Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் காரியாலயம் மீது பெயின்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காலநிலை மாற்றம் தொடர்பில் குரல் கொடுக்கும் அமைப்பு ஒன்றைச் சேர்ந்த குழுவொன்றே இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இளஞ்சிவப்பு நிற பெயின்ட்டை காரியாலயம் மீது வீசி எறிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருட காலத்தில் இரண்டு தடவைகள் இவ்வாறு பெயின்ட் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் களவாடப்பட்டு டுபாய்க்கு அனுப்பி வைக்கப்படவிருந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமார் இரண்டு லட்சம் டொலர் பெறுமதியான நான்கு வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. கனடாவின் ஹால்டன் பிராந்திய பொலிஸார் இந்த வாகனங்களை மீட்டுள்ளனர். எவ்வாறெனினும் மேலும் நான்கு வாகனங்கள் இரண்டு கொள்கலன்களில் ஏற்கனவெ டுபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ மற்றும் ஹால்டன் பிராந்தியங்களில் இந்த வாகனங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இந்த வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லைRead More →

Reading Time: < 1 minuteபிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று நண்பகல் புகழ்பெற்ற தென்னிந்தியக் கலைஞனர்களான சிவா, பாலா, சாண்டி மாஸ்டர், சஞ்சீவ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்ய தர்சினி, ஆல்யமானசா , நந்தினி, மகா லட்சுமி ஆகியோர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் குறித்த கலைஞர்களுக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை 09ஆம் திகதி ஹரிகரனின் இசைRead More →

Reading Time: < 1 minuteகனேடிய தமிழ் காங்கிரஸ் அலுவலகத்துக்கு (CTC) எதிராக கனடாவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டமானது நேற்றைய தினம் (Feb 4, 2024) கனேடிய தமிழ் காங்கிரசிற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள், கனேடிய தமிழ் காங்கிரசின் தலைமை விலக்கப்பட வேண்டுமென்றும் அதன் கட்டமைப்பு புனரமைக்கப்பட வேண்டுமென்றும் கோஷம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் CTC நிர்வாக உறுப்பினர்களின் படங்களுக்கு முட்டைகளால் அடித்து தமது எதிர்ப்பினையும் காட்டியிருந்தனர். அத்தோடு, தமிழருக்கானRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பணப்பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெனிஷா ஒஸ்டின் என்ற பெண்ணுக்கு இந்த பணப்பை கிடைக்க பெற்றுள்ளது. தனது தாயாரின் பணப்பை ஒன்றே நான்கு தசாப்தங்களின் பின்னர் கிடைக்க பெற்றுள்ளது என ஒஸ்டின் தெரிவிக்கின்றார். தனது தாயாரின் பணப்பை 40 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போயிருந்ததாகவும் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கு இது பற்றி தெரியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். வீடு ஒன்றின் சுவர்Read More →

Reading Time: < 1 minuteஒரு காலத்தில், தொலைக்காட்சியில், பனி படர்ந்த அழகிய மலைகளையும் பசுமையான நிலப்பரப்புகளையும், மாட மாளிகைகளையும் கண்டு, வெளிநாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் எவ்வளவு அருமையாக உள்ளன, நமக்கும் அதுபோன்ற வாழ்வு கிடைக்காதா என ஆசைப்பட்ட வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஏராளம். எந்த சேட்டிலைட் தொலைக்காட்சி மூலம் உலகின் அழகைக் கண்டு களித்தோமோ, அதே தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இன்று உலகின் மற்றொரு முகத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஆம்,Read More →

Reading Time: < 1 minuteகாசா போர் குறித்த ஆவணப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட கனடிய பிரஜை ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், அவர் குடும்பத்துடன் தொடர்பு கொண்டுள்ளார். மன்சூர் சௌமான் என்ற பலஸ்தீன கனடியரே இவ்வாறு காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சௌமான் ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது; காணாமல் போயிருந்தமை குறித்து கனடிய வெளிவிவகார அமைச்சு தகவல் வெளியிட்டிருந்தது. சௌமான், உயிருடன் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல் மகிழ்ச்சி அளிப்பதாக கனடிய வெளிவிவகார அமைச்சர் மெலெனி ஜோலிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் எயார் கனடா விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று மூன்று தடவைகள் தரையிறக்குவதற்கு முயற்சி மேற்கொண்ட போதும் அந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால் குறித்த விமானம் தரையிறக்கப்பட வேண்டிய விமான நிலையத்தில் தரையிறங்காது மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி திரும்பியுள்ளது. ரொறன்ரோவிலிருந்து இருந்து நியூ பவுண்ட்லாண்ட் மாகாணத்தில் அமைந்துள்ள சென் ஜோன்ஸ் விமான நிலையத்தில் இந்த விமானம் தரையிறக்கப்படவிருந்தது. மூன்று தடவைகள் குறித்த விமானத்தைRead More →

Reading Time: < 1 minuteயாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபல பாடகர் ஹரிகரன் இன்று யாழை வந்தடைந்துள்ளனர். இந்நிலையில் யாழ் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ஹரிகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ShareTweetPin0 SharesRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் பீல் பகுதியில் கடந்த மார்ச் முதல் ஓகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் அங்குள்ள 3 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்து பணம் திருடப்படதாக பொலிஸாரிடம் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டன. இது தொடர்பாக சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையின் முடிவில், பிராம்ப்டன் பகுதியைச் சேர்ந்த 41 வயதான இந்திய வம்சாவளி நபர் ஜெகதீஷ் பாந்தர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவில்கள் மட்டுமின்றி, மேலும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவின் பிரிட்டிஸ் கொலம்பிய மாகாண கல்வி அமைச்சர் செலினா ரொபின்சன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இஸ்ரேலின் அமைவிடம் தொடர்பில் வெளியி;ட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. வறண்ட நிலத்தில் இஸ்ரேல் உருவானது என அவர் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு பலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். இதன் காரணமாக அமைச்சர் ரொபின்சன் பதவி விலக வேண்டுமென இஸ்லாமிய அமைப்புக்கள் கோரியிருந்தன. இவ்வாறான பின்னணியில் செலினா ரொபின்சன் அமைச்சுப் பதவியை துறப்பதாகRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் கார் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பிரதான எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பியே பொலியேவ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டால் வாகனக் கொள்ளையில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். அடிக்கடி கார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை விதிக்கத் திட்டமிட்டுள்ளாகத் தெரிவித்துள்ளார். அண்மைய ஆண்டுகளில் கார் கொள்ளைச் சம்பவங்கள் 300 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. ஒன்றாரியோ மாகாண அரசாங்கம்Read More →

Reading Time: < 1 minuteஇலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்து குறித்த இளைஞர்கள் கருத்துத் தெரிவிக்கையில்” நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாத்துறையானது வீழ்ச்சி அடைந்துள்ளதால்Read More →