Reading Time: < 1 minuteகனடா அரசு புகலிடக்கோரிகையாளர்களை அலைக்கழிப்பது என முடிவு செய்துவிட்டது போலிருக்கிறது. ஆம், பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டுவருகிறது. கனடாவில் அதிக புகலிடக்கோரிக்கையாளர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ள ஒன்ராறியோ மற்றும் கியூபெக் மாகாணங்களின் சுமையைக் குறைப்பதற்காக, பல்லாயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்களை, நாட்டின் வெவ்வேறு மாகாணங்களுக்கு அனுப்ப பெடரல் அரசு திட்டமிட்டுவருகிறது. கனடாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை தற்போதைக்கு 235,825 ஆக உள்ளது. இந்த புகலிடக்கோரிக்கைகளில்Read More →

Reading Time: < 1 minuteகட்சியின் தலைவர் ஜக்மீட் சிங் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த புதிய சட்டமூலத்தில் கார்பன் வரி தொடர்பிலான யோசனைகள் உள்ளடக்கப்படுமா இல்லையா என்பது குறித்து நேரடியான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. காலநிலை மாற்றம் தொடர்பான கொள்கைகளில் லிபரல் மற்றும் கான்சர்வேட்டிவ் கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த இரண்டு கட்சிகளினதும் காலநிலை பாதுகாப்பு கொள்கைகள் ஏற்புடையவை அல்ல என அவர் சுட்டிக்காட்டி உள்ளார். காலநிலை மாற்றத்திற்கு எதிராகRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தின் கிங்ஸ்டன் பகுதியில் பட்டப் பகலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதாக கிங்ஸ்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நபர் ஒருவர் ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தி வருவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது மூன்று பேர் தாக்கப்பட்டு இருந்ததாக பொலிஸார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் சஸ்கட்ச்வான் மாகாணத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். லொயிட்மின்ஸ்டர் பகுதியில் இந்த படுகொலை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கொலைகளுடன் தொடர்புடைய நபர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். எவ்வாறு எனினும் இந்த சம்பவத்தினால் பொது மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை சம்பவம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த முக்கொலை சம்பவத்தில்Read More →

Reading Time: < 1 minuteஎயார் கனடா விமானிகள் அடுத்த வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். எயார் கனடா அல்லது 5,200 எயார் கனடா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எயார் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA), ஞாயிற்றுக்கிழமைக்குள் தமது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. 72 மணிநேர வேலை நிறுத்த அறிவிப்பு காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கப்படலாம். செப்டம்பர் 18 புதன்கிழமைக்குள்Read More →

Reading Time: < 1 minuteஅண்மையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாத சந்தேக நபர் மாணவர் வீசா மூலம் கனடாவிற்குள் பிரவேசித்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த பாகிஸ்தான் பிரஜை கனடாவிற்குள் பிரவேசித்தார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேக நபரை கியூபெக் மாகாண போலீசார் கைது செய்திருந்தனர். நியூயோர்க் நகரம் மீது தீவிரவாத தாக்குதல் நடத்துவதற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டன் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒலிம்பியா கிரசன்ட் பகுதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து கொண்ட பொலிஸார், அந்த இடத்திற்கு விரைந்துள்ளனர். இதன்போது படுகாயம் அடைந்த நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை போலீசார் அவதானித்துள்ளனர். குறித்த நபரை உடனடியாக வைத்தியசாலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சீக்கியர் ஒருவரின் அனுமதியின்றி அவரது தாடி சவரம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. கனடாவின் பிராம்ப்டனில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்துள்ளார், ஜோஹிந்தர் சிங் (Joginder Singh Kaler, 85). ஜோஹிந்தர் சீக்கிய கொள்கைகளை கடுமையாக பின்பற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். சீக்கியர்களின் கொள்கைகளில் ஒன்று தங்கள் தாடியை அவர்கள் மழிக்கக்கூடாது என்பதாகும். ஆனால், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை ஊழியர்கள் ஜோஹிந்தரின் தாடியை மழித்துள்ளார்கள்.Read More →