Reading Time: < 1 minuteகனடியர் ஒருவர் உலகின் முன்னணி இணைய தளமொன்றை நம்பி 7700 டொலரை இழந்துள்ளார். புகிங் டொட் கொம் (Booking.com) இணைய தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்த அதி சொகுசு விடுதியொன்றுக்கு பணம் செலுத்தி இவ்வாறு பணத்தை இழந்துள்ளார். ஒன்றாரியோவைச் சேர்ந்த பெரி குடெ என்ற நபரே இவ்வாறு மோசடியில் சிக்கியுள்ளார். குறித்த இணைய தளத்தில் இந்த ஆரட்ம்ப விடுதிக்கு 9.8 என்ற அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தன. விடுதியின் உரிமையாளருடன் வாட்ஸ்அப் மூலம் தொடர்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வரி கோப்புக்களை பதிவு செய்யாதோருக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்னமும் ஏழு மில்லியன் கனடியர்கள் வரி கோப்புக்களை பதிவு செய்யத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய வருமான முகவர் நிறுவனம் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் சுமார் பத்து வீதமான கனடியர்கள் வரி கோப்புக்களை பதிவு செய்வதே இல்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. மொழிப் பிரச்சினை அல்லது அறியாமை காரணமாக இவ்வாறு வரி செலுத்துவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு வரிக்கோப்புக்களைRead More →

Reading Time: < 1 minuteசமூக ஊடகத்தில் நெக்ஸஸ் (Nexus card) அட்டை பெற முயன்ற கனடிய பிரஜை ஒருவர் மோசடியில் சிக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அடிக்கடி அமரிக்காவிற்கு பயணம் செய்பவர்கள் நெக்ஸஸ் அட்டையை பயன்படுத்துவதன் மூலம் இலகுவாகவும் வேகமாகவும் எல்லையை கடக்க முடிகின்றது. இந்த அட்டையை பெற்றுக் கொள்வதற்கு நேரடியாக நேர்முகத் தேர்வு ஒன்றினை சந்திக்க வேண்டும். எனினும் சில இணைய தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் நெக்ஸஸ் அட்டை தொடர்பில் போலியான செய்திகள்Read More →

Reading Time: < 1 minuteகாசாவின் ராபா நகரம் மீது இஸ்ரேல் படையினர் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு கனடா கண்டனம் வெளியிட்டுள்ளது. லிபரல் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இவ்வாறு தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். பலஸ்தீன மக்கள் அடைக்கலம் பெற்றுக்கொண்ட பிரதானமான இடமாக ராபா காணப்படும் நிலையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவம் கவலையளிப்பதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி தெரிவித்துள்ளார். ராபா நகர் மீதான படையெடுப்பு பெண்கள், சிறுவர்கள் மற்றும் அப்பாவி சிவிலியன்களின் உயிர்களுக்குRead More →

Reading Time: < 1 minuteபெண்ணொருவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன் கனேடிய குடியுரிமை வழங்கப்பட்ட நிலையில், திடீரென அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளதால், கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார் அவர். பல ஆண்டுகளாக கனடாவில் வாழ்ந்துவந்தவரான Nichola என்னும் பெண், கர்ப்பமுற்றதால், கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின்போதும் உதவி செய்ய ஆட்கள் தேவை என்பதால் தனது உறவினர்கள் வாழும் ஜமைக்கா நாட்டுக்குச் சென்றுள்ளார். 1991ஆம் ஆண்டு, அவருக்கு ArielleRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சாலை விபத்தில் இந்தியர்கள் உட்பட மூன்று பேர் பலியான விடயத்தில் அதிரவைக்கும் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கனடாவில், கடந்த மாதம், அதாவது, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, மதுபானக்கடை ஒன்றில் திருடியதாக சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவரை பொலிசார் துரத்த, அவர் வேன் ஒன்றில் தப்பியோட, அவரது வேன் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், காரில் பயணித்த, இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையைச் சேர்ந்த மணிவண்ணன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவாவின் எல்மிரட்ஜ் கார்டன் குடியிருப்பை சேர்ந்த மக்கள் எலித் தொல்லையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரிய எண்ணிக்கையிலான எலிகள் தங்களது குடியிருப்பினை ஆக்கிரமித்துள்ளதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். எலிகளை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே எலிகளை கட்டுப்படுத்துவதற்கு நகராட்சியின் உதவியை இந்த மக்கள் நாடியுள்ளனர். கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். ஆயிரக் கணக்கான டொலர்கள் பெறுமதியான சொத்துக்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகத்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மாணவர்கள் மத்தியில் சட்டவிராத சூதாட்ட நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இளைஞர்களை இலக்கு வைத்து இணைய வழியில் சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ பொலிஸார் இந்த விடயம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஒன்றாரியோவின் ஒரில்லா நகரில் மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இணைய வழியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணம் செலுத்த தவறிய மாணவர்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. Topbets என்ற இணைய தளத்தின் வழியாக இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் அண்மையில் வீதி விபத்தில் உயிரிழந்த மூன்று மாத சிசுவின் பெற்றோர் உருக்கமான ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். கோகுல்நாத் மணிவண்ணன் மற்றும் அஸ்விதா ஜவாஹர் தம்பதியினர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளனர். பிள்ளையையும் பெற்றோர் ஆகிய மூன்று பெறுமதி மிக்க உயிர்களை இழந்து தவிப்பதாகத் தெரிவித்துள்ளனர். வீடு முழுவதிலும் மூன்று மாத மகனின் நினைவுகள் பரவிக் கிடப்பதாகவும் வீட்டுக்குள் செல்லும் தைரியமில்லை எனவும் தெரிவிக்கின்றனர். குறுகிய காலத்தில் விலைமதிப்பற்ற நினைவுகளைRead More →