Reading Time: < 1 minuteகனடாவில் எதிர்காலத்தில் நடைபெறக்கூடிய அனைத்து வகையான இடைத்தேர்தல்கள் தொடர்பிலும் விசேட கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய புலனாய்வு படையணி இந்த தேர்தல்களை கண்காணிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் இது தொடர்பில் அறிவித்துள்ளது. தேர்தல்களில் வெளிநாட்டு தலையீடு மற்றும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் கண்காணிக்கவும் மதிப்பீடு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. பொது தேர்தல்கள் மட்டுமின்றி இவ்வாறான இடைத்தேர்தல்களின் போதும்Read More →

Reading Time: < 1 minuteபிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் கனடாவின் சார்பில் முதல் தங்கப்பதக்கம் வென்றெடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்டா டெகுச்சி என்ற கனடிய வீராங்கனை இவ்வாறு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 28 வயதான கிரிஸ்டா, ஜூடோ போட்டியில் 57 கிலோ கிராம் எடைப் பிரிவில் இவ்வாறு தங்கம் வென்றுள்ளார். தென்கொரியாவின் ஹு மீமி என்ற வீராங்கனையை வீழ்த்தி கிறிஸ்டா தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கனடாவின் சார்பில் இந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வென்றெடுக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minuteஅண்மையில் வெனிசுலாவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிடுமாறு கனடிய அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த தேர்தலில் ஜனாதிபதி நிக்கலோஸ் மடுரோ மற்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட மரியா கரீனா மச்சாடோ ஆகிய இருவரும் வெற்றியீட்டியதாக பிரகடனம் செய்துள்ளனர். தேர்தலில் ஜனாதிபதி மடுரோ 51 வீத வாக்குகளை பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் பேரவையின் ஒரு தொகுதியினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறு எனினும் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் மரியா வெற்றியிட்டியுள்ளதாக மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் பொலிஸார் ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய உள்ளனர். ஒட்டாவா மற்றும் ரொறன்ரோவில் இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக இந்த இரண்டு நகரங்களிலும் இடம்பெறக்கூடிய வாகன கடத்தல் மற்றும் வாகன கொள்ளைச் சம்பவங்களை தடுக்கவே இவ்வாறு ஹெலிகொப்டர் கொள்வனவு செய்யப்பட உள்ளது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் 134 மில்லியன் டொலர் செலவில் ஐந்து ஹெலிகொப்டர்களை கொள்வனவு செய்ய உள்ளது.Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் இடம்பெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மக்களை திசை திருப்பி திட்டமிட்ட அடிப்படையில் களவாடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான இரண்டு திருட்டுச் சம்பவங்கள் சிசிடிவி காணொளி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. உதவிகள் செய்வது போன்று அருகில் வந்து கவனத்தை திசை திருப்பி பணப்பைகள் போன்றன திருடப்படுவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். உதவுவதற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு இந்திய தம்பதி, சமீபத்தில் ஆல்பர்ட்டாவிலுள்ள ஜாஸ்பர் நகரில் குடியேறினார்கள். எப்படியும் கனடாவில் குடியுரிமை பெற்றுவிடலாம் என் நம்பியிருந்த அவர்களுடைய எதிர்காலம் காட்டுத்தீயால் கேள்விக்குறியாகியுள்ளது. 2023ஆம் ஆண்டு, இந்தியர்களான ரமன்தீப் சிங்கும் (28) அவரது மனைவியான சிம்ரன் சத்வாலும் (28) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள ஜாஸ்பர் நகருக்கு குடிபெயர்ந்தார்கள். 2108ஆம் ஆண்டு ஒரு மாணவராக கனடாவுக்கு வந்த ரமன்தீப், 2021ஆம் ஆண்டு படித்து முடித்து பணி உரிமம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மார்க்கம் பகுதியில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். யோர்க் பிராந்திய போலீசார் இந்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 57 வயதான யீங் ஸாங் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கடந்த 25 ஆம் திகதி இரவு 10.40 மணியளவில் குறித்த பெண்ணை இறுதியாக கண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்டீல்கேஸ் மற்றும் வுட்பீன் வீதிகளுக்கு அருகாமையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வின்னிப்பிக் பகுதியில் சிரேஷ்ட பிரஜை ஒருவர் வசித்து வந்த வீட்டிற்கு மாதாந்த நீர் கட்டணமாக 146000 டாலர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. வழமையாக மாதாந்தம் 118 டாலர்கள் நீர் கட்டண பட்டியலாக தமக்கு கிடைக்கப்பெறும் என அவர் தெரிவிக்கின்றார். எவ்வாறு எனினும் திடீரென தமது நீர் கட்டண பட்டியல் 146000 டாலர்கள் ஆக பட்டியலிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். நீர் பட்டியலை பார்த்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக டொர்டி மாட்டின் என்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தாவரங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பால் பானம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய பொதுச்சுகாதார முகவர் நிறுவனம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. குறித்த பால்பான வகைகளில் லிஸ்ட்டிரியா எனப்படும் ஒருவகை பாக்டீரியா காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய இந்த பாக்டீரியா வகை ஆபத்தானது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் இதுவரையில் மொத்தமாக 18 பேர் இந்த லிஸ்ட்டிரியா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வயது முதிர்ந்தவர்களுக்கு கொடுப்பனவுத் தொகை அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதியவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவில் சிறிய அளவில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. நாட்டில் நிலவிவரும் பணவீக்க நிலைமைகளை கருத்தில் கொண்டு இவ்வாறு தொகை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஜூலை மாத கொடுப்பனவு 2.8 வீதத்தினால் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்கான வயது மூப்பு பாதுகாப்பு நலன்புரி கொடுப்பனவுத் தொகைRead More →