Reading Time: < 1 minuteகனடிய வாழ் ஹெய்ட்டி சமூகம், கனடிய அரசாங்கத்திடம் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. தாய்நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காணும் முனைப்புக்களுக்கு உதவுமாறு ஹெய்ட்டி புலம்பெயர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஹெய்ட்டியில் பாரியளவில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நாட்டின் தலைநகரை ஆயுதக் குழுக்கள் ஆக்கிரமித்துள்ளதாக ஹெய்ட்டி புலம்பெயர் சமூகம் குறிப்பிட்டுள்ளது. ஹெய்ட்டி பிரதமர் எரியல் ஹென்றிRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கரிவல் இறைச்சி உற்பத்தி தொடர்பில் புதிய நடைமுறையொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளமை குறித்து கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது. “அமெரிக்காவின் உற்பத்தி” மற்றும் “அமெரிக்காவின் தயாரிப்பு” போன்ற லேபல்களுடன் மட்டுமே இறைச்சி மற்றும் முட்டை வகைகள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் 2026ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அமெரிக்காவிலேயே பிறந்து அமெரிக்காவிலேயே வளர்ந்த மிருகங்களின் இறைச்சிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் உறவினர்கள் மூன்று பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவா காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் ரீஜன்ட் பார்க்கின் டுன்டாஸ் வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். நபர் ஒருவர் தனது மூன்று உறவினர்கள் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மோசடியில் சிக்கிய வங்கி வாடிக்கையாளர் ஒருவர் ஏனையவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கி விசாரணையாளர் என்ற போர்வையில் நபர் ஒருவர் தம்மை ஏமாற்றி பணம் பறித்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். மொன்றியால் வங்கியில் நீண்ட காலம் பணியாற்றிய ஸ்காப்ரோவைச் சேர்ந்த ஏஞ்சலா பெங் என்ற பெண்ணே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். வங்கி விசாரணையாளர் என்ற போர்வையில் விசாரணை நடத்தி பணம் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தம்மிடமிருந்து சுமார் 17,000 டொலர்கள் மோசடி செய்யப்பட்டதாகRead More →

Reading Time: < 1 minuteசென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து வடக்கு மாகாண ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் காணப்படும் சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்டRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞனே விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் இறந்த நபருக்கும், அவரது தாயாருக்கும் கனடாவுக்கான சுற்றுலா விசா கிடைத்துள்ளது. கனடா செல்வதில் விருப்பம் இல்லை ஆனால்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் நோவா ஸ்கோட்டியாவில் குடும்ப வைத்தியருக்காக மக்கள் வருடக் கணக்கில் காத்திருக்க நேரிட்டுள்ளது. மாகாணத்தைச் சேர்ந்த 15000 பேர் கடந்த மூன்று ஆண்டுகளாக குடும்ப வைத்தியர்கள் சேவையை பெற்றுக்கொள்ள காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடும்ப வைத்தியருக்காக காத்திருக்கும் பலருக்கு இதுவரையில் அந்த சேவை கிடைக்கப் பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2021ம் ஆண்டின் பின்னர் குடும்ப வைத்தியருக்காக காத்திருப்போரின் மொத்த எண்ணிக்கை 153373 எனத் தெரிவிக்கப்படுகின்றது. சனத்தொகை அதிகரிப்பு உள்ளிட்ட சிலRead More →

Reading Time: < 1 minuteபிரம்டனில், நபர் ஒருவரை வாகனத்தில் மோதி படுகாயமடையச் செய்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து, பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பிரம்டனின் ஜூலியானா சதுக்கத்திற்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விசாரணைகளின் அடிப்படையில் பிரம்டனைச் சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடிய கலைஞர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் ஒஸ்கார் விருது வென்றுள்ளார். ஹாலிபெக்ஸை பிறப்பிடமாகக் கொண்ட பென் பிரவுட்புட் சிறந்த குறு விவரணத்திற்கான ஒஸ்கார் விருதினை வென்றுள்ளார். 33 வயதான பென் மற்றும் அவரது இணை இயக்குனர் கிறிஸ் போவர்ஸ் ஆகியோர் தி லாஸ்ட் ரிபாயார் ஷொப் (The Last Repair Shop) என்ற குறு விவரணத்திற்காக விருது வென்றுள்ளனர். பாடசாலை மாணவர்களது கருவிகளை இலவசமாக பழுதுபார்க்கும் ஒர் பழுதுபார்க்கும் நிலையத்தைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகைத் தொகை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த பெப்ரவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2193 டொலர்களாக பதிவாகியுள்ளது. கடந்த 2023ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த வாடகைத் தொகையானது 10.5 சதவீத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் பின்னர் வெகுவாக வாடகைத் தொகை அதிகரித்த மாதமாக கடந்த பெப்ரவரி மாதம் கருதப்படுகின்றது. ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் வாடகைத்Read More →

Reading Time: < 1 minuteதன் தந்தை வயதுடைய ஆண் ஒருவருடன் ஆறு ஆண்டுகளாக வாழ்க்கை நடத்திவந்தார் இளம்பெண் ஒருவர். ஆனால், அந்த நபரோ உயிரிழக்கும் முன் தன் சொத்து முழுவதையும் தன் சகோதரிகளுக்கும், தன் முன்னாள் மனைவிக்கும் எழுதிவைத்துவிட்டுச் சென்றுவிட்டார். இப்போது அவர் தனக்குக் கொடுத்த செல்லப்பிராணிக்காக நீதிமன்றத்துக்கு நடையாக நடக்கிறார் அந்த இளம்பெண். கனடாவின் ரொரன்றோவில் வாழும் அலீஷா வர்மா, லியோனார்ட் (Leonard Carvalho) என்னும் நபருடன் ஆறு ஆண்டுகளாக திருமணம் செய்துகொள்ளாமலேRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் மிஸ்ஸிசாகாவில் இடம்பெற்ற தீ விபத்துச் சம்பவமொன்றில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் மேலும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இன்றைய தினம் அதிகாலை வீடு ஒன்றில் இந்த தீ விபத்து பதிவாகியுள்ளது. மிஸ்ஸிசாகாவில் புரொம்ஸ்க்ரோவ் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளது. தீ விபத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்த நாயும் தீ விபத்தில் உயிரிழந்து விட்டதாகவும், பூனை ஒன்றை தீயணைப்புப் படையினர் மீட்டுள்ளனர். ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளுக்கு அதிகளவில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பல பாடசாலைகளில் தொழில்சார் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கியூபெக் மாகாணத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுமார் 8500 ஆசிரியர் பதவி வெற்றிடங்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஆசிரியர் பதவி வகிக்கத் தகமையுடைய தொழில்சார் கற்கை நெறிகளை பூர்த்தி செய்தவர்கள் சில மாகாணங்களில் தங்களது சேவையை வழங்க விரும்புவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் பலRead More →