Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் சில இடங்களில் பனிச்சறுக்கு விளையாட்டுக்களில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது. சுமார் 45 மலைப் பகுதிகளில் பனிச்சறுக்கில் ஈடுபடுவது ஆபத்தானது என அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோவின் நகர நிர்வாகம் இது தொடர்பிலான தடையை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மலை உச்சிலிருந்து கீழே பனிச்சறுக்கில் ஈடுபடும் போது இடையில் காணப்படும் மரங்கள் போன்ற பொருட்களினாலும், குழிகள் போன்றவற்றினாலும் ஆபத்து ஏற்படக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடும் போது ஏற்படக்கூடிய ஆபத்துக்களைRead More →

Reading Time: < 1 minuteகணவனுடைய செலவில் கனடா சென்ற இந்தியப் பெண் ஒருவர், கனடாவில் படிப்பு முடிந்ததும், கணவனுடனான உறவுகளைத் துண்டித்துக்கொண்டுள்ளார். இந்தியாவின் பஞ்சாபிலுள்ள லூதியானாவைச் சேர்ந்தவர் அம்ரிக் சிங். 2015ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், தனது மகனான ஜக்ரூப் சிங்கிற்கு, ஜாஸ்மின் கௌர் என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்துள்ளார். டிசம்பரில் ஜாஸ்மின் கனடா செல்ல, இரண்டு ஆண்டுகள் அவருடைய படிப்பிற்காக ஜக்ரூப் குடும்பத்தினர் பணம் அனுப்பிவைத்துள்ளார்கள். படிப்பு முடிந்ததும், கணவர் குடும்பத்துடனான உறவைத்Read More →

Reading Time: < 1 minuteநாட்டை கட்டியெழுப்ப தற்போதைய பொருளாதார கொள்கைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நேற்று வடக்கிற்கு சென்று, வடமாகாண ஆளுநரை சந்தித்தபோதே, இதனைக் குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, சிரேஷ்ட பிரதம அதிகாரி தலைமையில் நிரந்தர வதிவிட பிரதிநிதி, சிரேஷ்ட பொருளியலாளர், சிரேஷ்ட நிதித்துறைசார் நிபுணர், பொருளியலாளர், உள்ளூர் பொருளியலாளர் உள்ளிட்டRead More →

Reading Time: < 1 minuteகனடா நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை மற்றும் வீட்டு நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சர் மார்க் மில்லர், அடுத்த மாதங்களில் நாட்டில் வசிக்கக்கூடிய வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதாக அறிவித்துள்ளார். இருப்பினும், நிர்வாகம் எவ்வளவு குறைக்க திட்டமிட்டுள்ளது என்பதை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவிக்கவில்லை. இந்தாண்டு (2024) 485,000 புதிதாக குடியேறியவர்களும், 2025 மற்றும் 2026 ஆகிய இரண்டிலும் 500,000 பேர் புதிதாக வருபவர்கள் உள்ளடங்கும். அந்த நாட்டின்Read More →

Reading Time: < 1 minuteஇஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என கனடிய அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. குறிப்பாக இஸ்ரேலுக்கு எதிராக தென் ஆபிரிக்க அரசாங்கம் இனவழிப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டை ஆதரவளிக்கப் போவதில்லை என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இனவழிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி சர்வதேச நீதிமன்றில் தென் ஆபிரிக்கா வழக்குத் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு தற்பொழுது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேசRead More →

