Reading Time: < 1 minuteகனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு அச்சுறுத்தல் விடுத்த நபர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மற்றும் கியூபெக் மாகாண முதல்வருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக நபர் ஒருவர், வழக்கு விசாரணைகளில் ஒப்புக்கொண்டுள்ளார். கனடிய பிரதமர் ட்ரூடோ மற்றும் குபெக் மாகாண முதல்வர் பிரான்சுவா லெகால்ட் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக குறித்த நபர் ஒப்புக் கொண்டுள்ளார். 30 வயதான ஜெர்மெய்ன் லீமெய் என்ற நபர் மீது கொலை அச்சுறுத்தல்Read More →

Reading Time: < 1 minuteபுதிய சர்வதேச மாணவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை கனேடிய அரசு மேற்கொள்ளவுள்ளதாக கனடாவின் குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், 2024ஆம் ஆண்டுக்கான புதிய சர்வதேச மாணவர்களின் வருகையானது 360,000ஆக குறைக்கப்படவுள்ளது. புலம்பெயர் மாணவர்கள் கனடா நாட்டின், சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பின் வளர்ச்சிக்கு கடந்த காலங்களில் பெரிதும் பங்காற்றி வந்துள்ளார்கள். ஆனால், அண்மைக்காலமாக கனடா நாட்டில் சர்வதேச மாணவர்களின் அதிகரித்துள்ள வருகையானது, கனேடிய அரசாங்கத்திற்குRead More →

Reading Time: < 1 minuteகனேடிய பெண் ஒருவர் நடந்துசெல்லும்போது, வழியில் ஒரு கவர் கிடப்பதை கவனித்துள்ளார். அதை அவர் எடுத்துப் பார்க்க, அதில் பெரும் தொகையிலான பணம் இருப்பதை அவர் கண்டுள்ளார். கவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள்கடந்த வாரம், வான்கூவரைச் சேர்ந்த Talia Ball, கடைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, வழியில், பனியில், கவர் ஒன்று கிடப்பதைக் கவனித்துள்ளார். அவர் அதை எடுத்துப் பார்க்க, அந்த கவரில் பெரும் தொகையிலான பணம் இருந்துள்ளது. மேலும், அந்தக்Read More →

Reading Time: < 1 minuteஇங்கிலாந்திலிருந்து கனடா நோக்கி வந்துகொண்டிருந்த விமானத்தின் கதவைத் திறக்க முயன்ற பயணி ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. லண்டனிலிருந்து ரொரன்றோ நோக்கி ஏர் கனடா விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. விமானம் அட்லாண்டிக் பெருங்கடல் மீது பறந்துகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ஒரு பயணி விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறக்க முயன்றுள்ளார். உடனடியாக விமானப் பணியாளர்கள் அவரைப் பிடித்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். மனக்குழப்பத்தில் இருந்த அந்த முதியவர், வேண்டுமென்றே அப்படிRead More →

Reading Time: < 1 minuteகனடாவின், வின்னிபெக்கில் சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். சென் பொலிபஸ் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் காத்திருந்த நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். ஐந்து மணித்தியாலங்கள் குறித்த நோயாளி சிகிச்சைக்காக காத்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. மரணத்திற்கான காரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபரின் மரணம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுள்ளது. கனடாவில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக காத்திருந்து மரணிக்கும் சம்பவங்கள் அண்மைய நாட்களாகRead More →

Reading Time: < 1 minuteசர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அதன் பின்னரே நாட்டில் மூன்றாம் தவணையை வெளியிடப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார். வர்த்தகர்களிடம் இருந்தும் வட் வரியை அறவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு வரி செலுத்தாமல் தமது சொந்த இலாபமாக மாற்ற சிலர் செயற்பட்டு வருவதாகவும் இராஜாங்கRead More →

Reading Time: < 1 minuteகனேடிய மக்கள், மாதாந்த வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு காரணமாக பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஆய்வு நிறுவனமொன்றினால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரியில்லா சேமிப்பு கணக்குகளுக்கு கனடியர்களின் பங்களிப்பு குறைவடைந்து செல்வதாக குறிப்பிடப்படுகின்றது. கனடியர்களின் மாதாந்த அடிப்படைச் செலவு 397 டொலர்களினால் அதிகரித்துள்ளது. தற்போதைய பொருளாதார நிலைமகளின்Read More →

Reading Time: < 1 minuteசெங்கடலில் ஏற்பட்டுள்ள ஏற்பட்டுள்ள பதற்றத்தினால் பொருட்களின் ஏற்றுமதியை சீர்குலைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலகளவில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை தவிர்ப்பதற்காக நீண்ட மற்றும் விலையுயர்ந்த ஆப்பிரிக்காவைச் சுற்றிய நீழ் வழிப் பாதை வழியாக கோப்பி முதல் பழங்கள் வரை கப்பல்களில் அனுப்பிவைக்கப்படுகிறது. எரிவாயு, எண்ணெய் போன்றவற்றுக்கு இந்த நீண்ட பயணத்தினால் பாதிப்பில்லை. ஆனால் பழங்கள், இதர மளிகைப் பொருள்கள் கெட்டுவிட வாய்ப்புள்ளது.Read More →

Reading Time: < 1 minuteஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அவர்களை, வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இதில் வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள் , அபிவிருத்தித்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. மேலும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவி செய்யும் என தெரிவித்த உயர்ஸ்தானிகர், விசேடமாக வடக்கு மாகாணத்துக்கான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தமைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் போலி தொழில் வாய்ப்பு குறித்த மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதிலும் தொழில் வாய்ப்பு வழங்குவதாக போலியாகக் கூறி மக்கள் ஏமாற்றப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான மோசடிகள் இணைய வழியில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொழில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி, போலி காசோலைகள் மூலம் மோசடிகள் இழைக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் தொழில் வாய்ப்பு வழங்குவதாகக் கூறி கனடியர்களிடமிருந்து 7,218,534 டொலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதுடன் 2023ம்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் கொலைக் குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. கனடாவின், ரிச்மன்ட்ஹில் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடடு சம்பவத்தில் 33 வயதான நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார். ஆயுள் தண்டனை 36 வயதான மொஹமட் எல் ஸாவாய், 23 வயதான கொரி சூங் ஆகியோருக்கு இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீட்டிலிருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்துள்ளது. கோவிட் பெருந்தொற்று காலப் பகுதியில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்தனர். கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதமளவில் வீட்டிலிருந்து வேலை செய்வோரின் எண்ணிக்கை 20 வீதமாக குறைவடைந்துள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. பெருந்தொற்று நிலைமைக்கு முன்னதாக நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்தோரின் எண்ணிக்கை வெறும் ஏழு சதவீதம் என தெரிவிக்கப்படுகின்றது. பெருந்தொற்று காலப் பகுதியில் போக்குவரத்துRead More →

Reading Time: < 1 minute40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தஞ்சமடைந்து அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கையின் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின்கீழ் இந்த கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். பல்வேறு காலகட்டங்களில் ஏற்பட்ட அசாதாரண யுத்த சூழ்நிலைகளின்போது தமிழகத்தில் தஞ்சமடைந்த வடக்கு கிழக்கை சேர்ந்தவர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறுRead More →