Reading Time: < 1 minute கனடாவின் விமான சேவை ஒன்று தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஜெட் லைன்ஸ் விமான சேவை நிறுவனம் இவ்வாறு தனது சேவையை நிறுத்திக் கொள்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் இவ்வாறு சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடி காரணமாக இவ்வாறு சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. கனடாவின் மூன்று விமான சேவை நிறுவனங்கள் ஓராண்டு காலப்பகுதிக்குள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மலிவான விமான சேவையைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் மற்றும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். கனடாவின் தென் சிம்கோ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் 19 வயதான இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசேட விசாரணை பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குடும்ப பிரச்சினை ஒன்று தொடர்பான சம்பவமொன்றுRead More →

Reading Time: < 1 minute காட்டுத்தீ காரணமாக பேரழிவினை சந்தித்த ஜாஸ்பர் நகருக்கு அந்த நகரை சாராதவர்கள் பிரவேசிக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதேசத்தைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி அந்த நகரை சேர்ந்தவர்கள் மட்டும் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் முதல் நகருக்கு பிரவேசிக்க முடியும் என அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நகர மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute ஒன்றாரியோவில் சிறுவர் நலன்புரி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மாகாணத்தில் சிறுவர் நலன்புரித் திட்டத்திற்காக மத்திய அரசாங்கம் 10 டொலர்களை நாளொன்றுக்கு வழங்குகின்றது. எனினும் இந்த நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல என குற்றம் சுமத்தப்பட்டு வந்தது. குறிப்பாக சிறுவர் நலன் குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு கூடுதல் அளவில் செலவு ஏற்படுவதாக சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் தெரிவித்து வருகின்றன. இவ்வாறான ஒரு பின்னணியில் சிறுவர் நலன்புரிய திட்டங்களுக்கான கொடுப்பினவுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் டொரன்டோவில் அதிரடியாக 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 158 குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நீண்ட காலமாக விசாரணை நடத்தப்பட்டு இந்த குற்றவாளி கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்றவாளி கும்பல் கனடிய தபால் திணைக்களத்தை பயன்படுத்தி போதைப் பொருட்களை ஏனைய மாகாணங்களுக்கு விநியோகம் செய்துள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த குற்றவாளி கும்பல்கள் தொடர்பில் சுமார் 11 மாதங்களாக கண்காணிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் இளம் தலைமுறையினர் அழுத்தங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னைய தலைமுறையினரை விடவும் தற்போதைய இளைய தலைமுறையினர் பெரும் மன உளைச்சலை எதிர்நோக்குவதாகவும் நிதி ரீதியாக பிரச்சனைகளை எதிர் நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் அண்மையில் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. Toronto Foundation charityஎன்ற அறக்கட்டளை அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. குறிப்பாக வயது, இருபதுகளை கொண்ட இளம்Read More →