Reading Time: < 1 minute கனடாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்ளிருக்கும் நடவடிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த ஜனவரி மாதம் வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பது குறைக்கப்படும் என குடி வரவு அமைச்சர் அறிவித்திருந்தார். குறித்த தீர்மானம் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையில் எடுக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் பல பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் உள்ளீர்ப்பு குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வீடமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதில் நிலவும் நெருக்கடிRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் அலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாரம் முதல் குறித்த தடை அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், இந்த தடை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. வகுப்பறையில் கற்கும் போது மாணவர்கள் கவனம் சிதறுவதை தடுக்கும் நோக்கில் இவ்வாறு அலைபேசி பயன்பாட்டுக்கு தடை விதிப்பதாக மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது. வகுப்பறைகளில் அலைபேசி பயன்படுத்துவது தடைRead More →

Reading Time: < 1 minute கனடாவின் விவசாய மற்றும் உணவு உற்பத்தி துறைக்கு சைபர் தாக்குதல் தொடர்பில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த துறைகள் மீது போதிய அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத காரணத்தினால் இலகுவில் இலக்கு வைக்கப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவசாய செய்கை, முதல் உணவு உற்பத்தி, விநியோகம், மளிகை பொருள் மற்றும் உணவுப் பொருள் விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு படிமுறைகளில் இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட கூடும் என தெரிவிக்கப்படுகிறது. கடந்தRead More →

Reading Time: < 1 minute வீட்டின் மேல் மாடியில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு எதிராக நட்டஈடு கோரிய வழக்கு தொடர்ந்த பெண், அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் பெண் ஒருவர் வீட்டின் மேல் மாடியில் தங்கி இருந்த அயலவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்திருந்தார். லிண்டா பூ என்ற பெண் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். வீட்டின் மேல் மாடியில் வசித்து வரும் லொரென்ஸோ புரூனோ என்பவருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ நகரில் இடம் பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிளாக் கிரிக் மற்றும் பிரீத் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. கனடாவின் துப்பாக்கிச் சூடு தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இட இடத்திற்கு விரைந்து காயமடைந்த நபரை காப்பாற்ற முயற்சித்துள்ளனர். எனினும் இந்த முயற்சியை வெற்றி அளிக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சந்தேகRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பார்க்டேல் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். குயின்ஸ் வீதி மற்றும் லேண்ட்ஸ் டவுன் வீதி என்பவற்றுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவம் ஒன்று குடியிருப்பு தொகுதி ஒன்றில் இடம்பெற்றதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாட்டை தொடர்ந்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது இரண்டு பேர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி, காயமடைந்த நிலையில் இருந்ததனை பொலிஸார் அவதானித்துள்ளனர்.Read More →