Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து, சட்டவிரோதமான அடிப்படையில் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் இத்தாலிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரயில் பாதை பாலத்திற்கு அருகாமையில் காணப்படும் கடவையில் வைத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளும் அமெரிக்க எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவன அதிகாரிகளும் கூட்டாக இணைந்து இந்த இருவரையும் கைது செய்துள்ளனர். ஒன்றாரியோவில் இருந்து நியூயோர்க் செல்வதற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் யோர்க் பிராந்தியத்தில் ஆசிரியர் ஒருவர் தகாத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 22 ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக கடமையாற்றி வரும் 47 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். பதின்ம வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 5ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எந்த பாடசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றது என்பது குறித்துRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு புதிய வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கொண்டுவருவதற்கு அமெரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் உள்ள அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வர்த்தகRead More →

Reading Time: < 1 minuteபாடசாலைகளில் இடம்பெறும் விசேட நிகழ்வுகளுக்குப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடக் கூடாது எனக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அனைத்து மாகாண கல்வி செயலாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளில் இடம்பெறும் சிறுவர் தினம், ஆசிரியர் தினம் போன்ற விசேட நிகழ்வுகளுக்காகப் பெற்றோரிடமிருந்து பணம் அறவிடுவது தொடர்பில் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைக்கப்பெறுவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நியூபிவுன்ஸ்விக் சக்வில் பகுதியில் 87 வயதான முதியவர் ஒருவர் கூடைப்பந்தாட்ட விளையாட்டில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். வெயன் மெக்கே என்ற 87 வயதான முதியவரே இவ்வாறு தனது திறகைமளை வெளிப்படுத்தி வருகின்றார். மெக்கே முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர் என்பதுடன் அவர் ஓர் பயிற்றுவிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்கே பந்தை சரியான முறையில் கூடையில் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. மவுன்ட் எலிசொன் பல்கலைக்கழகத்தின் சார்பில் மெக்கே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில்Read More →

Reading Time: < 1 minuteஅல்பேட்டா மாகாணத்தில் பாரிய டைனோசர் தலையொன்று மீட்கப்பட்டுள்ளது. சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த டைனோசர் ஒன்றின் தலைப் பகுதி இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டையோட்டின் எடை சுமார் 272 கிலோ கிராம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கிரான்ட் பியரெரே பகுதியில் இந்த மண்டையோடு மீட்கப்பட்டுள்ளது. இந்த வகை டைனோசர்கள் தவார உண்ணிகள் எனவும் இராட்சத விலங்குகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த மண்டையோடு மட்டும் குட்டி யானையொன்றின் அளவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஓடும் வாகனங்களிலிருந்து சுமார் 2.2 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. பயணம் செய்து கொண்டிருந்த ட்ரக்டர் டெய்லர் ரக வாகனங்களுக்குள் பிரவேசித்து பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இவ்வாறு பாரியளவு பொருட்களை கொள்ளையிட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகனங்கள் சிகப்பு சமிக்ஞைகளில் நிறுத்தப்பட்ட போது, சந்தேக நபர்கள் வாகனத்திற்குள் புகுந்து பொருட்களை களவாடியுள்ளனர். கடந்த மே மாதம் முதல் இவ்வாறு பல்வேறு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவிலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் 14 வயது சிறுமி ஒருத்தி, தன்னுடன் பயிலும் சக மாணவி மீது தீவைத்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி, கனடாவின் Saskatoon மாகாணத்தில் அமைந்துள்ள Evan Hardy Collegiateஇல் படிக்கும் 14 வயது சிறுமி, தன் சக மாணவியான 15 வயது சிறுமி மீது தீவைத்தாள். உடனடியாக ஆசிரியைகள் தீயை அணைக்க முயன்றாலும் அந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். இந்த சந்தேக நபர் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 34 வயதான பிலிப் கிராண்ட் என்ற நபரே இவ்வாறு இரண்டு பேரை படுகொலை செய்திருந்தார். இடாபிகாக் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதனால் இந்த இருவரும் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2022 ஆம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteஎயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக எடின்பரோவில் தரையிறக்கப்பட்டுள்ளது. அவசர நிலைமையினால் இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரொறன்ரோவில் இருந்து பிராங்புரூட் நோக்கி பயணம் செய்த விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.சீ 843 என்ற விமானமே இவ்வாறு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட மருத்துவ அவசர நிலைமையினால் இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பொருளாதார வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு நடுப்பகுதியளவில் பிரதான வட்டி வீதம் 3 ஆக குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வங்கி வட்டி வீதம் 3.75 வீதம் ஆகவும் அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் வங்கி வட்டி வீதம் 2.75 வீதம் ஆகவும் குறைவடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பொருளாதாரம் ஓரளவு வளர்ச்சியை பதிவு செய்யும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பகுதியில் கார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் வீடு ஒன்றை உடைத்து உள்ளே பிரவேசித்து காரின் சாவியை களவாடி காரை எடுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கென்னடி வீதி மற்றும் பிரிட்ஜ் மவுண்ட் வீதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின் முன்பக்க ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்து காரின் சாவியை எடுத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 19Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு மகிழ்ச்சியான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வீடுகளின் விலை குறைவு மற்றும் அடகு கடன் வட்டி விகித மாற்றம் போன்ற நிலைமைகள் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான சாத்தியத்தை அதிகரித்துள்ளது. ரேட்ஹப்.சீஏ (Ratehub.ca) என்ற இணைய தளம் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வீடுகளை கொள்வனவு செய்வதற்கான இயலுமை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான குறைந்தபட்ச வருமான அளவு சராசரிRead More →

