Reading Time: < 1 minuteகனேடிய நகரமொன்றில், குளிரில் பல மணி நேரம் காத்திருந்து மரணமடைந்த புகலிடக்கோரிக்கையாளரான பெண்ணொருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் திரண்டார்கள். கென்யா நாட்டவரான Delphina Ngigi (46) என்ற பெண், கனடாவில் கால் வைத்து மூன்று நாட்களில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிப்ரவரி மாதம் 17ஆம் திகதி, Mississauga நகரிலுள்ள புகலிடக்கோரிக்கை மையம் ஒன்றை வந்தடைந்துள்ளார், நான்கு குழந்தைகளின் தாயான Delphina. மதியம் ஒரு மணிக்குRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக நாட்டுக்கு வருகைத் தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுமார் 2 வாரங்களில் இரண்டாவது மதிப்பாய்வை முன்னெடுக்கவுள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரையிலான அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் நிறைவு செய்யப்பட்டுள்ள ஏனைய வாக்குறுதிகள்Read More →

Reading Time: < 1 minuteகனடிய பொருளாதாரம் தொடர்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்நோக்கும் என எதிர்வுகூறப்பட்டிருந்தது. எனினும் கடந்த ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சரிவினை சந்திக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் பொருளாதார வளர்ச்சி வேகம் மிகவும் குறைவாகவே பதிவாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டின் பின்னர் முதல் தடவையாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்தளவில் பதிவானது கடந்த 2023ம் ஆண்டில் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நான்காம் காலாண்டு பகுதியில் ஓரளவு பொருளாதாரRead More →

Reading Time: < 1 minuteகனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தாங்கள் நாட்டுக்குள் பிரவேசித்து முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் இவ்வாறு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நல்லதொரு வாழ்க்கையை எதிர்பார்த்து கனடாவிற்குள் பிரவேசித்த குடியேறிகள் அதிருப்தியுடன் வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 35 ஆண்டுகளில் நாட்டில் இடம்பெற்ற குடியேற்றங்கள் தொடர்பிலான ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவிற்குள் பிரவேசித்து ஐந்து ஆண்டுகளுக்குள் சுமார் 5.1 வீதமானவர்கள் வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. குடியேறிகளைRead More →

Reading Time: < 1 minuteஇத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலொனி கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவை ரொறன்ரோவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இத்தாலிய பிரதமர் ரொறன்ரோவிற்கு விஜயம் செய்துள்ளார். இ ரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக்கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார மற்றும் மூலோபாய என்பன தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குடிப்பெயர்வு, பேண்தகு பொருளாதார அவிபிருத்தி, செயற்கை நுண்ணறிவு, புத்தாக்கம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்குவிப்பு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடகுக்கடன் மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு வரையில் இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வீடு கொள்வனவு செய்வோரை ஊக்குவிக்கு;ம நோக்கில் கடந்த 2019ம் ஆண்டில்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் முதன் முதலாக வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த நிவாரணங்கள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை வீடு கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்குவிப்பு இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடகுக்கடன் மற்றும் வீடமைப்பு கூட்டுத்தாபனம் இந்த விடயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தள்ளது. எதிர்வரும் 21ம் திகதி நள்ளிரவு வரையில் இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வீடு கொள்வனவு செய்வோரை ஊக்குவிக்கு;ம நோக்கில் கடந்த 2019ம் ஆண்டில்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கை தாதியர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது இதன்படி இந்த ஆண்டில் நூற்றுக்கும் மேற்பட்ட இலங்கை தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடகசெயலாளர் சஞ்ஜய் நல்லப்பெரும தெரிவித்துள்ளார் இந்த விடயம் தொடர்பாக சவுதி அரேபிய சுகாதார அமைச்சுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார் ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் முதற்கட்டம் கொழும்பில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த உயிர்களைக் கௌரவிக்கும் வகையில் தமிழ் நினைவுச்சின்னத்திற்கான வடிவமைப்புக்கு 3 ஆண்டு கால தாமதத்திற்குப் பின்னர் கனேடிய பிராம்டன் நகர சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தநிலையில் தமிழ் இனப்படுகொலை நினைவகம் 2025ஆம் ஆண்டுக்குள் சிங்குகூசி பூங்காவில் கட்டப்படும் என நகரம் தெரிவித்துள்ளது. 4.8-மீட்டர் உயரமுள்ள துருப்பிடிக்காத எஃகு நினைவுச்சின்னத்தின் இறுதி வடிவமைப்பாக உள்ளதுடன் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் வரலாற்று தாயகத்தின் சுருக்கத்தை கொண்டுள்ளது. சுற்றியுள்ளRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் முன்னாள் பிரதமர் பிறயன் முல்ரொனியின் மறைவிற்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளார். முல்ரொனியின் மறைவுச் செய்தி பெரும் கவலையை ஏற்படுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பெருமைப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக உதவியதாகத் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட ரீதியில் தமக்கு வழங்கிய அறிவுரைகள் மிகவும் பயனுள்ளவை என ட்ரூடோ தெரிவித்துள்ளார். முல்ரொனி மிகவும் கருணையுள்ளம் கொண்டவர் எனவும் நாட்டின் நலனுக்காக அயராது உழைத்தவர் எனவும் தெரிவித்துள்ளார். 1984ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டுRead More →

Reading Time: < 1 minuteகனடா இந்தியா தூதரக உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசலால், கனடாவுக்கு புலம்பெயரும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலக தரவுகள் தெரிவிக்கின்றன. கனடாவில் கொல்லப்பட்ட கனேடியர் ஒருவரின் மரணத்தின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பகிரங்கமாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் எடுத்த நடவடிக்கைகளால், கனடா இந்தியாவுக்கிடையிலான தூதரக உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கனடா இந்தியா தூதரகRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் அடிப்படை உரிமைகள் சுதந்திரம் சட்டத்தின் ஆட்சி ஜனநாயக ஆட்சி முறை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புதிய உத்தேச சட்டங்கள் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் தெரிவித்துள்ளார் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் போன்றவை ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துகின்றன. பாதுகாப்பு படையினருக்கு அதிகளவு அதிகாரங்களை வழங்குகின்றனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சில விமான சேவை நிறுவனங்கள் மலிவு விலையில் விமானக் கட்டணங்களை அறிவித்து வருகின்றன. இவ்வாறு விமான பயணக் கட்டணங்கள் குறைவாக காணப்பட்டாலும் வேறும் வழிகளில் பயணிகளிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் பொதுவாக விமானப் பயணக் கட்டணங்கள் குறைவடைந்துள்ளன. எனினும் மறைமுகக் கட்டணங்கள் குறித்து வாடிக்கையாளர்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில விமான சேவை நிறுவனங்கள் மலிவு விலையில் விமானப் பயணக் கட்டணங்களை அறவீடுRead More →