Reading Time: < 1 minuteகனடாவில் போலி சடடத்தரணிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் இவ்வாறான போலி குடிவரவு சட்டத்தரணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நகரிற்குள் புதிதாக பிரவேசிப்போருக்கு உதவுவதாக கூறி அவர்களிடம் மோசடி செய்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் குடியேறும் எண்ணத்தில் வருகை தரும் குடியேறிகளை இலக்கு வைத்து சட்டவிரோத சட்டத்தரணி கும்பல்கள் இயங்குவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்றியல் சட்டத்தரணிகள் சங்கம் இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு குறிப்பாக குடியேறிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய தேசியக் கொடிகளை எரித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் வான்கூவார் பகுதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு எதிரில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்திய தேசியக் கொடிகளை எரித்தும், வெட்டி சிதைத்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகளவில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிய ஆண்மீகத் தலைவர்களில் ஒருவரான ஹார்டிப் சிங் நிஜார் என்பவர் சர்ரே பகுதியில் ஆலயமொன்றின் அருகாமையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் அறவீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. மாகாணத்தின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் கட்டண அறவீட்டுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாண போக்குவரத்து அமைச்சர் பிராம்பீட் சர்காரியா கட்டண அறவீட்டு தடை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான சட்ட மூலமொன்று அடுத்த வாரம் சட்டமன்றில்Read More →

Reading Time: < 1 minuteகனடா வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், மந்திரிகள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரிகளும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இந்த மாநாட்டின் ஒருபகுதியாக கனடாRead More →

Reading Time: < 1 minuteவயாக்ரா மாத்திரை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றலாம் என கனேடிய மருத்துவர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. தாம்பத்ய உறவில் பிரச்சினை கொண்டவர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வயாக்ரா மாத்திரைகளை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றவும் பயன்படுத்த முடியும் என வெளியாகியுள்ள ஒரு தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய மருத்துவரான Dr. Pia Wintermark என்பவர் தலைமையில் மருத்துவர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளிலிலிருந்து இந்தRead More →

Reading Time: < 1 minuteரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி சிறையில் திடீரென உயிரிழந்த விவகாரத்தில், அதிபர் புடினை ராட்சசன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்துள்ளார். ஒட்டாவா நகரில் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களை அழித்தொழிக்க புடின் எந்த நிலைக்கும் செல்வார் என்றும் ஜனநாயகத்திற்காக போராடிய நவல்னியின் துணிச்சல் அபாரமானது என்றும் தெரிவித்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 47 வயது நவல்னி, நேற்றையதினம் உயிரிழந்ததாக ரஷ்யRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளை முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவர் குறித்த நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இராஜதந்திர விஜயத்தின் போது இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இலங்கை விஜயத்தின் போதுRead More →

Reading Time: 2 minutesகனேடியத் தமிழர் பேரவை (CTC) யின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், அவசரக் கலந்துரையாடல் ஒன்று தமிழ்ச் சமூகக் கரிசனையாளர்களால் Toronto வில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. போருக்குப் பின்னரான காலத்தில், ஈழத்தமிழர் விவகாரம் சார்ந்த கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் முகமாக, கரிசனையுள்ள சமூக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்வாங்கும் முதலாவது கூட்டமாக இக்கூட்டம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்பிரகாரம், உலகத் தமிழர் பேரவையின் (GTF) முன்னெடுப்பிலும்,Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா – கனடாவின் வடகிழக்கே ஹட்சன் பே (Hudson Bay) பகுதியிலுள்ள பனிக்கரடிகளின் உணவுப் பழக்கம் மாறுகிறது. பெரும்பாலான பனிக்கரடிகளின் உடல் எடை வெகுவாகக் குறைந்துள்ளது. நிலப்பகுதிகளில் சில பனிக்கரடிகள் நிறைய உணவுவகைகளைக் கண்டுபிடிக்கின்றன. பெர்ரி பழங்கள், முட்டைகள், கடல் பறவைகள், மலை மான்கள் என ஏராளம். அதற்குப் பனிக்கரடிகள் நிறைய சிரத்தையும் எடுக்கவேண்டும். ஆனால் அவை கண்டெடுக்கும் உணவோ பொருத்தமானதாக இருப்பதில்லை. ஆய்வு செய்யப்பட்ட 20 பனிக்கரடிகளில் 19Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் கடுமையான பனிபொழிவு நிலைமை காரணமாக வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. ரொறன்ரோ பெரும்பாக பகுதியை பனிப்புயல் ஊடறுத்துச் செல்வதாக சுற்றாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பனிமூட்டம் காரணமாக போக்குவரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வடமேற்கு பகுதியில் அதிகளவு பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அநேகமாக இடங்களில் சிறு வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளன. சுமார் 60க்கும் மேற்பட்ட விபத்துக்கள் பதிவானதாக ஒன்றாரியோ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வீதிகள் வழுக்கும்Read More →