Reading Time: < 1 minute பிரித்தானியாவுக்கு குடும்பத்துடன் வந்த கனேடியர் ஒருவர் மாயமாகியுள்ள நிலையில், பொலிசார் அவர் தொடர்பில் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள். கனடாவின் ரொரன்றோவில் வாழ்ந்துவரும் Khaled Omeed (30) இம்மாதம், அதாவது, ஜூலை மாதம் 10ஆம் திகதி பிரித்தானியாவுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார். அவரது குடும்பம் Hounslowவில் தங்கியிருந்த நிலையில், 12ஆம் திகதி அவரும் அவரது குடும்பத்தினரும் Baker Street ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்தபோது, மாலை 6.00 மணியளவில் காணாமல் போனார் Khaled.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த ஆறு மாத காலப்பகுதியில் மோசடியான முதலீட்டு திட்டங்களின் மூலம் சுமார் 148 மில்லியன் டாலர்கள் வரையில் மக்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய மோசடி தவிர்ப்பு நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. பெரும்பாலான முதலீட்டு திட்டங்கள் கிரிப்டோ கரன்சியை அடிப்படையாகக் கொண்டவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒன்றாறியோ மாகாண போலீசார் இந்த முதலீட்டு மோசடிகள் தொடர்பில் எச்சரிக்கை காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பு தொகையை இவ்வாறுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் ஒன்றில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நியூ பிரான்ஸ்விக் மாகாணத்தின் ஷெப்பீல்ட் பகுதியில் இந்த வாகனம் விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த வாகனத்தில் பயணித்த மூன்று பேரும் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வாகனம் மரம் ஒன்றில் மோதி தீப்பற்றிக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வாகன விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பிலான பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்டுகின்றது. உயிரிழந்தவர்களின் ஆள் அடையாளRead More →

Reading Time: < 1 minute இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தாய்லாந்தின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய கொள்கையின்படி, ஒரு சுற்றுலாப் பயணி 60 நாட்களுக்கு விசா இல்லாமல் நாட்டில் தங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே விசா இல்லாமல் தாய்லாந்திற்குள் நுழையும் சுற்றுலாப் பயணிகள் தங்குமிட நிதி மற்றும் திரும்புவதற்கான சான்றுகளை வைத்திருக்க வேண்டும் என்பதுடன், அந்நாட்டின் குடிவரவுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் பாதுகாப்பு செலவுகள் தொடர்பில் அமெரிக்க சபாநாயகர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றின் சபாநாயகர் மைக் ஜான்சன் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். கனடாவின் பாதுகாப்பு செலவு வெட்கப்படும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கனடா குளிர் காய்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எல்லைப் பகுதியில் அமெரிக்கா கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் இதன் காரணமாக கனடா அசம்பந்த போக்காக செயற்பட்டு வருகின்றது எனRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஹமில்டன் பகுதியில் நபர் ஒருவர் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸார் இது தொடர்பிலான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். சுமார் 36 வாகனங்களை குறித்த நபர் வாள் ஒன்றின் மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகன தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளன. வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதுடன் மக்களை தம்முடன் சண்டைக்கு வருமாறு இந்த நபர் அழைத்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 33 வயதான நபர் ஒருவர் மீதுRead More →