Reading Time: < 1 minuteகனடாவின் ஸ்காப்ரோவில் அமைந்துள்ள மெக்டொனால்ட்ஸ் உணவு கடையொன்றிற்குள் ரக்கூன் ஒன்று உலவும் காணொளி வைரலாகியுள்ளது. பொதுவாக இவ்வாறான ரக்கூன்கள் குப்பை தொட்டிகளில் எஞ்சியிருக்கும் கழிவு வகைகளையே உட்கொள்ளும். எனினும், இந்த ரக்கூன் நேரடியாக கடைக்குச் சென்று உலவும் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. @krinousec #mcdonalds #racoon ♬ original sound – DDT கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் இந்த ரக்கூனை கணொளியாக பதிவிட்டுள்ளனர். கடையில் ஒருவர் பர்கர் ஒன்றை ரக்கூனுக்குRead More →

Reading Time: < 1 minuteஆங்கில மொழியில் கல்வியைத் தொடரும் பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக, ஆங்கில மொழியில் பாடங்களைக் கற்பிக்கக்கூடிய 1,000 ஓய்வுபெற்ற ஆசிரியர்களை 3 வருட ஒப்பந்த அடிப்படையில் விரைவில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவிவுறுத்தியுள்ளார். அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கைக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழு, நேற்று ஜனாதிபதி ரணில்Read More →

Reading Time: < 1 minuteகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ருவன்சந்ர தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”புதிய பயணிகள் முனையத்தில் 30 வெளியேறும் கருமபீடங்கள் நிறுவப்படவுள்ளது. தற்போது காணப்படும் பயணிகள் முனையத்தில் போதுமான இடவசதி இன்மையால் புதிய பயணிகள் முனையத்தை நிர்மாணிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னதாக இதற்கான நிர்மாணப்பணிகளைRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்பி வைப்பதாக 56 இலட்ச ரூபாய் மோசடி செய்த பதுளையை சேர்ந்த நபர் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.பணத்தினை கொடுத்தும் நீண்டகாலமாக தனது பயண ஏற்பாடு தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் , பணம் கொடுத்தவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் பதுளையை சேர்ந்த நபரை கைது செய்து மேலதிக விசாரணைகளைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒட்டாவா நகரில் கொல்லப்பட்ட இலங்கையர் ஆறுபேரில் அமரகூன் முதங்பியயான்சேல ஜீ காமினி அமரகோன்(40) என்பவர் கனடாவிற்கு வந்து இரண்டுமாதங்களே என தெரிவிக்கப்படுகிறது. இவர் தனது நண்பரான தனுஷ்க விக்கிரமசிங்க குடும்பத்துடன் இருந்த நிலையிலேயே கொல்லப்பட்டுள்ளார். தனது குடும்பத்தை வளப்படுத்தும் வகையில்தனது மனைவி மற்றும் 2 பிள்ளைகளை இலங்கையில் விட்டுவிட்டு கனடாவிற்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இலங்கையில் உள்ள தனது குடும்பத்தை வளப்படுத்தும் வகையில் கனடாவில் தன்னை ஒரு தொழில்முனைவோராக நிலைநிறுத்திக்Read More →

