கனடாவில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 64 பேர் கைது!
Reading Time: < 1 minuteகனடாவில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்றாரியோ மாகாண பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக 348 குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. மாகாணம் முழுவதிலும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 34 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த துஸ்பிரயோக வலையில் சிக்கவிருந்த 30 சிறுவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தின் 27 பொலிஸ் பிரிவுகள் இணைந்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.Read More →