Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரில் தீவிரவாத தாக்குதல் நடத்த முயற்சித்ததாக தந்தை ஒருவர் மீதும் அவரது மகன் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாரதூரமான பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கு இந்த இருவரும் திட்டமிட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்த திட்டம் முக்கிய கட்டத்தை எட்டி இருந்தது என கனடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் ஜூலை மாத ஆரம்பத்தில் தகவல் கிடைத்ததாகவும் அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். இந்தRead More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேல் நாட்டிற்கான விமான சேவைகளை பல நிறுவனங்கள் ரத்து செய்யத் தொடங்கியுள்ளன. ஈரானில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அரசியல் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், பழி தீர்ப்பது உறுதி என்றே ஈரான் சூளுரைத்துள்ளது. மட்டுமின்றி, ஜூலை 13ம் திகதி ஹமாஸ் படைகளின் ராணுவப் பிரிவு தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கான விமானங்கள் ரத்துஇந்த நெருக்கடியான சூழலில், விமான சேவை நிறுவனங்கள் இஸ்ரேலுக்கான விமானங்களை ரத்து செய்ய தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் போதை மருந்து காரணமாக நாளொன்றுக்கு ஆறு பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணத்தில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் போதை மருந்து பயன்பாடுகள் காரணமாக 1158 பேர் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், இது கடந்த ஆண்டை விடவும் ஒன்பது வீதம் குறைவு என தெரிவிக்கப்படுகிறது. நாள்தோறும் போதை மருந்து பயன்பாடு காரணமாக மரணங்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் போதை மருந்து பயன்பாடு காரணமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் தன்னை சட்டத்தரணி என போலியாக அடையாளப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சில வாரங்களாக குறித்த பெண் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிராந்து உத்தரவினை இந்தப் பெண் தவிர்த்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மெகன் லாலொன்டெ என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலை ஆகுமாறு குறித்த பெண்ணுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த பெண் நீதிமன்ற உத்தரவிற்கு அமையRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஏற்பட்ட காட்டு தீ தொடர்பில் பிரித்தானிய மன்னர், மூன்றாம் சார்ள்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். காட்டுத்தீ பாதிப்பு தொடர்பில் பிரித்தானிய மன்னரும் அவரது பாரியார் கமீலாவும் தங்களது கவலையை வெளியிட்டுள்ளனர். ஜஸ்பர் தேசிய பூங்காவில் ஏற்பட்ட பாரிய காட்டு தீ அனர்த்தம் தொடர்பில் பெரும் கவலை கொண்டுள்ளதாக மன்னர் தெரிவித்துள்ளார். மிக அழகிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஜாஸ்பர் தேசிய பூங்கா பகுதியில் பாரிய காட்டுத்தை ஏற்பட்டு பெரும் அழிவுகள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் தீவிரவாத குற்ற செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் தந்தையும் மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். கனடிய பொலிஸார் குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் கனடிய பொலிஸார் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன விதமான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறித்து தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், கால்கரி நகரில் அமைந்துள்ள ஒரு குழந்தைகள் பகல் நேரக் காப்பகத்தில் துவங்கிய ஒரு மாபெரும் கிருமித் தொற்று 448 பேரை பாதித்தது. கனடாவின் கால்கரி நகரில், ஈ கோலை என்னும் நோய்க்கிருமியின் தொற்றால் 448 பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்களில் 38 பிள்ளைகள் மற்றும் ஒரு பெரியவரின் நிலைமை மோசமானதால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. 23 பேர் பயங்கர சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டார்கள். சிறுநீரகத்திலுள்ளRead More →