Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ கிழக்குப் பகுதியில் தகாத செயலில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த நபர் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வீதிகளுக்கு அருகாமையில் கடந்த ஜூலை மாதம் 3ம் திகதி இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பாதையில் நடந்து சென்ற பெண் ஒருவரை குறித்த நபர் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னணி சிறுவர் தானிய உணவு பொருள் உற்பத்தி நிறுவனம் ஒன்றின் பிரதான உற்பத்திகள் இரண்டை சந்தையில் இருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு கனடிய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது. கெர்பர் பண்டக்குரியை கொண்ட ஓட் பனானா மற்றும் மேங்கோ பேபி சீரியல் உணவு வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உணவு வகையில் ஒருவகை பாக்டீரியா தாக்கம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவை சேர்ந்த நபர் ஒருவர் பொது போக்குவரத்தை பயன்படுத்தி மெக்சிகோவுக்கு பயணம் செய்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து குறித்த நபர் மெக்சிகோ வரையிலான பயணத்திற்கு முழுக்க முழுக்க பொது போக்குவரத்து சாதனங்களை பயன்படுத்தி உள்ளார். வில்லியம் ஹுய் என்ற நபரை இவ்வாறு பொது போக்குவரத்தை மட்டும் பயன்படுத்தி இந்த பயணத்தை முன்னெடுத்துள்ளார். ஒன்பது நாட்கள் சுமார் 3000 கிலோமீட்டர் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். பஸ் மற்றும் ரயில்களை பயன்படுத்தி அவர் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தனியாக விமானத்தை செலுத்தி அனைவரதும் பாராட்டை பெற்றுள்ளார். 14 வயதான அனாயா சொஹைல் என்ற சிறுமியே இவ்வாறு விமானத்தை தனியாக இயக்கி வானில் பறந்துள்ளார். சிறு வயது முதலே விமானத்தை செலுத்த வேண்டும் என்ற ஆர்வம் தமக்கு இருந்ததாக அனாயா தெரிவிக்கின்றார். வானில் விமானங்களை பார்க்கும் தருணங்களில் அவ்வாறு விமானம் ஒன்றை தாமும் இயக்க வேண்டும் என்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிய வீடுகளுக்கு வரிச் சலுகை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண கட்டுமான நிறுவனங்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளன. புதிதாக வீடுகளை நிர்மாணிக்கும் போது அறவீடு செய்யப்படும் வரி தொகையை குறைக்குமாறு கோரப்பட்டுள்ளது. இது வீடுகளை கொல்வனம் செய்பவரின் கொள்வனவு இயலுமையை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 18 கட்டுமான நிறுவனங்கள் கூட்டாக இணைந்து எதிர்வரும் 10 ஆண்டுகால பகுதியில் சுமார் ஒரு லட்சம் புதிய வீட்டு அலகுகளை நிர்மாணிக்கRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை கனேடிய காவல்துறை தேடி வருகின்றனர். 24 வயதான பைஸான் அலி என்பவரே இவ்வாறு பொலிஸாரினால் தேடப்பட்டு வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி குறித்த நபர் வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டு கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தில் ஒருவர் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்து சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் பைஸான் அலிக்கு நீதிமன்றம்Read More →

Reading Time: < 1 minuteதன்னை கனடாவுக்கு வரவழைத்த தன் மனைவியையே கொடூரமாக கொலை செய்தார் இந்தியர் ஒருவர். அவரால் குடும்பமே குலைந்துபோனதாக கருத்து தெரிவித்துள்ளார் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி. 1999ஆம் ஆண்டு, இந்தியாவில் கமல்ஜீத் சிங் என்ற பெண்ணுக்கும், இந்தர்ஜீத் சிங் சந்து என்பவருக்கும் திருமணம் நிகழ்ந்தது. கமல்ஜீத் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Abbotsford நகரில் வாழ்ந்துவந்த நிலையில், இந்தர்ஜீத் கனடாவுக்கு புலம்பெயர்வதற்கு ஸ்பான்சர் செய்தார் அவர். தம்பதியருக்கு முறையே 23 மற்றும் 18Read More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேலுக்கான அனைத்து வகையான பயணங்களையும் தவிர்க்குமாறு கனடிய பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமற்ற பாதுகாப்பு நிலமைகளின் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் உள்ளிட்ட மத்திய கிழக்கு பிராந்திய வலயத்தில் பதற்ற நிலை நீடித்து வருகின்றது. இஸ்ரேல், மேற்குக்கரை மற்றும் காஸா பரப்பில் வசித்து வரும் கனடியர்கள் தங்களது பயண ஆவணங்களை ஆயத்த நிலையில் வைத்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. கனடிய பிரஜைகள்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். ரொறன்ரோவின் வோட்டர்ஸ்பொரன்ட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் குறித்த இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்த இருவரையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகனடிய மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கான செலவுகளுடன் ஒப்பீடு செய்யும் போது அதிக அளவு வரி செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் குடும்பங்கள், பெருந்தொகையை வரிக்காக செலவிடுகின்றனர் என அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பிரேசர் நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் சராசரியாக குடும்பம் ஒன்று தங்களது வருமானத்தில் 43 வீதம் வரையில் வரியாக செலுத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மோன்டன் வடக்கு பகுதியில் பௌத்த தியான மண்டபம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் 50 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சீரற்ற காலநிலை காரணமாக இந்த கூடாரம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பலத்த காற்று காரணமாக குறித்த கூடாரம் இடிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கூடாரத்தில் சுமார் 100 முதல் 200 பேர் வரையில் சம்பவம் இடம்பெற்றபோது இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது. சிலர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் காணாமல் போன பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஒன்றாரியோ மார்க்கம் பகுதியில் குறித்த பெண் காணாமல் போயிருந்த நிலையில் அவரது சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த பெண் காணாமல் போயிருந்தார். யோர்க் பிராந்திய பொலிஸார் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்துந்தனர். மார்க்கம் நகருக்கு நூறு கிலோமீட்டர் வட கிழக்கே காணப்படும் கவர்த்தா நதி பகுதியில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. யிங் ஸஹாங் என்ற 58Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நியூ ஃபவுண்ட்லான்ட் பகுதியில் 19 நாய்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் ஒன்றாரியோவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. மிருக வதையில் ஈடுபட்டதாக குறித்த நபர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். குறித்த நபரின் வீட்டிலிருந்து 19 நாய்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் நாய்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கொல்லப்பட்ட நாய்களில் நாய்க்குட்டிகளும் உள்ளடங்குவதாகRead More →