Reading Time: < 1 minuteகனடா அரசியலில் எப்போதுமே அதிகம் பேசப்படும் ஒரு விடயம் புலம்பெயர்தல். என்ன நடந்தாலும், அத்துடன் புலம்பெயர்தலை இணைத்துப் பேசும் அரசியல்வாதிகள் கனடாவில் உண்டு. ஆனால், புலம்பெயர்தலுக்கு ஆதரவாக சில அமைச்சர்கள் பேசியதைக் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2022ஆம் ஆண்டின் புலம்பெயர்தல் துறை தொடர்பான உள்விவகார ஆவணங்களில், புலம்பெயர்வோர் எண்ணிக்கையை அதிகரித்தல், வீடுகள் மற்றும் பிற தேவைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என துறை சார்ந்த அமைச்சர் ஒருவரிடம் புலம்பெயர்தல்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் குடியேறிகளின் பிரவேசத்தை ஒழுங்முறைக்கு உட்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கனடிய அரசாங்கத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் கடுமையான வீட்டுப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள பின்னயியில், இவ்வாறு குடியேறிகள் எண்ணிக்கையை வரையறுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. வீடமைப்பு அமைச்சர் சீன் ப்றேசர் மற்றும் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். ஆண்டு தோறும் அரசாங்கம் வீட்டுப் பிரச்சினை குறித்த சவால்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கனேடியர் ஒருவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் விரிசல் ஏற்பட்டது. கனடா பிரதமர் அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டுவிட்டாலும், கனடாவைப் பொருத்தவரை, சர்வதேச மாணவர்களால் கனடாவுக்கு பெரும் வருவாய் உள்ளது. அதுவும், இந்திய மாணவர்கள் ஏராளமானோர் கனடாவில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆக, இரு நாடுகளுக்குமிடையிலான உறவு பாதிக்கப்பட்டதால், கனடாவுக்கு செல்லRead More →

Reading Time: < 1 minuteரொறன்ரோவில் குரோத உணர்வுக் குற்றச் செயல்களின் எண்ணிக்கைகள் வெகுவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடிய பொலிஸார் இது பற்றிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் குரோத உணர்வு குற்றச் செயல்களின் எண்ணிக்கையானது 2022ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 43 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் 248 குரோத உணர்வு குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன. இதேவேளை, கடந்த 2023ம் ஆண்டில் 353 குரோத உணர்வு குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அவசர சிகிச்சை பிரிவுகளில் நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல வைத்தியசாலைகளில் இந்த நிலைமையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில பகுதிகளில் நோயாளர் எண்ணிக்கை 115 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே மிக அத்தியாவசியமான நிலைமைகளை தவிர வைத்தியசாலைகளில் அனுமதி பெற முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: 3 minutes2009 இனவழிப்பு யுத்தத்திற்குப் பின்னரான காலபகுதியில் ரொறொன்ரோவுக்குச் சென்றிருந்த போது, எனது உறவினர் ஒருவரது விட்டில் தெரிந்தவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அப்போதைய அரசியல் நிலவரம் பற்றி என்னுடன் பேசவிரும்பினார். முன்னர் தமிழ்த் தேசியத் தளத்தில் மிகவும் தீவிரமாகச் செயற்பட்ட அவர் இப்போது விரக்தியடைந்திருப்பது அவரது பேச்சில் தெரிந்தது. எமக்கிடையிலான உரையாடலின்போது, அவர் “வன்னியில் உள்ளவர்களுக்கு படித்தவர்களைப் பிடிக்காது” எனக் கூறினார். விடுதலைப் புலிகளின் தலைமையையே வன்னியில் உள்ளவர்கள்Read More →

Reading Time: < 1 minuteவட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றையதினம் (10.01.2024) இடம்பெற்றது. குறித்த சந்திப்பின்போது, கனடாவிலிருந்து வருகைதரும் பலர் வடக்கில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றமை தொடர்பில் வட மாகாண ஆளுநர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நாட்டில் பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபித்ததன் பின்னர் முதலீடுகளை மேற்கொள்வதில் காணப்படும் சிக்கல்களுக்கான தீர்வுகள் எட்டப்படும் என ஆளுநர்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் விமானக் கதவை திறந்து பயணியொருவர் கீழே வீழ்ந்த சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கனடாவின் பியர்சன் விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று ரொறன்ரோவிலிருந்து டுபாய் நோக்கிப் பயணிக்க ஆயத்தமான நியைில் பயணி கீழே வீழ்ந்துள்ளார். விமானத்தின் அவசர வெளியேறல் கதவை பயணி ஒருவர் திறந்துள்ளார். எயார் கனடா விமான சேவைக்கு சொந்தமான AC056 என்ற விமானத்திலிருந்து குறித்த பயணிRead More →