Reading Time: < 1 minuteயாழில் கிராம புற இளைஞர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி பண மோசடி செய்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெகத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள், கிராமப்புற இளைஞர்களை இலக்கு வைத்து, வெளிநாடுகளில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து 30 தொடக்கம் 40 இலட்சம் ரூபாய் வரையில் பணமோசடிகளில் ஈடுபடுகின்றனர். அவர்களின்Read More →

Reading Time: < 1 minuteஇந்திய அமைதிப்படையால் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் புத்தூர் வாதரவத்தையில், இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்து. 1989ஆம் ஆண்டு வாதரவத்தையில் இந்திய அமைதிப்படையினரால் ஒன்பது பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். அவர்களின் நினைவாகவே குறித்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்திய வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அனந்திRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 400 பயணிகளுடன் பிரான்சின் பாரிஸ் நோக்கி பயணித்த விமானம் ஒன்று புறப்பட்டு சில நிமிடங்களில் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டுள்ளது. விமானத்தின் எஞ்சின் ஒன்றில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. டொரன்டோவின் பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் குறித்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானம் ஒன்று இவ்வாறு அவசரமாகRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவிலிருந்து கனடா புறப்பட்ட விமானம் ஒன்றிலிருந்த பயணிகள், விமான நிலையத்துக்கு வந்த ஒரு செய்தியால் திகிலில் உறைந்தார்கள். இந்தியாவின் டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு செவ்வாய்க்கிழமை இரவு, ஏர் கனடா விமானம் ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. 10.50 மணிக்கு விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில், ரொரன்றோ செல்லும் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த செய்தி அறிந்த பயணிகள் திகிலில் உறைந்தனர். உடனடியாக,Read More →

Reading Time: < 1 minuteநீண்ட இடைவெளியின் பின்னர் கனடாவில் வட்டி வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2020ம் ஆண்டில் வட்டிவீதம் குறைக்கப்பட்டது. ஜீ7 நாடுகளில் முதன் முறையாக வட்டி வீதத்தை குறைந்த நாடாக கனடா திகழ்கின்றது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கனடிய மத்திய வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பணவீக்கத்தை இரண்டு வீதமாக பேணுவதற்கான நகர்வுகள் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார். எதிர்வரும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மூன்று பெண்களை பாலியல் ரீதியாக துன்புறத்திய டாக்ஸி சாரதி ஒருவருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த சாரதியான 38 வயதான தானீம் அஸீஸ் என்பவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டாக்ஸியில் வைத்து இவ்வாறு பெண்களை பாலியல் ரீதியாக குறித்த நபர் துன்புறுத்தியுள்ளார். ஒன்றாரியோவின் உச்ச நீதிமன்றினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் மூன்று வெவ்வேறுRead More →

Reading Time: < 1 minuteசட்டவிரோதமாக கனடாவுக்கு வர யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடவுச்சீட்டை சமர்ப்பித்த போது, அதில் காணப்பட்ட படத்தில் வேறுபாடு காணப்படுவதை அவதானித்த அதிகாரிகள் அதனை கணினி பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது குறித்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திருகோணமலை நீதிமன்றினால் தடை விதிக்கப்பட்டவர்Read More →

Reading Time: < 1 minuteCaregiver பணிக்காக கனடா வருபவர்களுக்கு எளிதில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதி கிடைக்கும் வகையில், சில புதிய திட்டங்களை கனடா அரசு அறிவித்துள்ளது. கனேடிய மக்களில் வயதானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருவதைத் தொடர்ந்து, Caregiver பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அடுத்த ஆறு ஆண்டுகளில், சுமார் 9 மில்லியன் கனேடியர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள். அதன் பொருள் என்னவென்றால், அவர்களை கவனித்துக்கொள்ள ஏராளமான பணியாளர்கள் தேவைப்படுவார்கள். இன்னொரு விடயம், ஏற்கனவே Caregiver பணியிலிருப்போரில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் காற்பந்து விளையாடியதன் பின்னர் ஒன்றுகூடியவர்கள் மீது இருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இட்டாபிகொக்கில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணைசம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த அனைவரும் 40 முதல் 60 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. குறித்த பகுதியில் மேலும் இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றுக்கு இடையிலானRead More →

Reading Time: < 1 minuteசட்டவிரோதமான முறையில் கனடிய எல்லை பகுதியிலிருந்து அமெரிக்காவிற்குள் பிரவேசித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க எல்லை பாதுகாப்பு படையினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். நயகரா பிராந்தியத்திலிருந்து குறித்த பின் கால்நடையாக சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச ரயில் பாலத்தின் ஊடாக பெண்ணுருவர் நடந்து செல்வதை அவதானித்த அமெரிக்க எல்லை பாதுகாப்பு பிரிவினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். குறித்த பாலம் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கும் ரயில் பாலம்Read More →