கனடா மொன்றியாலில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல்; 3பேர் பலி
Reading Time: < 1 minuteகனடாவின் மொன்றியாலில் இடம்பெற்ற கத்தி கத்து தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். மொன்றியாலின் பிலாட்டியு மொன்ட் றோயல் போரோவ் (Montreal’s Plateau-Mont-Royal borough) பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ராச்செல் மற்றும் செயின்ட் அன்ட்ரே வீதிகளுக்கு இடையில் குறைந்தபட்சம் பதினைந்து பேர் மோதிக் கொண்டதாக 911 என்ற பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 15, 23 மற்றும் 25 வயதான நபர்கள் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.Read More →