Reading Time: < 1 minuteகனடியர்கள் முதலீடுகளில் நாட்டம் காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறான ஓர் நிலைமை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடியர்கள் மத்தியில், வரி மீளளிப்பு கொடுப்பனவுகளை முதலீடு செய்வது வெகுவாக குறைவடைந்துள்ளது. கனடிய இம்பிரியல் வர்த்தக வங்கி முன்னெடுத்த கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. வரிச் செலுத்துகை மீளளிப்பு கொடுப்பனவு தொகையை முதலீடு செய்வது குறித்து வெறும் 10 வீதமான கனடியர்கள் மட்டுமே திட்டமிடுகின்றார்கள் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இளைய தலைமுறையினர் மத்தியில் மார்கப் புற்று நோய்த் தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 20, 30 மற்றும் 40 வயதுகளை உடையவர்கள் மத்தியில் மார்கப் புற்று நோய் அதிகரித்துச் செல்வதாக ஒட்டாவா பல்கலைக்கழக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 1984 – 1988ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2015 முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இளம் வயதுRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவைச் சேர்ந்த நபர் ஒருவர் முதலீட்டு மோசடியில் சிக்கி இரண்டு லட்சம் டொலர்களுக்கு மேல் இழந்துள்ளார். இந்த மோசடியுடன் தொடர்புடைய 24 வயதான அர்விந்தர் சிங் என்ற நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போலி முதலீட்டு வாய்ப்பு குறித்து இந்த நபர் இணைய வழியாக பிரச்சாரம் செய்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இணைய வழியாக பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பெற்றுக்கொண்டு இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலீட்டுக்குRead More →

Reading Time: < 1 minuteகனேடிய மாகாணமொன்றில் சூரிய கிரகணத்தைப் பார்த்த 115 பேருக்கும் அதிகமானோருக்கு, கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவ அமைப்பொன்று தெரிவித்துள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாண, Optometrists என்னும் கண் மருத்துவ துறை சார் அலுவலர்கள் அமைப்பு, (Association of Optometrists, OAO), ஏப்ரல் 8ஆம் திகதிக்குப் பின், கண் பிரச்சினையுடன் 118 பேர் மருத்துவமனைகளுக்கு வந்ததாக தெரிவித்துள்ளது. அவர்கள், விழித்திரை வீக்கம் (Inflammation of the cornea), உலர் கண்கள் மற்றும்Read More →

Reading Time: < 1 minuteஎயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பயணம் செய்த பழங்குடியின தலைவி ஒருவரது தலையங்கியினால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. விமானத்தில் வைத்து விமானப் பணியாளர்கள் குறித்த தலையங்கியை அகற்றியுள்ளனர். பழங்குடியின சமூகத்தின் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்கள் இவ்வாறு தலையங்கி அணிவது வழமையானதாகும். சின்டி வுட்ஹவுஸ் நெபினாக் என்றவரின் தலையங்கியே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது. பழங்குடியினத் தலைவியை அவமரியாதை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த பழங்குடியின தலைவிக்கு ஏற்பட் ஏற்பட்டRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 7 நாடுகளுக்கு இலவச விசா வழங்க, அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக, சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதன்படி இந்தியா, இந்தோனேசியா, ரஷ்யா, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது. மேலும் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்Read More →

Reading Time: < 1 minuteதமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட ‘சிவகங்கை’ கப்பல் மே மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானில் இருந்து சென்னை நோக்கி பயணிக்கவுள்ளது. அங்கு மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், மே மாதம் 11 ஆம் திகதி நாகை மாவட்டத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபடவுள்ளது. மே மாதம் 13ஆம் திகதி தொடக்கம்Read More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை ஜூன் மாதத்தில் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையில் இதனை தெரிவித்தார். இதன்படி அடுத்த கடன் தவணைக்குரிய இரண்டாவது கடன் மீளாய்வை இலங்கை நிறைவு செய்துள்ளது மீளாய்வின் அடிப்படையில் பணியாளர் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வதற்கு முழுமைப்படுத்தப்பட வேண்டிய நிபந்தனைகள் சில காணப்படுகின்றன. சர்வதேச கடன் மறுசீரமைப்புRead More →

Reading Time: < 1 minuteகனடிய விமான சேவையை நிறுவனங்கள் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கூடுதல் எண்ணிக்கையிலான முறைப்பாடு காரணமாக இவ்வாறு முறைப்பாடுகளை பரிசீலனை செய்வதற்கு காலம் தாழ்த்தப்படுவதாக கனடிய போக்குவரத்து ஒழுங்கமைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான சேவை நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் அல்லது பயணிகளுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் கனடிய போக்குவரத்து முகவர் நிறுவனம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சிறிய பணத் தொகை ஒன்றை அனுப்பி வைத்து நூதனமான முறையில் துஸ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய வங்கிகள் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். காதல் உறவிலிருந்து பிரிந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர்புகளை துண்டித்த பின்னர் இவ்வாறு துஸ்பிரயோக சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தொலைபேசி வழியான தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டு முடக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறு வங்கியில் பணம் அனுப்பும் போர்வையில் துன்புறுத்தப்படுவதாகRead More →

Reading Time: < 1 minuteஈரான் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் மொஹமட் ரெஸா அஸ்டியானி உள்ளிட்ட சிலருக்கு எதிராக கனடா தடை விதித்துள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியதனை எதிர்த்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இரண்டு நிறுவனங்கள் இரண்டு பாதுகாப்பு பிரதானிகள் மீது தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி இந்த தடை குறித்து அதிகாரபூர்வ அறிவித்தல் வெளியிட்டுள்ளார். கடந்த 13ம் திகதி ஈரானிய அரச படையினர் இஸ்ரேல் மீது ட்ரோன்Read More →

Reading Time: < 1 minuteவிலைவாசி அதிகம் என்பதற்காக கெட்டுப்போன உணவை வாங்கிச் சாப்பிடாதீர்கள் என்கிறார் கனேடிய நிபுணர் ஒருவர். கனேடியர்கள், Best before date முடிந்த உணவை சாப்பிடுவதுண்டா என்பதை அறிய, ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 வயது முதல் 45 வயது உடையவர்களில் 41 சதவிகிதம்பேர், தாங்கள் கடந்த ஆண்டு Best before date முடிந்த உணவை சாப்பிட்டதாக தெரிவித்தார்கள். 45 வயது முதல் 65 வயது வரையுள்ளவர்களில் 24 சதவிகிதத்தினரும்,Read More →

Reading Time: < 1 minuteஇந்த லொத்தர் சீட்டினை ஒன்றாரியோயின் லேக்பீல்டைச் சேர்ந்த தம்பதியினர் வென்றெடுத்துள்ளனர். லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் வாழ்ந்து வந்த அதே கிராமத்தில் வாழ்வதற்கு உத்தேசித்துள்ளதாக டக் மற்றும் எடின் ஹானோன் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். வீட்டை புனரமைத்து அதே வீட்டில் வசிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அயலர்கள் மிகவும் நல்லவர்கள் எனவும் இந்த கிராமிய வீட்டை விட்டு செல்லும் எண்ணமில்லை எனவும் தெரிவித்துள்ளனர். 70000 டொலர்கள்Read More →