Reading Time: < 1 minuteகொழும்பு, ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் உள்ள சர் பாரன் ஜயதிலக்க மாவத்தை மற்றும் ஜனாதிபதி மாவத்தை இன்று (27) முதல் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உத்தரவுக்கமைய இந்த வீதிகள் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகல்விக்காக அதிக ஒதுக்கீடுகளை ஒதுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சை திணைக்களம் தொடர்பில் மக்கள் மத்தியில் எழுந்துள்ள அவநம்பிக்கையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்ததாக பிரதமர் மேலும் சுட்டிக்காட்டினார். இதுவரை காலதாமதமாகி வரும் அனைத்து தேர்வு முடிவுகளையும் வெளியிடுமாறு பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை,பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சனத்தொகை அதிகரிப்பு தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் மொத்த சனத்தொகை 41,288,599 மாக பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. இரண்டாம் காலாண்டு பகுதியில் நாட்டின் சனத்தொகை 250,229ல் அதிகரித்துள்ளது. இரண்டாம் காலாண்டு பகுதியில் சனத்தொகை அதிகரிப்பு 0.6 வீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு இரண்டாம் காலாண்டு பகுதியில் சனத்தொகை வளர்ச்சியானது 0.8 வீதமாக அதிகரித்திருந்தது. நாட்டில் பிறப்பு மற்றும் இறப்புக்களுக்கு இடையிலானRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் சிறுபான்மை லிபரல் அரசாங்கம் புதன்கிழமை (25) எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் இருந்து தப்பித்தது. 211 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராகவும், 120 பேர் பிரேரணைக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். இடதுசாரி சார்பான புதிய ஜனநாயகக் கட்சி (NDP) ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுப்பதற்கான 2022 உடன்படிக்கையிலிருந்து திடீரென விலகுவதாக அறிவித்த சில வாரங்களுக்குப் பின்னர் இந்த வாக்கெடுப்பு நடந்துள்ளது. 2015Read More →

Reading Time: 2 minutesஜனாதிபதி தேர்தலின் வெற்றியின் உரிமையை நம் நாட்டின் அனைத்து மக்களுக்கும் அர்ப்பணிக்க விரும்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (25) இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். பல தசாப்தங்களாக நாம் எழுப்பிய குரலுக்கு மெது மெதுவாக ஆனால் சீராக செவிசாய்த்து, நாங்கள் முன்வைத்த வேலைத்திட்டத்திற்கு உயிர்மூச்சாக இருந்த இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் எங்களது கௌரவத்தைத் தெரிவிக்கிறோம். எங்கள் வேலைத்திட்டத்தில்Read More →