கனடாவில் துருவக்கரடிகளால் கொல்லப்பட்ட நபர்!
Reading Time: < 1 minuteகனடாவில் ஒரு அசாதாரண நிகழ்வாக, கனேடியர் ஒருவர் துருவக்கரடிகளால் கொல்லப்பட்டுள்ளார். கனடாவுக்கு சொந்தமான Brevoort தீவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. Brevoort தீவில், நாட்டுக்குள் ஏதாவது ஏவுகணைகளோ, விமானங்களோ அத்துமீறி நுழைகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்காக பாதுகாப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பணியாற்றும் ஒரு ஊழியரைத்தான் இரண்டு துருவக்கரடிகள் கொன்றுவிட்டன. விடயமறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மற்ற ஊழியர்கள், அந்தக் கரடிகளில் ஒன்றைக் கொன்றுவிட்டிருக்கிறார்கள். துருவக்கரடிகள் பொதுவாக மனிதர்களைத் தாக்குவதில்லை.Read More →