Reading Time: < 1 minuteஅமெரிக்கா செல்லும் கனடியர்கள் நாய்களை எடுத்துச் செல்வது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க எல்லை பகுதியை கடக்கும் கனடியர்களுக்கு இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்த நடைமுறையை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தரை வழியாக அல்லது வான் வழியாக நாய்களை அழைத்துச் செல்லும் கனடியர்கள் சில சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாய்களுக்கு தடுப்பூசிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடிய முன்னணி விமான சேவை நிறுவன பணியாளர்கள், பணி புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான வெஸ்ட் ஜெட் விமான சேவை நிறுவனத்தில் இவ்வாறு பணி புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. விமான சேவை நிறுவனத்தின் பராமரிப்பு பணியாளர்கள் இவ்வாறு நாளைய தினம் தொழிற்சங்க போராட்டத்தில் குதிக்க உள்ளனர். இதன் காரண காரணமாக வெஸ்ட்ஜெட் விமான சேவை நிறுவனம் சுமார் 40 விமானRead More →

Reading Time: < 1 minuteஈரானின் IRGC இராணுவ படையை தீவிரவாத அமைப்பாக கனடா அறிவித்துள்ளது. பல ஆண்டுகளாக எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஈரான் நாட்டை விட்டு வெளியேறியோரிடமிருந்து வந்த அழுத்தங்களுக்கு பிறகு, கனடா இறுதியாக IRGC-யை ஒரு தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலகளாவிய தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கனடாவின் முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும், இதன் காரணமாக, ஆயிரக்கணக்கான ஈரானிய அதிகாரிகள், உயர் ஐ.ஆர்.ஜி.சி. உறுப்பினர்கள் உட்பட பலர் கனடாவுக்குள் நுழையRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த சம்பவத்தில் நபர் ஒருவர் இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. போலீசார் முன்னெடுத்த விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது. இந்த இரட்டை கொலை மற்றும் தற்கொலை சம்பவங்களின் பின்னணி குறித்து கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி வாக்குமூலம் ஒன்றை அடித்துள்ளார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் நினைவாக கனடிய நாடாளுமன்றத்தில் மௌன மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதனை இந்தியா கண்டித்துள்ளது. கடந்த ஆண்டு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் குருத்வாரா அருகே மர்ம நபர் களால் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவம் தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சுமத்தியதை அடுத்து , இந்தியா-கனடா நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.Read More →

Reading Time: < 1 minute2023ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலுள்ள வங்கி ஒன்றிலிருந்து கனடாவின் ரொரன்றோவுக்கு இரண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் மீது ’பணம் மற்றும் தங்கக்கட்டிகள்’ என குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. கனடாவின் ரொரன்றோ விமான நிலையத்திலுள்ள சரக்குகள் சேமிப்பகத்தில் அந்த பார்சல்கள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன. சிறிது நேரத்தில், தக்க ஆவணங்களுடன் வந்த ஒருவர் அந்த பார்சல்களை தனது ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அன்று இரவு 9.30 மணியளவில், அந்த பார்சல்களைப் பெற்றுக்கொள்ளRead More →

Reading Time: < 1 minuteஇடைத்தேர்தல் முடிவுகள் பொதுத்தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக அமையும் என கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரொறன்ரோவின் தொகுதி ஒன்றில் எதிர்வரும் திங்கள்கிழமை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ரொறன்ரோ சென்ட் போல்ஸ் தொகுதியில் இவ்வாறு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக கருதப்பட முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார். எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் முகநூல் ஊடாக மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின் போது 6000 டொலர்களை இழக்க நேரிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எமென்டா மசோடா சூசா என்ற பெண் இவ்வாறு பணத்தை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முகநூல் சந்தையின் ஊடாக இந்த பெண் பொருட்களை விற்பனை செய்து வந்தார் என தெரிவிக்கப்படுகிறது. 40 டாலருக்கு பொருள் ஒன்றை கொள்வனவு செய்வதாக வாடிக்கையாளர் ஒருவர் அனுப்பிய தகவலை அடிப்படையாகக் கொண்டு குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவ சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். கனடாவின் நோர்த் யோர்க் பிரதேசத்தில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சந்தேக நபர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் உயிரிழந்தவர்களில் இருவர் ஆண்கள் எனவும் ஒருவர் பெண் எனவும் தெரிவிக்கப்படுகிறது. யோக் மில்ஸ் வீதியின் தென்பகுதியில் அமைந்துள்ள டன் மில்ஸ் கட்டிடத் தொகுதிக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நிதி கொடுக்கல்Read More →

Reading Time: < 1 minuteரொறன்ரோ மிருகக்காட்சிசாலையில் அரிய வகை பான்டா குட்டிகள் இரண்டு பிறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிய வகையான சிகப்பு பான்டா குட்டிகளே இவ்வாறு பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சகுரா என்ற பான்டாவிற்கு இந்த இரண்டு குட்டிகளும் பிறந்துள்ளதாக மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. தாய்ப் பான்டாவும் குட்டி பான்டாக்களும் தனித்து விடப்பட்டுள்ளதாகவும் கமரா மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பான்டா குட்டிகளையும் வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாக மிருகக்காட்சிசாலையின் பிரதம நிறைவேற்று அதிகாரிRead More →