Reading Time: < 1 minuteஇஸ்ரேலின் மீது ஈரானிய படையினர் நடத்திய தாக்குதல்களை கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வன்மையாக கண்டித்துள்ளது. பிரதமர் ட்ரூடோ இந்த கண்டனத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளார். இந்த தாக்குதலான மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதிலும் போர் ஏற்படக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல்களின் மூலம் ஈரானிய அரசாங்கம் பிராந்திய வலயத்தின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் உதாசீனம் செய்வது புலனாகின்றது என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய மக்களை பாதுகாத்துக் கொள்வதற்காகRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோ மருத்துவமனையில் இடமில்லை, கோஸ்டாரிகாவில் சிக்கித் தவிக்கும் கனடியர்! கனடாவில் மருத்துவமனை வசதியில்லா காரணத்தினால், ஒன்றாரியோவைச் சேர்ந்த ஒருவர் கொஸ்டாரிக்காவில் நிர்க்கதியாகியுள்ளார். கொஸ்டாரிக்காவில் திடீரென உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட ஒன்றாரியோவைச் சேர்ந்த நபர் ஒருவர் இவ்வாறு நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார். ஒன்றாரியோவின் அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவமனை படுக்கைகளுக்கு (hospital beds) பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவின் கலாபோகி பகுதியைச் சேர்ந்த கிரான்ட் றைஸ் என்பவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். 69Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் வான்கூவார் சானிச் பகுதியில் மலைச்சிங்கமொன்று சுற்றித் திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சானிச் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வீடொன்றின் கொள்ளைப்புறத்தில் மலைச் சிங்கத்தை கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்ற போதிலும் மலைச் சிங்கத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர். இந்த சிங்கம் அடுத்து எங்கு சென்றது என்பது பற்றிய தெரியவில்லை எனவும் இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைச் சிங்கம் பூனைRead More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேலுக்கான விமான சேவையை ரத்து செய்வதாக எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. கனடாவின், ரொறன்ரோவிலிருந்து இஸ்ரேலின் தெல் அவீவிற்கு பயணம் செய்யவிருந்த விமானம் இவ்வாறு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு எயார் கனடா நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. எயார் கனடா விமானம் உள்ளுர் நேரப்படி நேற்றைய தினம் பிற்பகல் 4.25 மணிக்கு பியர்சன் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் 24 வயதான இந்திய மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் மருத்துவ கல்வி பயின்று வரும் அரியானா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான சிரங் அன்டில் என்ற மாணவனே இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கனடாவின் வென்கவெர் நகரில் தங்கி கல்வி பயின்று வரும் சிரங் அன்டில் நேற்று முன் தினம் வென்கவெர் நகரின் கிழக்கு 55வது அவன்யூ பகுதியில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணங்களில் கடுமையான வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் ஆறுகள் வற்றி வருவதாக காணப்பட்டுள்ளது. மாகாணத்தின் ஆறுகளின் நீர் மட்டம் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடக்கு பகுதிகளில் அதிகளவில் இவ்வாறு வறட்சி நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் பல ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இம்முறை வறட்சி நிலவி வருகின்றது. மாகாணத்தில் நிலவிவரும் வறட்சி நிலைமையானது மக்களின் இயல்புRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் திருடப்பட்ட வாகனங்களை வாடகைக்கு விட்ட நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மிஸ்ஸிசாகாவில் இவ்வாறு களவாடப்பட்ட வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய போது களவாடப்பட்ட 22 வாகனங்கள் இவ்வாறு வாடகைக்கு விடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. போலி இலக்கத்தகடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விசாரணைகளின் போது களவாடப்பட்ட 22 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இவற்றின் பெறுமதி 1.6 மில்லியன் டொலர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் 86000 டொலர்களை இழந்துள்ளார். கனடிய வருமான முகவர் நிறுவனத்தின் விசாரணையாளர் என்ற போர்வையில் சிலர், இந்தப் பெண்ணை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். குறித்த பெண்ணின் வங்கிக் கணக்கு ஊடாக நிதிச் சலவை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அஞ்சிரா என்ற பெண்ணே சம்பவத்தில் பெருந்தொகை பணத்தை இழந்துள்ளார். நிதிச் சலவை நடவடிக்கைகளுக்கு வங்கிக் கணக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்Read More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு கனடிய அரசாங்கம் தமது நாட்டுப் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலுக்கான பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. பிராந்திய வலயத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற பாதுகாப்பு நிலைமைகளினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடிய வெளிவிவகார அமைச்சினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாகவும், மேற்கு கரையில் வன்முறைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிராந்திய வலயத்தின் பாதுகாப்புRead More →