Reading Time: < 1 minuteகனடாவில் மரங்கள் வளர்க்கப்படுவதனால் மக்கள் நோய்வாய்ப்படும் சாத்தியம் அதிகம் என ஆய்வு தகவல் ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. கனடியர்களில் 25 வீதமானவர்களுக்கு ஏற்படக்கூடிய பருவ கால ஒவ்வாமைக்கு மரங்களின் பால்நிலை ஓர் ஏதுவாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஆண் மரங்கள் பழங்கள் மற்றும் பூக்களை தருவதில்லை என்ற காரணத்தினால் நகரங்களில் அதிக அளவு ஆண் மரங்களை வளர்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. செயற்கையான முறையில் இந்த ஆண்கள் மரங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறெனினும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பகுதியில் வீட்டு அழைப்பு மணியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் தம்பதியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவில் பயன்படுத்தப்படும் அழைப்பு மணியை குறித்த தம்பதியினர் அயலவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அயலவர்களை இழிவுபடுத்தும் வகையில் குறித்த நபர்கள் ஓசை எழுப்பியும் தூற்றியும் உள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் குறித்த தம்பதியினருக்கு 900 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தவறானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரில் வாகன தரிப்பு விதி மீறல் அபராதங்கள் அதிகரிக்கப்பட உள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த அபராத தொகை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக வாகனங்களை தரித்து வைத்திருத்தல், வாகனங்களை தேவை இன்றி நிறுத்தி வைத்திருத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களுக்கான அபராத தொகை அதிகரிக்கப்படும் என ரொறன்ரோ நகர நிர்வாகம் அறிவித்துள்ளது. இவ்வாறு வாகன தரிப்பு தொடர்பிலான அபராதRead More →

Reading Time: < 1 minuteசமீபத்தில் இந்தியாவில் திருமண நிச்சயதார்த்தம் முடித்து கனடா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் கார் விபத்தில் பலியானார். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பட்டியாலா என்னும் இடத்தைச் சேர்ந்த Rashamdeep Kaur (23) என்னும் பெண்ணுக்கு, நான்கு மாதங்களுக்கு முன் தான் இந்தியாவில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. கல்வி கற்பதற்காக நான்கு ஆண்டுகளுக்கு முன் கனடா வந்த Rashamdeep, படிப்பை முடித்து பணி அனுமதி பெற்று பணி செய்துவந்தார். இந்நிலையில், Rashamdeep,Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம் பெற்ற விமான விபத்து சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் மெரிட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் ஒரு விமானியும், ஒரு விமானப் ஒரு பயணியும் உயிரிழந்துள்ளனர். விமான நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தின் இடிபாடுகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விமான விபத்துக்கான காரணங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ நகரில் சுமார் 43 ஆயிரம் டாலர் பெறுமதியான கைக்கடிகாரம் ஒன்றை நபர் ஒருவர் களவாடி சென்றுள்ளார். ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் இந்த திருட்டு சம்பவம் இடம் பெற்றுள்ளது. கைக்கடிகாரத்தை கொள்வனவு செய்வது போன்று ஆபரண கடைக்குள் பிரவேசித்த குறித்த நபர் கடிகாரத்தை களவாடி சென்றுள்ளார். டொரன்டோவின் பே மற்றும் ப்ளூர் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள ஆபரண விற்பனையின் நிலையம் ஒன்றில் இவ்வாறு கைக்கடிகாரம் களவாடப்பட்டுள்ளது. குறித்தRead More →

Reading Time: < 1 minuteநோர்த் யோக்கில் இடம் பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 23 வயதான நபர் ஒருவரே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். ஸ்வானெ பூங்காவில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கி சூட்டு சத்தங்கள் தொடர்பில் பிரதேச மக்கள் போலீசாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் நபர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் இருந்ததாகவும் அவரை வைத்தியசாலையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவில் ஒரு பில்லியன் டொலர் முதலீட்டில் விஞ்ஞான ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது. ஒட்டாவா தேசிய ஆய்வு பேரவையில் இந்த ஆய்வுக்கூடம் அமைக்கப்பட உள்ளது. சமூக அபிவிருத்தி அமைச்சர் ஜின்னா சொட்ஸ் இந்த விடயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஒட்டாவாவின் மொன்றியல் வீதியில் இந்த கட்டடம் ஆய்வு கூடம் உருவாக்கப்பட உள்ளது. விஞ்ஞான ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக இந்த நிலையம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் கார்பன் வெளியீட்டை குறைத்து, பொருளாதாரRead More →

Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், காரில் பயணித்த இருவர் சுடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. வெள்ளிக்கிழமை இரவு, கனடாவின் வான்கூவர் நகரில் இருவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர்கள் பயணித்த வாகனம் வேறு இரண்டு வாகனங்கள் மீது மோதி விபத்து நடந்துள்ளதாகவும் பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார், துப்பாக்கியால் சுடப்பட்ட இருவரில் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அவருக்கு உயிருக்கு ஆபத்து எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேRead More →

Reading Time: < 1 minuteரொன்றோவில் கொள்ளை முயற்சியுடன் தொடர்புடைய இருவரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவி கோரப்பட்டது. பொலிஸார் பொதுமக்களிடம் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி யோங் மற்றும் ஷெப்பர்ட் வீதிகளுக்கு அருகாமையில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் வயது முதிர்ந்த ஒருவரிடம் பாதை ஒன்றைக் குறிப்பிட்டு அதற்கு எவ்வாறு செல்வது என கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பாதையை பற்றி கேட்பது போன்று அருகாமையில் சென்று குறித்த வயோதிபரின் காற்சட்டை மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடிய மகளிர் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பேவ் பிரிஸ்மென் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். தாம் இழைத்த தவறுகளுக்கான பொறுப்பினை ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நியூசிலாந்து அணி பயிற்சியில் ஈடுபட்டபோது ட்ரோன் கேமராக்களை கொண்டு அவர்களின் செயற்பாடுகளை உளவு பார்த்ததாக கனடிய மகளிர் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பேவ் பிரிஸ்மென் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரான்சின் பாரிசில் நடைபெற்றுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். கனடாவின் ஹாலிஃபிக்ஸ் பிராந்தியத்தில் ஆப்பிரிக்வெலி பார்க் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது அருகாமையில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நகரின் மேயர் மைக் சர்வேஷ் தனது கவலையைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிஸிஸாகாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். பிரிட்டானியா மற்றும் மெக்லாகுடின் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனமொன்று மின் கம்பத்தில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மின் கம்பத்தில் மோதுண்ட வாகனம் தீப்பற்றிக் கொண்டதாகவும், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றது என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. ShareTweetPin0 SharesRead More →