கனடாவின் பிரபல சொக்லெட் நிறுவனத்தில் வேலை நிறுத்தம்!
Reading Time: < 1 minuteகனடாவின் பிரபல சொக்லெட் நிறுவனமொன்றில் வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரபல நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனத்தில் இவ்வாறு நூற்றுக் கணக்கான பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இயந்திர பணியாளர்கள், பொதியிடுபவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 461 பேர் இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளனர். ஓய்வூதியம், வாழ்க்கைச் செலவு படி போன்றன தொடர்பிலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ShareTweetPin0Read More →