Reading Time: < 1 minute ஒன் எரைவல் விசா (இணையவழி வருகை- On-arrival visa) முறைகாரணமாக நாட்டின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடையும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அந்நியச் செலவாணியை பெற்றுக்கொடுக்கும் முக்கிய துறைகளில் ஒன்றாக சுற்றுலாத்துறை காணப்படுகின்றது. நாட்டிற்கு வருகைதரும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். இதுநாட்டிற்கும் அவப்பெயராகும். இலங்கைக்குRead More →

Reading Time: < 1 minute கனடிய பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்ளிருக்கும் நடவடிக்கையில் வீழ்ச்சியை பதிவாகியுள்ளது. கனடிய மத்திய அரசாங்கம் வெளிநாட்டு மாணவர்கள் உள்ளீர்ப்பை வரையறுக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருந்தது. இதன் அடிப்படையில் அனேகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உள்ளீர்ப்பு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பது குறைக்கப்படும் என குடி வரவு அமைச்சர் அறிவித்திருந்தார். வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. வீடமைப்பு, சுகாதாரம்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் பொது இடம் ஒன்றில் அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 35 வயதான நபரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். ஹை பார்க் பகுதியில் அமைந்துள்ள பொது நீச்சல் குளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த நபர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என அங்கிருந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ டவுன்டவுன் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவில் டவுன்டவுன் பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இரவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் சஸ்கட்ச்வான் பகுதியில் பொலிஸ் வாகனத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். 31 வயதான நபர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சஸ்கட்ச்வானின் பஃபல்லோ நெரொவ்ஸ் பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முறைப்பாடு ஒன்றை விசாரிப்பதற்காக பயணித்த வாகனத்தில் குறித்த நபர் மோதுண்டு உள்ளார். இந்த சம்பவத்தில் பாதசாரி ஒருவரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சில நிறுவனங்களினால் ஏமாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் சர்வதேச மாணவர் மற்றும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டங்களில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக குற்றம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவின் பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடாவிற்கு வருகை தரும் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக அண்மையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார். இவ்வாறான ஒருRead More →