான இரண்டாவது மிகப் பெரிய இயற்கை அனர்த்தம் இது என தெரிவிக்கப்படுகிறது. கனடிய காப்புறுதி நிறுவனம் இது தொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் திகதிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வாட்டர் கன் (Water gun) அல்லது நீர் விளையாட்டு நீர்த்துப்பாக்கியால் தண்ணீர் பீய்ச்சி அடித்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சிம்கோ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. அண்மையில் நடைபெற்ற லேபர் டே நிகழ்வுகளின் போது குறித்த பெண் அண்டை வீட்டு சிறுவர்களுடன் கூடி விளையாடியுள்ளார். இதன்போது வாட்டர் கன்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் வயோதிபர்கள் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் தொடர்பில் சந்தேகத்திற்கிடமானவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சயின்டி மேரி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதான ஆண் ஒருவரும் 71 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு சடலங்கலாக மீட்கப்பட்டுள்ளனர். அவசர சேவை பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற அழைப்பின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர். இதன்போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இருவரின் சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். குடியிருப்புRead More →

Reading Time: < 1 minuteஉலகின் செல்வந்த நாடுகளின் பட்டியலில் கனடா உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் உலகின் ஏனைய செல்வந்த நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அண்மைக்காலமாக கனடா செல்வந்த நிலையில் இருந்து வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அவுஸ்திரேலியா, நியூசிலாந்து பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது கடந்த காலத்தில் கனடா இருந்த வலுவான செல்வந்த நிலையில் இருந்து பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையில் செல்வந்த நிலை தொடர்பான இடைவெளிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒட்டோவா பகுதியில் நுளம்பு கடிக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். நுளம்பு கடியினால் ஏற்படக்கூடிய வைரஸ் ஒன்றினால் குறித்த நபர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒட்டாவா பொதுச் சுகாதார அலுவலகம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நுளம்பு கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதார அலுவலகம் பொதுமக்களை கோரியுள்ளது. பெஸ்ட் நைல் வைரஸ் மற்றும் ஈஸ்டர்ன் இக்குவின் என்சிபலிடிஸ் ஆகிய வைரஸ் தொற்றுக்களினால் ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்கு சென்றவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று தொடர்பில் இலங்கை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடாவில் புலம்பெயர்ந்து வசித்து வருகிறார். இந்நிலையில் புலம்பெயர் தமிழர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சென்றுள்ளார். ஏமாற்றிய தரகர்யாழில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான எயார் கனடா நிறுவனம் தொழிற்சங்க பிணக்கு தொடர்பில் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது. விமான சேவை நிறுவனத்தின் விமானிகள் தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விமானிகள் எயார் கனடா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் பணிப் புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இரண்டு தரப்புகளுக்கும் இடையில் அரசாங்கம் மத்தியஸ்தம்Read More →

Reading Time: < 1 minuteஏதிலிகளை மீள்குடியேற்றுவது தொடர்பில் கனடிய மத்திய அரசாங்கம் முன்மொழிந்துள்ள யோசனைக்கு மாகாண அரசாங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. குறிப்பாக கியூபெக் மற்றும் ஒன்றாரியோ மாகாணங்களில் மட்டும் தற்பொழுது ஏதிலிகள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை பன்முகப்படுத்தும் யோசனையை அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. எனினும் இந்த யோசனைக்கு ஏனைய மாகாண அரசாங்கங்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். போதிய அளவு நிதி ஒதுக்கீடுகளை வழங்காது எதிலிகளை மீளக்குடியேற்ற கோருவது பொருத்தமற்றது என நியூ பிரவுண்ஸ்விக்Read More →

Reading Time: < 1 minuteகனடா அரசு புகலிடக்கோரிகையாளர்களை அலைக்கழிப்பது என முடிவு செய்துவிட்டது போலிருக்கிறது. ஆம், பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டுவருகிறது. கனடாவில் அதிக புகலிடக்கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களின் சுமையைக் குறைப்பதற்காக, பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டுவருகிறது. கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை தற்போதைக்கு 235,825 ஆக உள்ளது. இந்த புகலிடக்கோரிக்கைகளில்Read More →

Reading Time: < 1 minuteகட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த புதிய சட்டமூலத்தில் கார்பன் வரி தொடர்பிலான யோசனைகள் உள்ளடக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நேரடியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளில் லிபரல் மற்றும் கான்சர்வேட்டிவ் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கட்சிகளினதும் காலநிலை பாதுகாப்பு கொள்கைகள் ஏற்புடையவை அல்ல என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். காலநிலை மாற்றத்திற்கு எதிராகRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தின் கிங்ஸ்டன் பகுதியில் பட்டப் பகலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கிங்ஸ்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நபர் ஒருவர் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது மூன்று பேர் தாக்கப்பட்டு இருந்ததாக பொலிஸார்Read More →