Reading Time: < 1 minuteசிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான அரிய கண்டு பிடிப்பு ஒன்றை கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். விபத்துக்கள் மூலமாக ஆண்டு தோறும் சுமார் ஒரு மில்லியன் சிறுவர் சிறுமியர் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் விபத்துக்களினால் ஏற்படக்கூடிய மரணங்களை வரையறுக்கும் நோக்கில் கனடிய மருத்துவர்கள் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளனர். மெய்நிகர் தொழில்நுட்பம்மெய்நிகர் அவசர சிகிச்சைப் பிரிவு தொழில்நுட்பம் ஒன்றைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வங்கி முறையில் பாரிய மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. நிதி தகவல்கள் தொடர்பிலான பூரண கட்டுப்பாட்டை வாடிக்கையாளர்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய மக்கள் மிக இலகுவாக வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலகுவான கொடுக்கல் வாங்கல் முறைமை, தானியங்கி கணக்கீடு மற்றும் வர்த்தக நிதி முகாமைத்துவம் என்பனவற்றைRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் போமன்வில்லேவில்(Bowmanville) கர்ப்பிணி பெண் மற்றும் அவரது துணைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் 28 வயதான ஆராம் காமல் மற்றும் 26 வயதான ரஃபத் அல்சுபைதி ஆகியோர் கடந்த (04.02.2023) ஆம் திகதி அன்று போமன்வில்லேவில் உள்ள அவர்களது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டனர். டர்ஹாம் பிராந்திய பொலிஸார் நலம் விசாரணைக்காக சென்ற போது இந்தRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தங்களது வான் வண்டியை திருத்துவதற்கு 55000 டொலர்களுக்கு மேல் செலவாகும் என அறிந்து கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 2018ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட வேன் வண்டி ஒன்றை பழுதுபார்க்கும் முயற்சியில் இந்த குடும்பம் ஈடுபட்டுள்ளது. 2018 Chrysler Pacifica Hybrid என்ற வாகனமே இவ்வாறு திடீரென செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தின் பெட்டரி மற்றும் என்ஜின் என்பனவற்றை புதிதாக மாற்ற வேண்டியிருப்பதாக மோட்டார் வாகன பழுதுபார்க்கும் நிறுவனம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கூடுதல் எண்ணிக்கையில் சிறைச்சாலைகள் உருவாக்க்பபடும் என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார். ஒன்றாரியோ சிறைச்சாலைகளில் அதிக கைதிகள் தடுது;து வைக்கப்பட்டு;ளதனால் அவற்றில் சனநெரிசல் நிலவுகின்றது. சிறைச்சாலைகளில் நிலவும் சனநெரிசலுக்கு தீர்வு காணும் நோக்கில் கூடுதல் சிறைச்சாலைகள் நிர்மானிக்கப்படும் என முதல்வர் போர்ட் தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதல் எண்ணிக்கையில் சிறைகள் அமைத்து அவர்கள் தடுத்து வைக்கப்படுவர் என குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளை நீண்ட காலத்திற்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் புதிய இந்துக் கோயில் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது. பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் (Prince Edward Island) முதல் தடவையாக இந்து கோயில் ஒன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது. தீவுகளில் வாழ்ந்து வரும் இந்து சமூகத்தினர் கூட்டாக இணைந்து இந்த கோயிலை நிர்மானித்துள்ளனர். இந்த தீவில் இதுவரையில் இந்து கோயில் ஒன்று நிர்மானிக்கப்ப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரின்ஸ் ஒப் எட்வர்ட் தீவுகளில் அதிக எண்ணிக்கையிலான இந்திய குடியேறிகள் வாழ்ந்து வருகின்றனர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பியர் உற்பத்திகளுக்கு மீதான வரி அதிகரிப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பியர் உற்பத்தி மீது அடுத்த மாதம் வரி அதிகரிப்பு அறிவிக்கப்படவிருந்தது. 4.7 வீத வரி அதிகரிப்பு அமுல்படுத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் பணவீக்கம் உள்ளிட்ட காரணிகளை கருத்திற் கொண்டு பியர் உற்பத்தி வரியை தொடர்ந்தும் 2 வீதமாக பேணுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு பியர் உற்பத்தி மீதான வரி அதரிகரிக்கப்படாது என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஅண்மையில் ஒட்டாவாவின் பார்ஹேவன் பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த 6 இலங்கையர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. பார்ஹேவனின் பால்மாடியோ பூங்காவில் இந்த நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தாய் ஒருவரும், நான்கு பிள்ளைகளும் மற்றுமொரு நபரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருந்தனர். பூங்கொத்துக்கள், டெடிபியர்கள் உள்ளிட்ட பொம்மைகள், பலூன்கள் என பல்வேறு பொருட்கள் பூங்காவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவம் சமூகத்தை மட்டுமன்றி நாட்டையும் ஒட்டுமொத்த உலகத்தையும் உலுக்கியதாக கனடியRead More →