பிள்ளைகளை நிர்க்கதியாக விட்டு விட்டு கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு தாய்மார்!
Reading Time: < 1 minuteகனடாவில் பிள்ளைகளை வீதியில் விட்டுவிட்டு கசினோ விளையாடியதாக இரண்டு தாய்மாருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இரண்டு, ஒன்பது மற்றும் பத்து வயதான சிறார்களே இவ்வாறு கைவிடப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. பெரியவர்களின் மேற்பார்வையின்றி குறித்த மூன்று சிறார்களும் கசினோ விளையாடும் மையத்தின் வாகனத் தரிப்பிடத்தில் விளைடியாடிக் கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது. பிள்ளைகளை நிர்க்கதியாக விட்டு விட்டு கசினோ சூதாட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பெண்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக டர்ஹம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.Read More →