Reading Time: < 1 minuteமேற்குக் கரையில் வன்முறையைத் தூண்டும் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் மீது கனடா பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளது. கலவரத்தைத் தூண்டுதல், தீ வைத்தல், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துதல், சேதம் விளைவித்தல், உள்ளிட்ட வன்முறை செயல்களில் நேரடியாக ஈடுபட்டதாக மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றவாசிகள் 4 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு அமெரிக்க அதிபர் பைடன் அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதித்தார். மேலும் அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது அமெரிக்காவைப்Read More →

Reading Time: < 1 minuteபிரிட்டிஷ் கொலம்பிய மாகாண கல்வி அமைச்சரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரப்பட்டுள்ளது. மாகாணத்தில் இயங்கி வரும் இஸ்லாமிய பள்ளிவாசல் நிர்வாகங்களினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மாகாண முதல்வர் டேவிட் எபியிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல்வேறு இஸ்லாமிய பள்ளிவாசல்கள் இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. மாகாண கல்வி அமைச்சர் செலினா ரொபின்சன் அண்மையில் வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய மக்களின் நிலவுரிமை தொடர்பில் வெளியிட்டRead More →

Reading Time: < 1 minuteவெளிநாட்டவர்கள் கனடாவில் வீடு கொள்வனவு செய்வதற்கான தடை நீடிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்வதற்கான தடை மேலும் இரண்டாண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் நிதி அமைச்சர் கிறிஸ்டியா பீரிலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 2027ம் ஆண்டு வரையில் வெளிநாட்டவர்கள் கனடாவில் வீடுகள் கொள்வனவு செய்வதற்கான தடை நீடிக்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். வெளிநாட்டு பிரஜைகள், நிறுவனங்கள் கனடாவில் வதிவதற்காக வீடுகள் கொள்வனவு செய்வதற்கு தடைRead More →

Reading Time: < 1 minuteஇந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் டெல்லி விமான நிலையம் வந்திறங்கியபோது, அவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனையிட்டார்கள். கடந்த மாதம், அதாவது, ஜனவரி மாதம் 20ஆம் திகதி, குஜராத்திலுள்ள Mehsana என்னுமிடத்தைச் சேர்ந்தவரான நிர்மல் பட்டேல் (25) என்பவர், டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். கனடாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவரது பாஸ்போர்ட்டை டெல்லி விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனையிட்டபோது, அவரது பாஸ்போர்ட்டில் சில பக்கங்கள் இல்லாதது தெரியவந்துள்ளது. ஆதாவது,Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பழங்குடியின சமூகங்கள் வாழும் பகுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். Peawanuck பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் தீ விபத்து பதிவாகியுள்ளது இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் இரண்டு வயது வந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக மெஷ்ன வெப் அஸ்கி காவல் போலீசார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பதுடன்Read More →

Reading Time: < 1 minuteயேமனில் ஹவுதி போராளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு கனடா உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவும் அமெரிக்காவும் கூட்டாக இணைந்து சவுதி போராளிகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. செங்கடல் பகுதியில் சவுதி போராளிகள் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திய வருகின்றன. பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்திக் கொள்ளுமாறு கோரி ஹவுதி போராளிகள் இந்த தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்காவும் பிரித்தானியாவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் கியூபெக் மாகாணத்தில் வகுப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வகுப்பு கட்டண அதிகரிப்பு மாணவர்களை பாதிக்கும் என ஏற்கனவே அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. கியூபெக் மாகாணம் தவிர்ந்த வெளி மாகாணங்களை சேர்ந்த மாணவர்களிடமிருந்து கூடுதல் வகுப்பு கட்டணம் அளவீடு செய்யப்பட உள்ளது. 30% வகுப்பு கட்டணங்கள் அதிகரிப்புஎதிர்வரும் காலங்களில் கியூபெக் மாகாண அரசாங்கம் இவ்வாறு கூடுதல் வகுப்பு கட்டணத்தை அளவீடு செய்யRead More →

