நோவா ஸ்கோசியாவில் மருத்துவ பணியாளர்கள் போராட்டம்!
Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கோசியா பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டம் ஒன்றை முன்னெடுக்க கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கம் இது தொடர்பிலான எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசாங்கத்திற்கும் சுகாதார பணியாளர்களுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சு வார்த்தைகள் வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இந்த வாரத்தில் பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. நோவா ஸ்கோசியாவில் சுமார் 9000 சுகாதார பணியாளர்கள் தொழிற்சங்கத்தில் அங்கத்துவம் வகிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →