Reading Time: < 1 minuteகனடாவில் இந்த கோடை காலத்தில் வழமைக்கு மாறான அடிப்படையில் கூடுதல் வெப்பநிலையை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த முன் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சராசரியாக கோடைகாலத்தில் காணப்படும் வெப்பநிலையை விடவும் இந்தக் கோடை காலத்தில் கூடுதல் வெப்பநிலை நிலவும் என கனடிய சுற்றாடல் திணைக்களத்தின் வானியல் ஆய்வாளர் ஜெனிபர் ஸ்மித் தெரிவித்துள்ளார். கோடைகால மாதங்களில் தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகரித்து செல்லும் போக்கு பதிவாகும் என அவர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மார்க்கம் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அதிகாலை வேளையில் மார்க்கம் குடியிருப்புத் தொகுதியொன்றில் இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வீட்டிற்கு எதிரில் உள்ள பாதையில் வெற்று தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வாகமொன்று சம்பவத்தில் நின்றதாக தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வீட்டில் சிலர் இருந்தனர் எனRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை மலேசியா சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கான மேலதிக பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளப் பெறுவதற்காக, ஏற்றுமதி சார்ந்த வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. இதற்கு, வலுவான மற்றும் மூலோபாய பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளுடன் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது இலங்கைக்கு இன்றியமையாதது என அரசாங்கம் தெரிவித்துள்ளது இதேவேளை ஆசியா மற்றும் பிராந்திய விரிவான பொருளாதார பங்காளித்துவத்தின் முக்கிய அங்கத்துவRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண் ஒருவர் தனது 107ம் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார். லேக்சோர் பகுதியைச் சேர்ந்த ஒல்கா வைற் என்ற பெண்ணே இவ்வாறு தனது 107ம் பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமாயின் நம்மை நாமே நேசிக்க வேண்டும் எனவும் பராமரிக்க வேண்டுமெனவும் ஒல்கா தெரிவித்துள்ளார். சுத்தமாக காற்றை சுவாசிப்பதாகவும், நாள் தோறும் நாம் விரும்பும் செயற்பாடுகளை செய்ய வேண்டுமெனவும் குறறிப்பிட்டுள்ளார். 1917ம் ஆண்டு உக்ரைனில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் உயிராபத்தான பக்றீரியா தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் பொதுச் சுகாதார அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உயிர் அபத்தை ஏற்படுத்தக் கூடிய பக்றீரியா தொற்று தொடர்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையில் இந்த ஆண்டில் குறித்த பக்றீரியா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பக்றீரியா தாக்கத்தினால் மூளையுறை அழற்சி ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பதின்ம வயதினருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உண்ணுதல் கோளாறுகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடிப்படை மருத்துவ சேவைகளை வழங்கும் போது உண்ணுதல் கோளாறுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் முன்கூட்டியே அடையாளம் காணப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வழமையான மருத்துவ பரிசோதனைகளைப் போன்றே ஏனைய மருத்துவ பரிசோதனைகளின் போதும் உண்ணுதல் கோளாறு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டுமெனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் உளவுத்துறை தலைவர், அமைதியாக இரண்டு முறை இந்தியா சென்று திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்தவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கனடாவில் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணை நடந்துவரும் நேரத்தில், அது தொடர்பான தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக, கனடாவின் உளவுத்துறை தலைவர் இரண்டுமுறை இந்தியா சென்று திரும்பியுள்ளார். கனேடியர் ஒருவர் கனடாவில் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா நாடாளுமன்றத்தில் வெளிப்படையாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்திய இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரது மரணம் பல்வேறு ஊகங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் லூதியானவை சேர்ந்த 28 வயதாகும் யுவராஜ் கோயல் கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்படிப்புக்காகக் கனடா சென்றார். திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கொலைபடிப்பு முடிந்து சேல்ஸ் எக்சிகியூடிவ் வேலையில் சேர்ந்த அவர் சமீபத்தில்தான் குடியுரிமை பெற்று கனடாவிலேயே செட்டில் ஆனார். இந்நிலையில் கடந்த ஜூன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் எட்மாண்டன் பகுதியில் 12 வயதான சிறுவன் ஒருவனை இரண்டு பெண்கள் கடத்த முயற்சித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எட்மோண்டன் போலீசார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இரவு 7.30 மணி அளவில் வீதியில் நடந்து சென்ற சிறுவனை குறித்த பெண்கள் கடத்திச் செல்ல முயற்சித்துள்ளனர். கார்கோ ரக வேன் ஒன்றில் குறித்த சிறுவனை கடத்த முயற்சித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வாகனத்தில் இருந்த ஒரு பெண் வாகனத்தை விட்டு இறங்கி சிறுவனை வாகனத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீதான மக்கள் ஆதரவு பாரியளவு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய லிபரல் கட்சியின் தலைமை பதவிக்கும் பொருத்தமற்றவர் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. நானோஸ் ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. லிபரல் கட்சியின் தலைமை பொறுப்பினை வேறு ஒருவர் ஏற்றுக் கொள்வது பொருத்தமானது என மக்கள் கருத்துRead More →