Reading Time: < 1 minuteஇரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையும் தாய்லாந்தும் விசா இல்லாத பயணத்தை பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தகத்தில் கையெழுத்திட்டதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார். பரஸ்பர அடிப்படையில் இலவச வீசா பயண ஏற்பாட்டிற்கான உடன்படிக்கையை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்க தாம் இருவரும் ஒப்புக்கொண்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தின் முக்கிய அங்கத்துவ நாடான சிங்கப்பூருடன்Read More →

Reading Time: < 1 minuteபெப்ரவரி 4, 2024 ஸ்ரீலங்கா சுதந்திரதினமன்று அறவழியில் போராடிய மாணவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள்மீது ஸ்ரீலங்கா காவல்துறை மேற்கொண்டுள்ள அராஜகமான தாக்குதல் ஸ்ரீலங்கா அரசின் கோரமுகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.  புலம்பெயர்தேசமாக கண்டனம்  ஸ்ரீலங்காவின் சுதந்திரதினத்தை புறக்கணிக்கும் விதமாகவும் அந் நாளை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் அமைதி வழியில் பேரணி சென்ற அரசியல் தலைவர்கள், மாணவர்கள், மக்கள்மீது மிகவும் கொடூரமான முறையில் ஸ்ரீலங்கா காவல்துறையினர் தாக்குதல் நடாத்தியுள்ளமை கண்டு புலம்பெயர் தேசமாக கடும் கண்டங்களை வெளியிடுகின்றோம்.  ஸ்ரீலங்கா அரசு ஒரு ஜனநாயக அரசென்றால், ஸ்ரீலங்கா நாடு ஒரு ஜனநாயக நாடென்றால் இப்படியான தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிராது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்மீது கண்ணீர் குண்டு பிரயோகம் மேற்கொண்டு, நீர்தாரை தாக்குதலையும் தொடுத்திருந்ததுடன், அவர்கள்மீது கடுமையான தாக்குதல்களையும் ஸ்ரீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.  மக்கள் பிரதிநிதிகள்மீதும் அராஜகம்  இதேவேளை இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்மீதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. அத்துடன் மதிப்புக்குரியவர்களானபாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன் மற்றும் சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர்மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. மக்கள்மீதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மீதும் தாக்கி, தனது கோர முகத்தை ஸ்ரீலங்கா வெளிப்படுத்தியுள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தின்போது தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதையும் அவர்கள்மீது அடக்குமுறையும் ஒடுக்குமுறையையும் மேற்கொண்டதன் வாயிலாகவும் இந் நாளை கரிநாள் ஆக்கியுள்ளது ஸ்ரீலங்கா அரசு. இதனை பன்னாட்டு சமூகம் கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதி குறித்தும் சிந்திக்க வேண்டும்.  பொருளாதாரத்தடை வேண்டும்  இதேவேளை, ஸ்ரீலங்கா காவல்துறையினர் பெருமளவில் கிளிநொச்சியில் குவிக்கப்பட்டு, பாரிய அடக்குமுறை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுவே பாரிய பொருளாதார நெருக்கடியில் உள்ள ஸ்ரீலங்கா தமிழர்களை ஒடுக்குவதில் பாரிய மனித, பொருளாதார செலவுகளை செய்வதற்கும் இத்தாக்குதல் சிறந்த எடுத்துக்காட்டு.  எனவே ஸ்ரீலங்காவுக்கு பொருளாதார நன்மைகள் செய்யும் சர்வதேச நிறுவனங்களும் அரசுகளும் இதனைக் கருத்தில் கொண்டு தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றேன்.  தமிழரின் தலைவிதி தமிழர் கையில். நிமால் விநாயகமூர்த்திநாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர், கனடா ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலி உக்ரைனுக்கு திடீர் விஜயம் செய்துள்ளார். இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜோலி உக்ரைனின் தலைநகர் கியூவிற்கு சென்றுள்ளார். உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். உக்ரைன் சிறுவர்கள் ரஸ்ய படையினரால் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஜோலி இந்த விஜயத்தின் போது கவனம் செலுத்த உள்ளார். சிறுவர்களை பகடை காய்களாக பயன்படுத்த அனுமதிக்க முடியாதுRead More →