Reading Time: < 1 minuteபிரித்தானிய உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸை , இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்றூவ் பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் இன்று (26) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மீள்குடியேற்றம், காணி விடுவிப்பு, தொழில் வாய்ப்புகள், போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. மீள்குடியேற்றRead More →

Reading Time: < 1 minuteஅல்பேர்ட்டா மாகாணத்தின் என்.டி.பி கட்சியின் தலைவராக நாஹீட் நன்ஸீ தெரிவு செய்யப்பட்டுள்ளார். நன்ஸீ, கல்கரியின் முன்னாள் மேயர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி தலைமைப் பதவி குறித்த வாக்கெடுப்பில் நன்ஸீக்கு 86 வீத வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன. கல்கரியைச் சேர்ந்த ஒருவர் அல்பேர்ட்டா மாகாண என்டிபி கட்சிக்கு தலைமை தாங்குவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் தலைமைப் பதவியை வகித்து வந்த ராசெல் நோட்லி பதவி விலகுவதாக ஜனவரி மாதம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஹாலிபெக்ஸ் பகுதியில் அமைந்துள்ள பழமையான கத்தோலிக்க தேவாலயம் ஒன்றை உடனடியாக மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணிகளுக்காக இவ்வாறு தேவாலயத்தை மூடுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. ஹாலிபெக்ஸின் பிரவுன் ஸ்பீக் வீதியில் புனித பத்திரிசியார் தேவாலய கட்டிடம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் காணப்படும் கோபுரம் இடிந்து விழக்கூடிய அபாயத்தை எதிர் நோக்கி உள்ளது. இதன் காரணமாக குறித்த தேவாலயத்தில் பூஜை வழிபாடுகளை நடத்துவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் இந்த தேவாலயத்திற்குள் பிரவேசிப்பதனைRead More →

Reading Time: < 1 minuteடாக்ஸி சாரதிகளுக்கு 143 மில்லியன் டாலர் நட்ஈடு வழங்குமாறு கனடாவின் கியூபெக் மாகாண அரசாங்கத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடிய உச்சநீதி மன்றம் இவ்வாறு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது. கியூபெக் மாகாண அரசாங்கம், டாக்ஸி சாரதிகளின் அனுமதிகளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ரத்து செய்திருந்தது. இந்த தீர்மானத்திற்கு எதிராக டாக்ஸி சாரதிகள் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்தனர். முன்னணி டாக்ஸி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஊபர் நிறுவனத்திற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் டொரன்டோ பகுதியில் வேலை வாய்ப்பு பெற்றுக் கொள்வதற்கு காத்திருப்போருக்கு ஓர் அதிர்ச்சி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய வாழ்க்கையை, புதிய சந்தர்ப்பங்களை, தொழில்சார் வெற்றிகளை ஈட்டிக் கொள்ளும் நோக்கில் கனடாவிற்கு வருகை தரும் பலர் நெருக்கடிகளை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியிடங்களில் இருந்து தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருக்கும் அல்லது விண்ணப்பம் செய்யும் பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்தRead More →

Reading Time: < 1 minuteகனடா செல்லும் ஆசையிலிருந்த இந்தியர் ஒருவர், முன்பின் தெரியாத பெண்ணொருவரின் வார்த்தைகளில் மயங்கி பணம் அனுப்பி ஏமாந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் ஹரியானா மாநிலத்திலுள்ள ஃபரிதாபாத் நகரைச் சேர்ந்தவர் கல்யாண் குமார் குப்தா. தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் குப்தாவுக்கு கனடா செல்ல விருப்பம் உள்ளது. ஃபேஸ்புக்கில் கனடா செல்வது தொடர்பான விளம்பரம் ஒன்றைப் பார்த்த குப்தா, அதில் கொடுக்கப்பட்டிருந்த வாட்ஸ் அப் எண்ணை தொடர்புகொள்ள, ஏஞ்சல் ஆண்டர்சன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் புதிதாக குடியேறும் வெளிநாட்டு பிரஜைகள் சவால்களை எதிர் நோக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வாகன காப்புறுதி கட்டணங்கள் அதிகமாக செலுத்த நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் மாதம் ஒன்றிற்கான வாகன காப்புறுதி கட்டணமாக 300 முதல் 450 டொலர்கள் வரையில் செலுத்த நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடாவிற்குள் புதிதாக குடியேறும் வெளிநாட்டு பிரஜைகள் இவ்வாறு வாகனங்களை செலுத்துவதற்காக கூடுதல் தொகையை செலுத்த நேரிடுவதாக விசனம் வெளியிட்டுள்ளனர். கனடாவில் வாகனம் செலுத்துவது தொடர்பிலானRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மாகாணத்தில் சடலமாக மீட்கப்பட்ட நான்கு பேருக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் உரக்கமான இரங்கல்களை வெளியிட்டுள்ளனர். தென்மேற்கு ஒன்றாறியோவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் சமூக சிந்தனை கொண்ட ஓர் பெண் என புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. தனது சமூகத்திற்காக அயராது உழைத்து தன்னலமற்ற அடிப்படையில் செயற்பட்டவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் ஓர் கரிசனையுடைய தாய்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பணி அனுமதி பெறுவது தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. வெளிநாட்டு பிரஜைகள் பட்டப்பின் படிப்பு தொடர்பான பணி அனுமதியை பெற்றுக் கொள்ள இனி அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய அமெரிக்க எல்லை பகுதியில் இவ்வாறு அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். சில வெளிநாட்டு பிரஜைகள் மோசடியான முறையில் பணி அனுமதியை பெற்றுக் கொள்ளRead More →

Reading Time: < 1 minuteஇலங்கை அரசானது பணவீக்கத்தில் வீழ்ச்சி அடைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் தரவுகளின் அடிப்படையில், இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 2.7% காணப்பட்டதுடன், அது மே 2024 இல் 1.6% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் உணவு வகையின் பணவீக்கம் ஏப்ரல் 2024 இல் 3.3% ஆக இருந்த நிலையில் அது மே 2024 இல்Read More →