Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இத்தாலி மற்றும் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார். இத்தாலியில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜீ7 நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் ட்ரூடோ பங்கேற்க உள்ளார். ஜனநாயகத்தின் முக்கியத்துவம், நியாயமான பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு தலையீடுகளுக்கு எதிராக போராடுதல் ஆகியன குறித்து பிரதமர் ட்ரூடோ இந்த மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்த உள்ளார். உக்ரைன் – ஹமாஸ் விவகாரம் தொடர்பில் ஏனைய நாடுகளின் தலைவர்களுடன்Read More →

Reading Time: < 1 minuteசுமார் 700 இந்திய மாணவர்களுக்கு போலி அனுமதி ஆஃபர் கடிதங்களைக் கொடுத்து கனடாவுக்கு அனுப்பிய நபர், தன் தவறுக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஜலந்தரில் அமைந்துள்ள, ப்ரிஜேஷ் மிஸ்ரா (Brijesh Mishra, 37) என்பவர் நடத்தும் Education Migration Services என்ற அமைப்பில், ஆளுக்கு 16 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலுத்தி கனடாவில் கல்வி கற்பதற்காக, கல்வி விசாவுக்கு விண்ணப்பித்தார்கள் 700 மாணவர்கள். அவர்கள் கனடாவில் படிப்பை முடித்து,Read More →

Reading Time: < 1 minuteகனடியர்கள் பாரிய அளவு கடன் தொகையை செலுத்த வேண்டி இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது. ட்ரான்ஸ் யூனியன் என்னும் நிறுவனத்தினால் இந்த கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாகனம், அடகு கடன் மற்றும் கடன் அட்டை போன்றவற்றிற்காக செலுத்தப்பட வேண்டிய மொத்த கடன் தொகை 2.4 ட்ரில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் கடன் அட்டை பயன்படுத்தும் கனடியர்களில் 10 வீதமானவர்கள் மாதாந்த குறைந்தபட்ச தொகையை மட்டும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் நிசான் ரக வாகனங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நிசான் கனடா நிறுவனம் இந்த எச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. நிசான் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில வாகனங்களை மீள பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது. சுமார் 48000 வாகனங்கள் இவ்வாறு மீள பெற்றுக் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. வாகனத்தில் காணப்படும் ஏர் பேக்களில் (AirBags) காணப்படும் குறைபாடுகள் காரணமாக இவ்வாறு சில மாடல் வாகனங்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக் குடியுரிமையைக் கைவிட்டு சென்றவர்கள், இலங்கை பூர்வீகத்தை கொண்டவர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமையை கொண்டவர்களுக்கு இலங்கையின் நிரந்தர வதிவிடத்தை பெற்றுக்கொள்ள புதிய சரத்துக்கள் அடங்கிய வர்த்தமானி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட நபர் அல்லது குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 19, 20 அல்லது 21 இன் கீழ் குடியுரிமை நிறுத்தப்பட்டவர் அல்லது வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டவர்கள், 6 மாதங்களுக்குப் பின்னர்Read More →

Reading Time: < 1 minuteமே மாதம் முதலாம் திகதி முதல் 26 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 96,890 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 881,541 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். அத்தோடு, மே மாதத்தின் முதல் 26 நாட்களில் 28.1 சதவீதமான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியாவில் இருந்து 27,274Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உண்ணிகள் காரணமாக லைம் என்ற நோய் பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தில் வழமையை விடவும் இம்முறை லைம் நோய்த் தொற்று அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவில் சுமார் 13 உண்ணி வகைகள் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது. கோடை காலங்களில் குறிப்பாக பூச்சியம் பாகையை விடவும் கூடுதலான வெப்பநிலை நிலவும் போது இந்த வகை உண்ணிகள் பரவத் தொடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உண்ணிகள் கடிக்கும் அனைவரும் நோய் வாய்ப்படுவதில்லை எனவும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அரசியல்வாதிகள் மீதான துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசியல்வாதிகளை இலக்கு வைத்து இவ்வாறு துன்புறுத்தல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நகராட்சி உறுப்பினர்கள் முதல் பல்வேறு பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் இவ்வாறு அச்சுறுத்தல்களையும் துன்புறுத்தல்களையும் எதிர்நோக்கி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கையை இலக்கு வைத்தும் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக அரசியல்வாதிகள் மீதான அழுத்தங்கள் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அரசியல்வாதிகள் எதிர்நோக்கும் இவ்வாறான நெருக்குதல்களுக்கு தீர்வு வழங்கும் திட்டங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் அதிக எண்ணிக்கையிலான திருட்டு சம்பவங்கள் இடம் பெறுவதாக சில்லறை வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களினால் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் சவால்களை எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவித்துள்ளனர். ஓராண்டு காலப்பகுதியில் சில்லறை வியாபார நிலையங்களில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்களின் காரணமாக சுமார் ஐந்து பில்லியன் டாலர்கள் வரையில் நட்டம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய சில்லறை வர்த்தக நட்ட தடுப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பியர்சன் விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் டெல்லி நோக்கிப் புறப்பட்ட விமானமொன்று அவசரமாக மீண்டும் கனடா விமான நிலையம் திரும்பியுள்ளது. எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானமொன்று இவ்வாறு அவசரமாக திரும்பியுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக இவ்வாறு திரும்பியுள்ளது. எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான AC042 என்ற விமானமே இவ்வாறு மீண்டும் கனடா திரும்பியுள்ளது. விமானம் புறப்பட்டு சில நிமிடங்களில் இந்தRead More →