Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் கிட்சனர் பகுதி சர்வதேச பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வாடகை மோசடியில் சிக்கி பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார். ஹார்ஷ் பட்டேல் என்ற மாணவரே இவ்வாறு பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார் கொனிஸ்டோகா கல்லூரியில் கற்கும் சர்வதேச மாணவரான ஹார்ஷ் பட்டேல் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளார். வீடு ஒன்றே வாடகைக்கு இருப்பதாக கூறி பணம் பெற்றுக் கொள்ளப்பட்ட போதும் அவ்வாறு வீடு வாடகைக்கு இல்லை என அறிந்து கொண்டதாக மாணவர் தெரிவிக்கின்றார்.Read More →

Reading Time: < 1 minuteகனடா ஒன்ராறியோ மாகாணத்தில், 60 ஆண்டுகளுக்குப்பிறகு முதன்முறையாக மனிதர்களில் பயங்கர நோயான ரேபிஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், மருத்துவ உலகை பரபரப்படையச் செய்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். வௌவால் ஒன்றிடமிருந்து அவருக்கு அந்நோய் பரவிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஒருவருக்கு ரேபிஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, யாராவது ரேபிஸ் வைரஸை தன் உடலில் சுமக்கக்கூடிய எந்த விலங்கையாவது தொட்டிருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார அலுவலர்கள் மக்களைக்Read More →

Reading Time: 2 minutesமாண்புமிகு மன்னர் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் முதல் கனடிய கௌர பதக்கம் கனேடிய அரசால் தமிழர்களான கணேசன் சுகுமார், குலா செல்லத்துரை ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. முடிசூட்டு பதக்கம் என்பது மாட்சிமை பொருந்திய மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கனடிய கௌரவமாகும். கனடாவிற்கும் அவர்களின் சொந்த மாகாணத்திற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தவர்களை அங்கீகரிக்கிறது. கனடாவின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன் அவர்களால்Read More →

Reading Time: < 1 minuteமிஸ்ஸசாகா பகுதியில் சுமார் 20 முதல் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 96 மற்றும் 66 வயதுடைய வயோதிப பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது என்பதுடன் இவை இரண்டும் இரு வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது. 96 வயதான வயோதிப பெண் வீதியில் நடந்து செல்லும் போதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பெர்லிங்டன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். தனி ஒரு வாகனம் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. சில்வர் மிட்சுபிஷி செடன் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவத்தில் 47 வயதான ஆண் ஒருவரும் 41 வயதான பெண் ஒருவரும் உயிர் இழந்துள்ளனர். இந்த விபத்தில் சிறிய நாய் ஒன்றும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகாமையில் இருந்தRead More →

Reading Time: < 1 minuteமேற்கத்திய நாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. சமீபத்தில் பிரித்தானியாவில் நிகழ்ந்த புலம்பெயர்தல் எதிர்ப்பு வன்முறையில் பங்கேற்றவர்களில் பலர் சிறுவர்கள் என்பது நினைவிருக்கலாம். கனடாவில், 2022ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், பூங்கா ஒன்றில் படுத்திருந்த, வீடற்றவரான கென்னத் லீ (59) என்னும் நபரை சூழ்ந்துகொண்டு 13 முதல் 16 வயதுடைய எட்டு பெண்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்துவிட்டார். நேற்று முன் தினம், வான்கூவர் தீவிலுள்ள Courtenay நகரில், 16Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சக மாணவி ஒருவரை படுகொலை செய்த மாணவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லிடுக்கில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 17 வயதான ஜெனிபர் வின்க்ளியர் என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த படுகொலை சம்பவத்திற்கு தண்டனையாக ஆயுள் தண்டனையை நீதிமன்றம் விதித்துள்ளதுடன் 12 ஆண்டுகள் வரையில் பரோலில் செல்ல அனுமதி இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 22 வயதானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் வீடொன்றின் உரிமையாளரான பெண் ஒருவர் கடந்த ஏழு ஆண்டுகளாக கூடுதல் இயற்கை எரிவாயு கட்டணத்தை செலுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இயற்கை எரிவாயு கட்டணம் கூடுதலாக அறவீடு செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவிக்கின்றார். தனது அயலவர்களுக்கான கட்டணத்துடன் ஒப்பீடு செய்யும் போது தமது கட்டணம் கூடுதலாக அறவீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கின்றார். கடந்த ஏழு ஆண்டுகளாக இவ்வாறு குறித்த நிறுவனம் தன்னிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்துள்ளது எனRead More →