Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளில் சிறு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரு மாகாணங்களுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கோர்ன்வெல் மற்றும் வெலிபீல்ட் பகுதிகளில் 3.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வு காரணமாக எவ்வித சேதங்களும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. ஒட்டாவாவின் தென் பகுதி, எம்ரூன் மற்றும் கோர்ன்வெல் பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக பொதுமக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteவிசத்தை விநியோகம் செய்த கனடியப் பிரஜை ஒருவருக்கு எதிராக 14 கொலைக் குற்றச்சாட்டு சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கெனத் லோவ் என்ற 58 வயதான கனடியப் பிரஜைக்கு எதிராக இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. தற்கொலை செய்து கொள்ள உதவியதாக இந்த நபர் மீது மேலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இணைய தளங்களின் ஊடாக விளம்பரம் செய்து விசம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் மட்டும் இந்த நபரிடம் விசத்தை பெற்றுக்கொண்டRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் குழந்தை பேறற்றவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் பெண்கள் மத்தியில் குழந்தை பேறின்மையானது குறைந்தளவில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2022ம் ஆண்டில் பெண்கள் மத்தியில் குழந்தை பேறின்மை குறைவடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2009ம் ஆண்டு முதலே குழந்தை பேறின்மை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மீண்டும் குறைவடைந்துள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் கார் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாண முதல்வர் டாக் போர்ட் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கனடாவில் பிணை வழங்குதல் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதாகவும் இதன் அடிப்படையில் குற்ற செயல்களில் ஈடுபடுபவருக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் கார் திருட்டில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவில், ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் நடமாடும் பெண் ஒருவரின் கணவர் படுகொலை செய்யப்பட்டார். கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவரைக் கொலை செய்தவர் யார் என தெரியவந்தபோது அனைவருக்கும் கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் கனடாவில் நன்றி தெரிவித்தல் நாள் (Thanksgiving) அனுசரிக்கப்படும் வாரத்தின், வியாழக்கிழமை, தனது கணவரான ஆல்பிரடைக் (Alfred Belyea, 72) காணவில்லை என பொலிசில் புகாரளித்துள்ளார்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் மானிட்டோபா எல்லை பகுதியில் சுமார் 400 கிலோ கிராம் எடையுடைய போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. பியரே பகுதியில் இதுவரையில் மீட்கப்பட்ட அதிகளவான போதைப்பொருள் தொகை இது என தெரிவிக்கப்படுகிறது. methamphetamine வகை போதைப் பொருட்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது. அமெரிக்காவிலிருந்து வின்னிபெக் நோக்கி பயணித்த ட்ரக் வண்டி ஒன்றை சோதனை இட்டபோது குறித்த போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த போதை பொருட்கள் பொருட்களின் சந்தை பெறுமதி சுமார் ஐம்பது மில்லியன்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் திரையிடப்பட்ட தென்னிந்திய திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரொறன்ரோவின் சில திரையரங்குகளில் மலைக்கோட்டை வாலிபன் என்ற கேரள திரைப்படம் திரையிடப்பட்டது. முதல் காட்சி திரையிடப்பட்ட போதே சில திரையரங்குகளில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சில திரையரங்குகளின் ஜன்னல்களுக்கு துப்பாக்கிச் சூடு காரணமாக சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த திரைப்படம் காட்சிப்படுத்துவதனை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரம்டன், ஸ்காப்றோ மற்றும்Read More →