கனடாவில் பெற்றோரை படுகொலை செய்த மகன்!
Reading Time: < 1 minuteகனடாவில் தனது பெற்றோரை படுகொலை செய்ததாக மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் கென் கெதரீன்ஸ் பகுதி வீடொன்றில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. வயது முதிர்ந்த தம்பதியினரின் சடலங்கள் இவ்வாறு மீட்கப்பட்டிருந்தது. 43 வயதான சீன் ஓவன்ஸ் என்ற நபரை நயகரா பொலிஸார் கைது செய்துள்ளனர். மேரி ஓவன்ஸ் மற்றும் ஹரோல்ட் ஓவன்ஸ் ஆகிய இருவரையும் இந்த நபர் படுகொலை செய்துள்ளார் என குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.Read More →