Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் ஐந்து லட்சம் டொலர் பெறுமதியான விலாங்கு மீன் குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன. ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் இந்த மீன் குஞ்சுகள் மீட்கப்பட்டுள்ளன. வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்படவிருந்த மீன் வகைகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. சுமார் 109 கிலோ கிராம் எடையுடைய விலாங்கு மீன் குஞ்சுகள் மீட்கப்பட்டதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். நோவா ஸ்கோஷியாவிலிருந்து சட்டவிரோதமாக மீன்களை பிடித்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய எவரும் முயற்சிக்க வேண்டாம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் வடக்கு கிங்ஸ்டன் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு படகுகள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஸ்பீட் போட் மற்றும் துடுப்பை பயன்படுத்தும் மீன்பிடிப் படகு ஒன்னும் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மொன்றியாலில் இரண்டு சகோதரர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 27 வயதான நபர் ஒருவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 20 மற்றும் 18 வயதான ச்சாட் மற்றும் ஜெய்டன் பினேல் ஆகிய சகோதரர்கள் மீது இவ்வாறு கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. கத்தி குத்துக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். மொன்றியாலில் இந்த ஆண்டில் இடம்பெற்ற 12ம் படுகொலைச் சம்பவம் இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அதிகளவில் கிராக்கி நிலவும் செயற்கை நுண்ணறிவு துறைசார் தொழில்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கனடாவில் குடியேறுவதற்கு திட்டமிடுபவர்கள் மற்றும் கனடாவில் நல்ல சம்பளத்துடன் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கு இந்த தகவல் உதவியாக அமையக் கூடும். எதிர்காலத்தில் மிகவும் கிராக்கி ஏற்படக்கூடிய தொழில்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வாளர், பொறியிலாளர், செயற்கை நுண்ணறிவு தரவு ஆய்வாளர், ரோபோ பொறியியலாளர், செயற்கை நுண்ணறிவு உற்பத்தி முகாமையாளர், இயந்திரக் கற்றல்Read More →

Reading Time: < 1 minuteகாசாவிலிருந்து தப்பி வந்த மருத்துவத்துறை பணியாளரிடம் கனடா அதிகாரிகள் கேட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்துள்ளது. காசாவிலிருந்து தப்பி வந்த மருத்துவத்துறை பணியாளர் ஒருவருக்கு கனேடிய புலம்பெயர்தல் அலுவலர் ஒருவர் அனுப்பிய கடிதம் ஒன்றில், நீங்கள் எப்போதாவது ஹமாஸ் ஆயுதக்குழுவினரில் யாருக்காவது சிகிச்சை அளித்தீர்களா என்றும், உங்கள் பதில், இல்லை என்பதாக அமைந்தால், பின்விளைவுகள் எதையும் சந்திக்காமல், உங்களால் எப்படி அவருக்கு சிகிச்சை மறுக்க முடிந்தது என்பதைக் கூறவும் என கேட்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்தியாவைச் சேர்ந்த பல மாணவர்கள் படித்து வரும் நிலையில், பிரின்ஸ் எட்வர்ட் ஐலேண்ட் (Prince Edward Island) மாகாணம் திடீரென குடியேற்ற விதிகளை மாற்றியுள்ளது. இதன் காரணமாக இங்கு படித்து வரும் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள், இந்தியாவுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி கூறுகையில்,Read More →

Reading Time: < 1 minuteகனடிய மக்களுக்கு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவ் கோரிக்கை விடுத்துள்ளார். எரிபொருளுக்கு இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல், லிபரல் அரசாங்கத்தின் வரிக் கொள்கை குறித்து பொலியேவ் கேள்வி எழுப்பி வருகின்றார். மத்திய அரசாங்கத்தின் எரிபொருள் கட்டணங்கள் தொடர்பில் அவர் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசாங்கத்தினால் அறவீடு செய்யப்படும் கார்பன் வரியைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தாயை கொடூரமான முறையில் கத்தியில் குத்திக் கொன்ற மகன் ஒருவர், நீதிமன்ற விசாரணைகளின் போது கொலை செய்ய நினைக்கவில்லை என கூறியுள்ளார். தமது தாயாரை படுகொலை செய்யும் நோக்கில் கத்தியால் பல தடவை குத்தவில்லை என தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு கனடாவின் ரொறன்ரோவின் டுன்டாஸ் வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. 46 வயதான தமது தாய் தன்னை தொடர்ச்சியாக சித்திரவதை செய்து வந்தார் என 23 வயதானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோயினால் சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். பத்து ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக இவ்வாறு மரணமொன்று பதிவாகியுள்ளது. சிறுமியின் மரணத்தை கனடிய சுகாதார திணைக்களம் உறுதி செய்துள்ளது. ஐந்து வயதுக்கும் குறைந்த சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த சிறுமி ஐந்து வயதுக்கும் கீழ்ப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஒன்றாரியோ மாகாணத்தில் 22 தட்டம்மை நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இதில் 13 பேர் சிறுவர்கள் எனவும் ஏனையவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடா அரசின் ஒரு நடைமுறை, புலம்பெயர் பணியாளர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. கனடாவில் நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிப்போரை, அவர்களுடைய வயது, கல்வி, ஆங்கிலப் புலமை மற்றும் பணி அனுபவம் போன்ற காரணிகளை வைத்து தரவரிசைப்படுத்தும் நடைமுறையே CRS என்னும் நடைமுறை. இரண்டு வாரங்களுக்கொருமுறை, கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, CRS தரவரிசையை வெளியிடுகிறது. அது வெளியிட்டுள்ள புள்ளிகள் அல்லது அதற்கு அதிகமான புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் நிரந்தரக்Read More →