Reading Time: < 1 minuteகனடாவில் இளம் தலைமுறையினர் மத்தியில் பெருங்குடல் புற்று நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கனாடவில் பெண்களில் 18 பேரில் ஒருவருக்கும் ஆண்களில் 16 பேரில் ஒருவருக்கும் இவ்வாறு பெருங்குடல் புற்று நோய் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவில் புற்று நோய்த் தாக்கத்தில் பதிவாகும் மரணங்களில் சுமார் 11 வீதமான மரணங்கள் பெருங்குடல் புற்று நோய்த் தாக்கத்தினால் ஏற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 50 வயதுக்கும் மேற்பட்டவர்களை விடவும், 50 வயதுக்கும் குறைந்தவர்கள் மத்தியில் பெருங்குடல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் கடத்தல் மற்றும் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் கும்பல்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மாகாணத்தின் பல்வேறு இடங்களில் பொலிஸார் விசாரணைகளை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கனடிய பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடிய வகையில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கும்பல்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்களிடமிருந்து போதைப்Read More →

Reading Time: < 1 minuteஅமெரிக்கா அண்மையில் நிலாவிற்கு ஆளில்லா விண்கலமொன்றை அனுப்பி வைத்தது. ஒடிசியஸ் என்ற விண்கலமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டது. சில நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த விண்கலத்தை நிலாவிற்கு அனுப்பி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடாவின் சஸ்கட்ஸ்வானைச் சேர்ந்த சன்டலே பாயிர் (Chantelle Baier) என்ற பெண்ணின் நிறுவனமும், நிலவிற்கு விண்கலம் அனுப்பும் முயற்சியில் பங்களிப்பினை வழங்கியுள்ளது. சிறு வயது முதலே நட்சத்திரங்களையும் நிலவை பார்த்து ரசித்து வளர்ந்ததாகவும், நட்சத்திரங்களை தமக்கு மிகவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பாதுகாப்பிற்கு புலனாய்வுப் பிரிவு உள்ளிட்ட உளவுச் சேவைகளினால் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பாதுகாப்பு புலனாய்வுச் சேவையின் முன்னாள் நிறைவேற்று முகாமையாளர் டான் சான்டோன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். புலனாய்வுப் பிரிவுகளில் பணியாற்றுவோரினால் தகவல்கள் கசிய விடப்படுவதே தேசிய பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளார். உள்ளிருந்து பகிரப்படும் தகவல்கள் மிகவும் ஆபத்தானவை என சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் கனடாவின் காவற்துறை சேவையின் புலனாய்வு அதிகாரி கெமரூன் ஒட்டிஸ்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டுமான விபத்தொன்றில் புலம்பெயர்ந்த பெண் பலி! கனடாவில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த புலம்பெயர்ந்த பெண்ணொருவர் பணித்தலம் சார்ந்த விபத்தொன்றில் பரிதாபமாக பலியானார். கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வான்கூவரில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார் யுரிடியா (Yuridia Flores, 41) என்னும் பெண். யுரிடியா, மெக்சிகோவிலிருந்து புலம்பெயர்ந்தவர் ஆவார். அவருக்கு ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். அவரது காதலர் பெயர் Daniel Garcia Hernandez. கடந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடும்ப மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தவறினால், அவர்களுக்கான சிகிச்சை செலவுகளை ஏற்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அநேகமான மாகாணங்களில் குடும்ப மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது. கனடியப் பிரஜைகள் குடும்ப மருத்துவரின் சேவையை பெற்றுக் கொள்ள நீண்ட காலம் காத்திருப்பதனை விடவும் மாற்று வழிகளை பின்பற்றுவது உசிதமானது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோய் தொடர்பில் அறிந்து கொள்வதற்கு காத்திருக்கத் தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கெத்ரின் ஹோர்ஸ்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக பணியாற்றிய ஜூலி சங்கின் பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சிரேஷ்ட அமெரிக்க ராஜதந்திரியான எலிசபெத் கெத்ரின் ஹோஸ்ட், பாகிஸ்தானுக்கு பொறுப்பான தலைமை பிரதி செயலாளராக பதவி வகித்து வருகின்ற நிலையிலேயே இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க செனட் சபையின் அனுமதிக்கிணங்க இலங்கைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் இணையத்தில் இடம்பெறும் தீங்குகளை தடை செய்யும் சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இணையத்தில் இடம்பெறக்கூடிய குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இணையத் தீங்குச் தடைச் சட்டம் தொடர்பிலான சட்ட மூலத்தை அறிமுகம் செய்வதற்கு நீண்ட காலம் தகவல் திரட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இணையத்தை பயன்படுத்துவதனால் ஏற்படக்கூடிய தீங்குகளை தடுக்கும் நோக்கில் புதிய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி போலிRead More →

Reading Time: < 1 minuteஇந்திய குடும்பமொன்று பரிதாபமாக உயிரிழக்க காரணமாகியிருந்த நபர் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிகாரிகள் குறித்த நபரை கைது செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கனடிய – அமெரிக்க எல்லைப் பகுதியில் இந்திய குடும்பம் ஒன்று பரிதமாக பலியாகியிருந்தது. ஹர்ஸ்குமார் ராமன்லால் பாட்டில் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 39 வயதான ஜக்தீஸ் பாட்டில், அவரது மனைவி, மற்றும் இரண்டு பிள்ளைகள் இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கடும் குளிரில் காத்திருந்த பெண் ஏதிலிக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஏதிலி முகாமொன்றில் தங்கியிருப்பதற்காக காத்திருந்த நிலையில் குறித்த பெண் இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கென்யாவைச் சேர்ந்த 46 வயதான நான்கு பிள்ளைகளின் தாயான டெல்பினா நிகி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மிஸ்ஸிசாகாவில் ஏதிலி முகாமொன்றில் அடைக்கலம் பெற்றுக் கொள்வதற்காக குளிரில் வெளியே காத்திருந்த நிலையில் இவ்வாறு பெண் உயிரிழந்துள்ளார். ஏதிலிக் கோரிக்கையாளர்கள் நீண்ட நேரம் குளிர்ந்தRead More →