Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ பகுதியில் பெண் பயணி ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்ட டாக்சி சாரதி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பெண் பயணி ஒருவரை பாலியல் ரீதியாக குறித்த நபர் துன்புறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவின் பிரிட்ஜ் மவுண்ட் மற்றும் டான்போர்த் வீதிகளுக்கு அருகாமையில் கடந்த 28 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 47 வயதான சபீர் ஹுசைன் சீமா என்ற நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.Read More →

Reading Time: < 1 minute தொடர்ந்து புலம்பெயர்ந்தோருக்கு கட்டுப்பாடுகள் விதித்து வரும் கனடா அரசு, சர்வதேச மாணவர்களுக்கு மீண்டும் ஒரு கட்டுப்பாட்டை விதித்துள்ளது. சர்வதேச மாணவர்களுக்கு ஒரு கட்டுப்பாடுஅதாவது, கனடாவில் கல்வி கற்க வந்துள்ள சர்வதேச மாணவர்கள், வாரம் ஒன்றிற்கு 24 மணி நேரம் மட்டுமே பணி செய்ய அனுமதி என கனடா அரசு முடிவு செய்துள்ளது. இந்த விதி, இம்மாதம் அமுலுக்கு வருகிறது. கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்கள், கல்வியில் மட்டுமே கவனம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் ரொறன்ரோவில் இணையத்தின் ஊடாக நைஜீரிய சமூகத்தை அச்சுறுத்திய பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இந்த அச்சுறுத்தல் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி நைஜீரிய சமூகத்தை அச்சுறுத்தும் வகையிலான காணொளி ஒன்றை குறித்த பெண் சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 46 வயதான அமெக்கா சொன்பெர்கர் என்றRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பிராம்டன் பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பீல் பிராந்திய பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். வாகனம் ஒன்றில் வைத்து இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது நபர் ஒருவர் வாகனத்தில் படுகாயம் அடைந்த நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சுமார்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் கரடியின் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் காயமடைந்துள்ளார். அல்பர்ட் கல்கரி ராக்கி வியூ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரடியின் தாக்குதலுக்கு இலக்கான நபர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றைய தினம் காலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு பொலிஸாரும் அல்பர்ட்டா வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளும்Read More →

Reading Time: < 1 minute யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றையதினம் மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான நீர் வசதிகள், மின்சார வசதிகள், காணி அபிவிருத்தி மற்றும் சுற்றுலா அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன. இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பளைRead More →