Reading Time: < 1 minuteஇஸ்ரேலின் மீது ஈரானிய படையினர் நடத்திய தாக்குதல்களை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வன்மையாக கண்டித்துள்ளது. பிரதமர் ட்ரூடோ இந்த கண்டனத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலான மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் போர் ஏற்படக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல்களின் மூலம் ஈரானிய அரசாங்கம் பிராந்திய வலயத்தின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் உதாசீனம் செய்வது புலனாகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மருத்துவமனையில் இடமில்லை, கோஸ்டாரிகாவில் சிக்கித் தவிக்கும் கனடியர்! கனடாவில் மருத்துவமனை வசதியில்லா காரணத்தினால், ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் கொஸ்டாரிக்காவில் நிர்க்கதியாகியுள்ளார். கொஸ்டாரிக்காவில் திடீரென உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட ஒன்றாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார். ஒன்றாரியோவின் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவமனை படுக்கைகளுக்கு (hospital beds) பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவின் கலாபோகி பகுதியைச் சேர்ந்த கிரான்ட் றைஸ் என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். 69Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வான்கூவார் சானிச் பகுதியில் மலைச்சிங்கமொன்று சுற்றித் திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சானிச் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வீடொன்றின் கொள்ளைப்புறத்தில் மலைச் சிங்கத்தை கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்ற போதிலும் மலைச் சிங்கத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த சிங்கம் அடுத்து எங்கு சென்றது என்பது பற்றிய தெரியவில்லை எனவும் இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைச் சிங்கம் பூனைRead More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவின், ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எயார் கனடா விமானம் உள்ளுர் நேரப்படி நேற்றைய தினம் பிற்பகல் 4.25 மணிக்கு பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 24 வயதான இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்வி பயின்று வரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான சிரங் அன்டில் என்ற மாணவனே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவின் வென்கவெர் நகரில் தங்கி கல்வி பயின்று வரும் சிரங் அன்டில் நேற்று முன் தினம் வென்கவெர் நகரின் கிழக்கு 55வது அவன்யூ பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணங்களில் கடுமையான வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் ஆறுகள் வற்றி வருவதாக காணப்பட்டுள்ளது. மாகாணத்தின் ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிகளில் அதிகளவில் இவ்வாறு வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இம்முறை வறட்சி நிலவி வருகின்றது. மாகாணத்தில் நிலவிவரும் வறட்சி நிலைமையானது மக்களின் இயல்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் திருடப்பட்ட வாகனங்களை வாடகைக்கு விட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மிஸ்ஸிசாகாவில் இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய போது களவாடப்பட்ட 22 வாகனங்கள் இவ்வாறு வாடகைக்கு விடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. போலி இலக்கத்தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைகளின் போது களவாடப்பட்ட 22 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவற்றின் பெறுமதி 1.6 மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 86000 டொலர்களை இழந்துள்ளார். கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் விசாரணையாளர் என்ற போர்வையில் சிலர், இந்தப் பெண்ணை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கு ஊடாக நிதிச் சலவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அஞ்சிரா என்ற பெண்ணே சம்பவத்தில் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார். நிதிச் சலவை நடவடிக்கைகளுக்கு வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்Read More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கனடிய அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமைகளினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாகவும், மேற்கு கரையில் வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிராந்திய வலயத்தின் பாதுகாப்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பெண் ஒருவர் கரடி தாக்கி கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. புளுபெரி காய்களை பறித்துக் கொண்டிருந்த பெண்ணை கரடி தாக்கி கொன்றதாக முன்னதாக கருதப்பட்டது. எனினும் மரண விசாரணைகளின் போது இந்த பெண்ணை கரடி தாக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணை நாய்கள் தாக்கியுள்ளதாக மரபணு பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 54 வயதான பிங் என்றRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் வீடு வாடகைக்கு அமர்த்த காத்திருப்பவர்களுக்கு ஓர் அதிர்ச்சியான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கனடாவின் வாடகைத் தொகை மிகவும் அதிகமான பகுதியாக ரொறன்ரோ பெரும்பாக பகுதி உருமாறும் சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது கனடாவில் மிகவும் வாடகைத் தொகை அதிகமான பகுதியாக வான்கூவர் கருதப்படுகின்றது. இந்த ஆண்டின் இறுதியளவில் ரொறன்ரோ பெரும்பாக பகுதி மிகவும் வாடகைத் தொகை அதிகமான பகுதியாக மாற்றமடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாகRead More →

Reading Time: < 1 minute2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது. இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென Bloomberg சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் தமக்கு சிகிச்சை மறுக்கப்பட்டதாக மெக்ஸிக்கோவைச் சேர்ந்த பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த தமக்கு மருத்துவமனையொன்றில் பிரசவ சிகிச்சை வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எட்மோன்டனில் அமைந்துள்ள றோயல் அலெக்சான்ட்ரா மருத்துவமனையில் இவ்வாறு சிகிச்சை மறுக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 35 வயதான பேர்லா எஸ்ட்ராடா என்ற பெண்ணே இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் தமக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா, இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றிவந்த இந்திய அலுவலர்களின் எண்ணிக்கையை கனடா குறைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது கடந்த ஆண்டு இந்தியா 41 கனேடிய தூதரக அலுவலர்களை வெளியேற்றியதன் தொடர்ச்சியான நடவடிக்கை என கருதப்படுகிறது. இந்தியாவிலுள்ள கனேடிய தூதரக அலுவலகங்களில் பணியாற்றும் கனேடியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், அதற்கேற்ப இந்தியRead More →

Reading Time: < 1 minuteகனடா மனிடோபாவில் முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 33 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 31 வயதான கெவின் பிராவுன் என்ற ஆசிரியருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 14 வயது மாணவி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக குறித்த ஆசிரியர் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டது. இந்த ஆசிரியர் குறித்த சிறுமியின் கூடைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். கடந்த 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் குறித்த ஆசிரியர் இன்ஸ்டகிராம் ஊடாகவும் குறுஞ்செய்திRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடு கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. CIBC வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வீட்டு மனை சந்தையில் பிரவேசிப்பதற்கே தகுதி கிடையாது என கருதுவதாக 76 வீதமான கனடியர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இணைய வழியில் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 70 வீதமானவர்கள் வீட்டு விலை அதிகளவில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர். வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கான பிரதான தடையாக சந்தையில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஐபோன் பயன்படுத்துபவர்கள் நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபோன் 6 மற்றும் ஐபோன் 7 ஆகியனவற்றை பயன்படுத்துவோருக்கு இவ்வாறு 150 டொலர்கள் வரையில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அலைபேசிகளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இவ்வாறு நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுகின்றது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்து 14.4 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பிரிட்டிஸ் கொலம்பியாவின் உச்ச நீதிமன்றினால் இந்தRead More →

Reading Time: < 1 minuteIndiGo விமான சேவை நிறுவனம் இன்று முதல் மும்பை மற்றும் கொழும்புக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளது. அதன்படி, வாரத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த விமான சேவை இடம்பெறும் என IndiGo விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. அத்துடன், இந்த புதிய இணைப்புடன் IndiGo இந்தியாவின் 4 முக்கிய நகரங்களில் இருந்து கொழும்புக்கு வாராந்தம் 30 விமானப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளது. யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே விமானRead More →