Reading Time: < 1 minuteகனடாவில் தட்டம்மை தடுப்பூசி குறித்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் திரேசா டேம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார். நாட்டை வெளியேறுவோர் தட்டம்மை தடுப்பூசிகள் இரண்டு ஏற்றிக் கொண்டதனை உறுதி செய்ய வேண்டுமென கோரப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் போக்கினை பதிவு செய்துள்ளது. வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர் ஊடாக நாட்டிற்குள் தட்டம்மை நோய் பரவுகை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteநாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சரவையின் அனுமதியின்றி வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட வீசா நீடிப்புகளை இரத்து செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பாரியளவில் துப்பாக்கிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் கனடிய பாதுகாப்பு தரப்பினர் இணைந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர். குறித்த விசாரணைகளில் 274 சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆயுதங்கள் கனடாவிலும், அமெரிக்காவிலும் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட ஆயுதங்களில் அதிக எண்ணிக்கையிலானவை கைத்துப்பாக்கிகள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து ஆயுதங்கள் கடத்தும் நடவடிக்கைளில் ஈடுபட்ருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ShareTweetPin0Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்களுக்கும் ஏனையவர்களுக்கும் ஆபத்து ஏற்படுத்தக் கூடிய வகையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களினால் சமூகத்திற்கும், அவர்களுக்கும் பாரிய ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் கியூபெக் மாகாணத்தின் வாடுறுயில் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் தொடர்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. மொஹமட் இம்டியாஸ் என்ற நபர் தனது மனைவிக்குRead More →

Reading Time: < 1 minuteகனடா, சஸ்காடூன் பகுதியில் பெண் ஒருவர் பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அல்பேர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன. வயது முதிர்ந்தவர்களிடம் இவ்வாறு அதிகளவில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பெண் மொத்தமாக 97000 டொலர்களை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வயது முதிர்ந்தவர்களை ஏமாற்றி அதிகளவில் மோசடி செய்துள்ளதாக இந்தப் பெண்Read More →

Reading Time: < 1 minuteகனேடிய பல்கலைக்கழகம் ஒன்றில், சாக்லேட் விற்பனை இயந்திரத்தில் ரகசிய கமெரா ஒன்று பொருத்தப்பட்டிருந்த விடயம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள விற்பனை இயந்திரம் ஒன்றில், மாணவர்கள் சிலர் சிப்ஸ் வாங்க முயன்றுள்ளனர். அப்போது, அதிலிருந்த சிறிய திரையில் ஒரு செய்தி தோன்றியுள்ளது. அந்த செய்தியைப் படித்த மாணவர்கள் பல்கலை அலுவலர்களுக்கு தகவலளிக்க, மாணவர்கள் மட்டுமின்றி அலுவலர்களும் அதிர்ச்சியடைந்தார்கள். ’இயந்திரத்தில் கோளாறு, இயந்திரத்தால் முகத்தை சரியாகRead More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் இருந்து சட்டவிரோதமாக கனடா செல்ல ஆசைப்படும் யாழ்ப்பாண மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். மக்களை கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் யாழிலிருந்து 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினருக்குக் கிடைக்கப் பெற்ற 21 முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ள பொலிஸார்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இந்த ஆண்டில் கடுமையான காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகும் சாத்தியம் உண்டு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பருவ காலத்தில் காட்டுத் தீ ஆபத்தானதாக அமையக் கூடும் என தெரிவித்துள்ளது. அவசர ஆயத்த அமைச்சர் ஹார்ஜிட் சஜ்ஜான் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளார். மாகாண அரசாங்கங்களின் அவசர ஆயத்த அமைச்சர்களுக்கும் மத்திய அரசாங்க பிரதிநிதிகளும் இடையில் நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். மாகாண அரசாங்கங்கள் காட்டுத் தீ கட்டுப்படுத்தல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வாடிக்கையாளர்கள் விலைக் கழிவுகளை எதிர்பார்த்து காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னணி நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியல் அதிகளவான கனடியர்கள் விலைக் கழிவு அடிப்படையிலான கொள்வனவுகளில் நாட்டம் காட்டுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. லெஜர் நிறுவனததினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. நாட்டில் தற்போதைக்கு பொருட்களின் விலைகள் குறைவடையக் கூடும் என மக்கள் கருதவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பணவீக்கத்தினால் பொருட்களின் விலைகளுக்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், வெளிநாட்டு தலையீடு குறித்த விசாரணைகளுக்கு உதவுமாறு, புலம்பெயர் சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெளிநாட்டு தலையீடு குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆணைக்குழுவொன்று இது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் புலம்பெயர் சமூகங்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தகவல்களை வழங்கும் போது பாதகமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடுவதாக சில புலம்பெயர் சமூகங்கள் குறிப்பிட்டதனைத்Read More →