Reading Time: < 1 minuteகனடா பிரிட்டிஷ் கொலம்பியாவில் தசாப்தங்களாக அயல் வீட்டவரின் மின் கட்டணத்தை செலுத்திய பெண் ஒருவர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. கனடிய மின் விநியோக நிறுவனமான ஹைட்ரோ நிறுவனம் மீது குறித்த பெண் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தனது மின்மாணிக்கு பதிலாக மின் விநியோக நிறுவனம் அயலவர் வீட்டு பட்டியலை தமக்கு பல தசாப்தங்களாக வழங்கி வந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. லிஸ் பிக்னெல் கடந்த 2011ம் ஆண்டு மின்சாரக் கட்டணத்தை குறைக்கும்Read More →

Reading Time: < 1 minuteமன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, குறித்த நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவின் M/s Adani Green Energy Limited இனால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு கடந்த 2022 ஆம் ஆண்டு 03 ஆம் மாதம் 07 ஆம் திகதியன்று இடம்பெற்றRead More →

Reading Time: < 1 minuteகனடா குற்றவாளிகளை வரவேற்பதாக இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். சீக்கிய ஆன்மீகத் தலைவர் ஹார்டிப் சிங் நிஜார் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் பின்னணியில் கனடா குற்றவாளிகளுக்கு அடைக்கலம் வழங்குவதாக இந்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டை பிளவுபடுத்தும் சீக்கியர்களின் முயற்சிகளுக்குRead More →

Reading Time: < 1 minuteஇந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் செயல்பாட்டாளர் 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் சர்ரேயில் உள்ள குருத்வாராவுக்கு வெளியே சுட்டுகொல்லப்பட்டார். கனேடிய குடிமகனான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இச்சம்பவத்தினால் இந்தியா – கனடா உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் தற்போது, ஹர்தீப்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நியூ பிரவுன்ஸ்விக் பிராந்தியத்தின் தலைநகரான பிரெட்ரிக்டனில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். வேகமாக பயணித்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிரெட்ரிக்டனின் டக்லஸ் அவன்யூவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வாகனத்தின் சாரதியும் இரண்டு பயணிகளும் விபத்தில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மரத்தில் மோதுண்ட வாகனம் மற்றுமொருRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் காதலுக்கு வயதெல்லை கிடையாது என்பதனை நிரூபிக்கும் வகையிலான திருமண நிகழ்வொன்று பதிவாகியுள்ளது. கனடாவின் சஸ்காடூனில் இந்த திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது. 82 வயதான சூசன் நியுபெல்ட் என்ற பெண் 90 வயதான உல்ரிச் ரிச்டர் என்பரை கரம் பிடித்துள்ளார். ஓராண்டுக்கு முன்னதாக இருவரும் சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருவரும் ஒரே தெருவில் சில வீடுகள் தங்கி வாழ்ந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியதாகவும் இந்த நட்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரபல சொக்லெட் நிறுவனமொன்றில் வேலை நிறுத்தப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரபல நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனத்தில் இவ்வாறு நூற்றுக் கணக்கான பணியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தினால் இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இயந்திர பணியாளர்கள், பொதியிடுபவர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட 461 பேர் இவ்வாறு போராட்டத்தில் குதித்துள்ளனர். ஓய்வூதியம், வாழ்க்கைச் செலவு படி போன்றன தொடர்பிலான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடிய தபால் திணைக்களம் பாரியளவு நட்டத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. திணைக்களத்தின் நிதி நிலைமைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஓராண்டு காலப்பகுதிக்குள் நிதிப் பற்றாக்குறை நிலைமை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டில் கனடிய தபால் திணைக்களம் 748 மில்லியன் டொலர் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளது. முத்திரைகளின் கட்டணங்களை அதிகரிப்பதன் மூலம் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடு செய்ய முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteமனிதாபிமான கண்ணிவெடி குறைப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டைப் பெற்றுள்ளது. மனிதாபிமான கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான சர்வதேச மாநாடு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் 130 நாடுகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுடன், மனிதாபிமான கண்ணிவெடி அகற்றலுக்கான ஜெனீவா சர்வதேச மையம் மற்றும் கண்ணிவெடி நடவடிக்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைப்புக் குழு ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடுRead More →