Reading Time: < 1 minuteகனடாவுக்குக் கல்வி கற்கச் சென்ற இந்திய மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவரது பெற்றோர், அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்திய அரசின் உதவியை நாடியுள்ளார்கள். கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Conestoga கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்துவந்தவர் ஷேக் முஸாம்மில் அஹமது ( Shaik Muzammil Ahmed, 25). ஹைதராபாதைச் சேர்ந்த ஷேக்குக்கு கடந்த வாரம் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அவர் காய்ச்சலால் அவதியுற்றுவந்த நிலையில், வெள்ளிக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகைத் தொகை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜனவரி மாதம் கனடாவில் சராசரி வாடகைத் தொகை 2196 டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. வாடகைத் தொகை கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் பத்து வீதம் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. Rentals.ca என்ற இணைய தளம் இது தொடர்பிலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி அதிகரிப்பு காரணமாக கனடாவில் வீடுகளின் வாடகைத் தொகை தொடர்ச்சியாக அதிகரிப்பு பதிவாகியுள்ளது. கனடாவில் மிகவும் அதிகமான வாடகைத் தொகைRead More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில், பனிப்பாறை உருகுதல் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றாரியோவின் நோர்த் பே மரினா பகுதியில் பனி படர்ந்த பகுதிகளில் பயணம் செய்யக் கூடிய விசேட ஊர்தி நீரில் மூழ்கியுள்ளது. எனினும், இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர். பனிபடர்ந்த பகுதிகள் பாதுகாப்பானதல்ல தெரிவித்துள்ளனர். குறிப்பாக பனிபடர்ந்த நீர் நிலைகளில் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவினால் மூடப்பட்ட நீர் நிலைகளின் மேற்பரப்பில்Read More →

Reading Time: 2 minutesOn February 16, 2024, Bright Vision Financial Corp and Bright Vision Realty Inc dazzled attendees with their annual Award Gala and Appreciation Night. The event, held at a prestigious venue, served as a platform to honor outstanding achievements within the financial and real estate sectors. Guests were treated to anRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் மூன்று மில்லியன் பறவைகளுக்கு, பறவைக் காய்ச்சல் நோய் பரவுகை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஈஸ்டர் பண்டிகைக் கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டில் பறவைக் காய்ச்சல் தொற்று பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களாக கனடாவில் பறவைக் காய்ச்சல் பரவுகை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் விலங்குப் பண்ணைகளிலும் வர்த்தக ரீதியற்ற பண்ணைகளிலும் வளர்க்கப்படும் பறவைகள் அதிகளவில் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளன. கனடிய உணவு பரிசோதனை திணைக்களம் பறவைக் காய்ச்சல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலி சடடத்தரணிகள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்றியலில் இவ்வாறான போலி குடிவரவு சட்டத்தரணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நகரிற்குள் புதிதாக பிரவேசிப்போருக்கு உதவுவதாக கூறி அவர்களிடம் மோசடி செய்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் குடியேறும் எண்ணத்தில் வருகை தரும் குடியேறிகளை இலக்கு வைத்து சட்டவிரோத சட்டத்தரணி கும்பல்கள் இயங்குவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மொன்றியல் சட்டத்தரணிகள் சங்கம் இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு குறிப்பாக குடியேறிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்திய தேசியக் கொடிகளை எரித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் வான்கூவார் பகுதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு எதிரில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்திய தேசியக் கொடிகளை எரித்தும், வெட்டி சிதைத்தும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அதிகளவில் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீக்கிய ஆண்மீகத் தலைவர்களில் ஒருவரான ஹார்டிப் சிங் நிஜார் என்பவர் சர்ரே பகுதியில் ஆலயமொன்றின் அருகாமையில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வதற்கான கட்டணம் அறவீடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. முதல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது. மாகாணத்தின் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் கட்டண அறவீட்டுக்கு தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாண போக்குவரத்து அமைச்சர் பிராம்பீட் சர்காரியா கட்டண அறவீட்டு தடை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான சட்ட மூலமொன்று அடுத்த வாரம் சட்டமன்றில்Read More →

Reading Time: < 1 minuteகனடா வெளியுறவுத்துறை அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். ஜெர்மனி தலைநகர் முனிச்சில் சர்வதேச பாதுகாப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள், மந்திரிகள் உள்பட பலர் கலந்துகொண்டுள்ளனர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா உள்பட பல்வேறு நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரிகளும் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், இந்த மாநாட்டின் ஒருபகுதியாக கனடாRead More →

Reading Time: < 1 minuteவயாக்ரா மாத்திரை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றலாம் என கனேடிய மருத்துவர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது. தாம்பத்ய உறவில் பிரச்சினை கொண்டவர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வயாக்ரா மாத்திரைகளை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றவும் பயன்படுத்த முடியும் என வெளியாகியுள்ள ஒரு தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனேடிய மருத்துவரான Dr. Pia Wintermark என்பவர் தலைமையில் மருத்துவர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளிலிலிருந்து இந்தRead More →

Reading Time: < 1 minuteரஷ்யா எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி சிறையில் திடீரென உயிரிழந்த விவகாரத்தில், அதிபர் புடினை ராட்சசன் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விமர்சித்துள்ளார். ஒட்டாவா நகரில் ஊடகத்திற்கு பேட்டியளித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ரஷ்ய மக்களின் விடுதலைக்காக போராடுபவர்களை அழித்தொழிக்க புடின் எந்த நிலைக்கும் செல்வார் என்றும் ஜனநாயகத்திற்காக போராடிய நவல்னியின் துணிச்சல் அபாரமானது என்றும் தெரிவித்தார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த 47 வயது நவல்னி, நேற்றையதினம் உயிரிழந்ததாக ரஷ்யRead More →

Reading Time: < 1 minuteஅமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் வர்மா இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கு 6 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். நாளை முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை அவர் குறித்த நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இராஜதந்திர விஜயத்தின் போது இலங்கை உள்ளிட்ட நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் அவர் கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது இலங்கை விஜயத்தின் போதுRead More →

Reading Time: 2 minutesகனேடியத் தமிழர் பேரவை (CTC) யின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், அவசரக் கலந்துரையாடல் ஒன்று தமிழ்ச் சமூகக் கரிசனையாளர்களால் Toronto வில் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்டது. போருக்குப் பின்னரான காலத்தில், ஈழத்தமிழர் விவகாரம் சார்ந்த கனேடியத் தமிழ்ச் சமூகத்தின் கரிசனைகளை வெளிப்படுத்தும் முகமாக, கரிசனையுள்ள சமூக உறுப்பினர்கள் ஒன்றுகூடி, ஆக்கபூர்வமான கருத்துக்களை உள்வாங்கும் முதலாவது கூட்டமாக இக்கூட்டம் அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்பிரகாரம், உலகத் தமிழர் பேரவையின் (GTF) முன்னெடுப்பிலும்,Read More →