Reading Time: < 1 minuteகனடாவில் எட்மாண்டன் பகுதியில் போலீசாருக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 28 வயதான தந்தை கொல்லப்பட்டிருந்தார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். 28 வயதான மாத்தியுஸ் அர்கான்ஜெலொ என்ற நபரே இவ்வாறு கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். தனது புதல்வர் தவறு இழைத்திருந்தால், அவரை கைது செய்து இருக்கலாம் என மாத்தியுஸின் தாயார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நீச்சல் குளங்களில் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட பெண் ஒருவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட உள்ளது. மில்டன் பகுதியில் அமைந்துள்ள இரண்டு பொது நீச்சல் குளங்களை குறித்த பின் அசுத்தப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த மாதத்தின் ஆரம்ப பகுதியில் இந்த சம்பவங்கள். குறித்த பெண் நீச்சல் குளத்தில் மலக்கழிவு மற்றும் சாக்லேட் போன்றவற்றை கலந்து நீரை அசுத்தப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ஹால்டன் பிராந்திய பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் தீவிரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நபரின் குடியுரிமையை ரத்து செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 62 வயதான அகமத் முஸ்தபா எல்டிடி என்ற நபரே இவ்வாறு கனடிய குடியுரிமை பெற்றுக் கொண்டுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 26 வயதான முஸ்தபா எல்டிடி என்ற அவரது மகனும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இருந்தார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கிரேக்கத்தில் காணாமல் போய் உள்ளார். கனடாவின் மிஸ்சிசாகா பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கடந்த ஒரு மாதங்களாக காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது உறவினர்கள் இந்த சம்பவம் தொடர்பில் பெரும் கவலை கொண்டுள்ளனர். 38 வயதான பிலிப்பி ஸியாஜா என்ற நபரே இவ்வாறு காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 12ஆம் பிலிப்பி இறுதியாக தொடர்பு கொண்டதாக அவரது உறவினர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தை மேற்கொண்டு தப்பிச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரொறன்ரோ பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர். புட்வய்சர் ஸ்டேஸ் எனும் பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 34 வயதான மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் விபத்தை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் அண்மையில் கூறிய நகைச்சுவை கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மிருக வைத்திய சாலையில் நோயாளர்கள் சிகிச்சை பெறுவது தொடர்பில் அவர் நகைச்சுவை ஒன்றை கூறி இருந்தார். அண்மையில் குயின்ஸ் பாக்கில் பாரிய மிருக வைத்தியசாலை ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார் கனடாவில் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் நிலவிவரும் நெருக்கடி நிலைமையை விமர்சனம் செய்யும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் விமான சேவை ஒன்று தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஜெட் லைன்ஸ் விமான சேவை நிறுவனம் இவ்வாறு தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக இவ்வாறு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கனடாவின் மூன்று விமான சேவை நிறுவனங்கள் ஓராண்டு காலப்பகுதிக்குள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மலிவான விமான சேவையைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கனடாவின் தென் சிம்கோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 19 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குடும்ப பிரச்சினை ஒன்று தொடர்பான சம்பவமொன்றுRead More →

Reading Time: < 1 minuteகாட்டுத்தீ காரணமாக பேரழிவினை சந்தித்த ஜாஸ்பர் நகருக்கு அந்த நகரை சாராதவர்கள் பிரவேசிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த நகரை சேர்ந்தவர்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் முதல் நகருக்கு பிரவேசிக்க முடியும் என அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நகர மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் சிறுவர் நலன்புரி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மாகாணத்தில் சிறுவர் நலன்புரித் திட்டத்திற்காக மத்திய அரசாங்கம் 10 டொலர்களை நாளொன்றுக்கு வழங்குகின்றது. எனினும் இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. குறிப்பாக சிறுவர் நலன் குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு கூடுதல் அளவில் செலவு ஏற்படுவதாக சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் தெரிவித்து வருகின்றன. இவ்வாறான ஒரு பின்னணியில் சிறுவர் நலன்புரிய திட்டங்களுக்கான கொடுப்பினவுRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோவில் அதிரடியாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 158 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீண்ட காலமாக விசாரணை நடத்தப்பட்டு இந்த குற்றவாளி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளி கும்பல் கனடிய தபால் திணைக்களத்தை பயன்படுத்தி போதைப் பொருட்களை ஏனைய மாகாணங்களுக்கு விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த குற்றவாளி கும்பல்கள் தொடர்பில் சுமார் 11 மாதங்களாக கண்காணிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் இளம் தலைமுறையினர் அழுத்தங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னைய தலைமுறையினரை விடவும் தற்போதைய இளைய தலைமுறையினர் பெரும் மன உளைச்சலை எதிர்நோக்குவதாகவும் நிதி ரீதியாக பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. Toronto Foundation charityஎன்ற அறக்கட்டளை அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வயது, இருபதுகளை கொண்ட இளம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரம்டனில் இலங்கை தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். நினைவுத்தூபியை கட்டுவதை தடுத்துநிறுத்தவேண்டும்கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார். பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ளRead More →

Reading Time: < 1 minuteகனேடிய அரசாங்கத்தினால் அண்மையில் புதுப்பிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் அடங்கிய பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளவும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. கனேடிய அரசாங்கம் கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் பட்டியலில் உள்ளடக்கியது. அப்பட்டியல் 5 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். அதற்கமைய இவ்வருடம் ஜுன் மாதம் 7 ஆம் திகதி அப்பட்டியல் மீளப்புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு புதுப்பிக்கப்பட்ட பட்டியலிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெயர் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை வரவேற்புஇந்நிலையில்Read More →

Reading Time: < 1 minuteதமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையாது இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த வருடம் ஒக்டோபர் மாம் 14 ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கப்பல் சேவையானது நாளாந்தம் இடம்பெறும் என கூறப்பட்ட நிலையில் சீரற்ற வானிலை மற்றும் போதியளவான பயணிகள் இன்மையால்Read More →

Reading Time: < 1 minuteரஷ்யப் போருக்குச் சென்ற ஓய்வுபெற்ற இலங்கை இராணுவத்தினர் 05 பேர் உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் உக்ரைன் அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவித்தலை துருக்கியிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு வழங்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய எல்லை வழியாக உக்ரைனுக்குள் நுழைந்த போது உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதேவேளை உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 5 இலங்கையர்களை விடுவிக்க தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சில பகுதிகளில் மரக்கறி, பழங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் மொன்றியால் மேற்கு தீவுகள் பகுதியில் இவ்வாறு மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் உணவு பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு மரக்கறி மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்வது, சவால் மிக்கதாக காணப்படுகின்றது. இந்தப் பகுதி மக்கள் உணவு பாதுகாப்பின்மைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தீவிரவாத சந்தேக நபர்களுக்கு எவ்வாறு கனடிய குடியுரிமை வழங்கப்பட்டது என்பது குறித்து விசாரணை செய்வதற்கு நாடாளுமன்ற குழு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கடந்த மாதம் ரெறான்ரோவில் தீவிரவாத தாக்குதல் நடத்த ஆயத்தமாகி இருந்த இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்திருந்தனர். அகமத் முஸ்தபா எல்டிடி என்ற 62 வயதான நபரும் முஸ்தபா எல்டிடி என்ற அவரது 26 வயதான மகனும் இவ்வாறு ரிச்மண்ட் ஹில் பகுதியில் வைத்து கைதுRead More →