Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து அமெரிக்கா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஏர் கனடா விமானம், திங்கட்கிழமை, கனடாவின் ஹாலிஃபாக்ஸிலிருந்து நியூஜெர்ஸியிலுள்ள Newark என்னுமிடம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்திருக்கிறது. மதியம் 12 மணியளவில், அந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போது, அந்த விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அமெரிக்க பொலிசார் தெரிவித்துள்ளார்கள். விமானிகள் அந்த விமானத்தை பாதுகாப்பாக Newark லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்கள். பயணிகள் அனைவரும்Read More →

Reading Time: < 1 minuteகனடா மற்றும் அமெரிக்காவில் மான்களுக்கு ‘ஜாம்பி மான் நோய்’ வேகமாக பரவி வருகிறதாக தெரிவிக்கபப்டுகின்றது. இந்த நிலையில் ஜாம்பி மான் தொற்றுநோய் மனிதர்களையும் பாதிக்க வாய்ப்புள்ளதாக கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்துள்ளனர். ஜாம்பி மான் நோய்ஜாம்பி மான் நோய் என்று அழைக்கப்படும் இந்த நோய் ஒரு நாள்பட்ட விரயம் நோய் (chronic wasting disease). நரம்பியல் தொற்று நோயான இது, விலங்குகளை பாதித்து கொல்லும் தன்மை கொண்டது.Read More →

Reading Time: < 1 minuteசீன சுற்றுலாப் பயணிகளுடன் 50 சொகுசு பயணிகள் கப்பல்கள் பெப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சில கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திலும், மேலும் சில கப்பல்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை துறைமுகங்களில் நங்கூரமிடவுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்தார். இதேவேளை இவ்வருடம் பெப்ரவரி 16ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கைRead More →

Reading Time: < 1 minuteஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மிக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹுசைன் அமீர் அப்துல்லாஹின் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அந்நாட்டுக்கு வருகை தந்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர்,இங்கு இடம்பெற்ற கூட்டு செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteலைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து முதலுதவிப் பயிற்சிகளை இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் நடத்த தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் சங்கம் மற்றும் பிரிகேட் உடன் இணைந்து, முதலுதவிப் பயிற்சிகளை கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் நடத்தியது. லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது சென் ஜோன்ஸ் அம்புலன்ஸ் அமைப்புடன் இணைந்து முதலுதவிப் பயிற்சிகளை இலங்கையின்Read More →

Reading Time: < 1 minuteமார்க்கம் தோர்ன்ஹில் (Markham – Thornhill) தொகுதியில் கொன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் தேர்தலில் தமிழரான லயனல் லோகநாதன் போட்டியிடுகின்றார். கனடிய நாடாளுமன்றத் தேர்தலில், கொன்சர்வேடிவ் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான நியமனத் தேர்தலில் லயனல் லோகநாதன் போட்டியிட முன்வந்துள்ளார். இவர் Markham – Thornhill தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளர் தேர்தலில் போட்டியிடும் அறிவித்தலை வெளியிடும் அறிமுக நிகழ்வு கடந்த வியாழக்கிழமை (Feb 15, 2024) நடைபெற்றது. மார்க்கம் – தோர்ன்ஹில்Read More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாண மாவட்டத்தில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இவ்வாறான நிலையில், கனேடியத் தூதரக அதிகாரிகள் யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரியை நேற்றுச் சந்தித்து அது தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர். யாழில் வெளிநாடு அனுப்புவதாகக் கூறிப் பெறுமதிப்பிலான பணம் மோசடி செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கனடா அனுப்புவதாகக் கூறியே பெரும்பாலான பண மோசடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பண மோசடிகள் தொடர்பான விசாரணைகள்Read More →

Reading Time: < 1 minuteஒன்றாரியோவில் உற்பத்தி செய்யப்பட்ட 800 ட்ரோன்கள் உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நன்கொடையாக இந்த ட்ரோன்கள் வழங்கப்பட உள்ளதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஸ்ய படையினருக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக இந்த ட்ரோன்களன் வழங்கப்பட உள்ளன. சுமார் 95 மில்லியன் டொலர் பெறுமதியான ட்ரோன்கள் இவ்வாறு உக்ரைனுக்கு வழங்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் பில் பிலயர் தெரிவித்துள்ளார். 3.5 கிலோ கிராம் எடையுடை இந்த ட்ரோன்கள் புலனாய்வுத் தகவல் திரட்டல்Read More →

Reading Time: < 1 minuteஇத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் 2ம் திகதி அவர் கனடாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாக கனடிய பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மெலோனி பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டதன் பின்னர் முதல் தடவையாக கனடாவிற்கு விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. உக்ரைன் மற்றும் மத்திய கிழக்கு போர் உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், வீடு ஒன்று தீப்பற்றியதில், அந்த வீட்டிலிருந்த மூன்று குழந்தைகள் உட்பட ஐந்துபேர் பலியான துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கனடாவின் Saskatchewan மாகாணத்திலுள்ள Davidson நகரில் அமைந்துள்ள வீடு ஒன்றில், நேற்று முன்தினம், அதாவது, ஞாயிற்றுக்கிழமை மதியம் தீப்பற்றியுள்ளது. தகவலறிந்து விரைந்துவந்த தீயணைப்புத்துறையினர் அந்த வீட்டிலிருந்த 80 வயது ஆண் ஒருவரையும், 81 வயது பெண் ஒருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, அவர்கள்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடகைக் குடியிருப்பாளர்கள் நிதிநெருக்கடி நிலையையும் தனிமையையும் உணர்வுதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களுடன் ஒப்பீடு செய்யும் போது வாடகைக் குடியிருப்பாளர்களின் வாழ்க்கைத் தரம் குறைவானதாக காணப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மற்றும் 2022ம் ஆண்டு ஆகிய ஆண்டுகளில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகைக் குடியிருப்பாளர்கள் தங்களது நிதி தேவைகளை பூர்த்தி செய்துRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டில் யாருமில்லை என்ற அடிப்படையில் விதிக்கப்பட்ட வரியினால் ஒரு தம்பதியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த தம்பதியினருக்கு எதிர்பாராத விதமாக இவ்வாறு வரி செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வீடுகளை காலியாக வைத்திருப்பவர்களுக்கு மாகாணத்தில் ஓர் வரி அறவீட்டு முறை காணப்படுகின்றது. வேகன்சி வரி என இந்த வரிக்கு பெயரிடப்பட்டுள்ளது. அதாவது வீடுகளை பயன்படுத்தாது வைத்திருப்பவர்களிடமிருந்து இந்த வரி அறவீடு செய்யப்படுகின்றது. எனினும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் வாங்கூவார் தீவுகளைச்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை ஊக்குவிப்பதன் மூலம் இருநாடுகளுக்கிடையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அணுகக்கூடிய இயலுமையை அதிகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், மேம்படுத்தப்பட்ட தொடர்புகள் மூலம் கலாச்சார பரிமாற்றங்கள், கல்வி, சமய, கலாச்சார செயற்பாடுகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களை ஊக்குவிப்பதற்கும் இதன் ஊடாக இயலுமை உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக குறைந்த செலவிலான சுற்றுலா மற்றும் போக்குவரத்துக் கட்டண முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதற்கமையRead More →