Reading Time: < 1 minute கனடாவில் வீட்டு வாடகை செலுத்தாத குடியிருப்பாளர் ஒருவரினால் வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ள பெண் வாடகை குடியிருப்பாளர் சுமார் 41600 டொலர் வாடகையும் சுமார் 5000 டொலர் நீர் மற்றும் மின்சார கட்டணங்களையும் செலுத்த வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. பெண் ஒருவரே குறித்த குடியிருப்பில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்த பெண் குறித்த வீட்டில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute மிஸஸ் கனடா எர்த் அழகிப் போட்டியில் கேரளாவைச் சேர்ந்த பெண் பட்டம் வென்றுள்ளார். கடந்த மாத இறுதியில் மிஸஸ் கனடா எர்த் 2024 ஆம் ஆண்டுக்கான அழகிப்போட்டியின் இறுதிக்கட்டம் நடைபெற்றது. ‘இளைய தலைமுறைக்கான ஆரோக்கியம் நிறைந்த உடல் மற்றும் மன நலன் மிக்க வாழ்க்கைக்கு யோகாவின் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் இந்த வருட அழகிப் போட்டி நடைபெற்றது. அடுத்ததாக சர்வதேச அழகிப் போட்டிஇதில் கேரள கண்ணூர் பகுதியைச் சேர்ந்த மிலிRead More →

Reading Time: < 1 minute கனடாவின் கியூபெக் மாகாணத்தில் காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தது. குறித்த நபரின் சடலம் பெட்டிஸ்கேன் நதியின் இருந்து மீட்கப்பட்டுள்ளது. டெபி புயல் காற்று காரணமாக குறித்த பகுதியில் மழை வெள்ளம் மற்றும் பலத்த காற்று ஏற்பட்டு இருந்த நிலையில் குறித்த நபர் காணாமல் போயிருந்தார். காணாமல் போயிருந்த முதியவர் மறுநாள் சடலமாகRead More →

Reading Time: < 1 minute வுட்பின் பகுதியில் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காக உயிரிழந்த இளைஞர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அண்மையில் ரொறன்ரோவின் வுட்பின் கடற்கரை பகுதியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார். குறித்த நபர் 21 வயதானவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கியூபக் மாகாணத்தை சேர்ந்த டாசியா மொபொன்கோ என்ற இளைஞரே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது குறித்த நபர் உயிரிழந்துள்ளார். ரொறன்ரோRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துகளினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். சைக்கிள் விபத்து மரணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரையில் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 50 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 12 மரணங்கள்Read More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோவில் குரோத உணர்வின் அடிப்படையில் ரயில் பயணிகள்மீது இரண்டு சிறுமியர் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ரொறன்ரோவின் சென்ட் கிளையர் ரயில் நிலைய பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ரயிலில் பயணித்த சிலர் குரோத உணர்வின் அடிப்படையில் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாக்குதலுக்கு இலக்கானவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலையும் மேற்கொண்ட இருவரும் பதின்ம வயதுடைய சிறுமிகள்Read More →