Reading Time: < 1 minuteஇந்தியாவின் நாகப்பட்டினத்திற்கும் யாழ் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். குறித்த திகதியில் சேவைகளை மீண்டும் தொடங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால் பயணிகள் படகு சேவையைத் தொடங்குவதற்கான ஆரம்ப திட்டங்கள் நிறைவடைந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஒக்டோபர் 20Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டுப்பாடுகள் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது கல்வி கற்று வரும் சர்வதேச மாணவர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர். வீட்டு வாடகை மற்றும் வீட்டு விலைப் பிரச்சினை உள்ளிட்ட சில காரணிகளினால் சர்வதேச மாணவர்களுக்கான வீசா ஒதுக்கீட்டு எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் இந்த தீர்மானம் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எனினும், இந்த நடவடிக்கையினால் வகுப்புக்Read More →

Reading Time: < 1 minuteதுருக்கிக்கு மீண்டும் ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கனடா அறிவித்துள்ளது. ட்ரோன் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேட்டோ அமைப்பில் சுவீடன் மற்றும் பின்லாந்து என்பன உள்வாங்கப்படுவதற்கு அண்மையில் துருக்கி இணக்கம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து துருக்கிக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய கனடிய அரசாங்கம் தனது இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளது. இதன்படி விரைவில் துருக்கிக்கு கனடா ஆயுத ஏற்றுமதிகளை தொடரும் எனRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்று வரும் மோசடி குறித்து பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீடு வீடாக சென்று ஓரு கும்பல் பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர். சிக் கிட்ஸ் (SickKids Foundation) என்ற அறக்கட்டளைக்காக நிதி திரட்டும் போர்வையில் இந்த மேசாடி இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போலியான கும்பல் ஒன்று நன்கொடைகளை திரட்டி வருவதாக பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர். மெய்யான சிக் கிட்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் தங்களதுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பாடசாலை பஸ் சாரதியொருவர் மிக மோசமாக நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நயகராவில் பாடசாலை பஸ் ஒன்றின் சாரதி விபத்து ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பஸ்ஸில் பயணம் செய்த மாணவர்களை நிர்க்கதியாக்கி, குறித்த சாரதி தப்பிச் சென்றுள்ளார். நயகராவின் வெல்லென்ட் பகுதியின் சார்ளஸ் ட்ரைவ் பகுதியில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தினால் பஸ்ஸின் ஒரு டயர் கழன்றிருந்தது எனவும், நான்கு பிள்ளைகள் பஸ்ஸில் இருந்தனர் எனவும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடுங்குளிரில், உறைபனியில், நடந்தே நுழைய முயன்று, ஒரு குடும்பமே பனியில் உறைந்து இறந்துகிடந்த சம்பவம் மூன்று நாடுகளை அதிரவைத்த விடயம் நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்தக் குடும்பத்தை அமெரிக்காவுக்குள் கடத்த உதவிய நபர் கனடாவில்தான் இருக்கிறார் என்னும் அதிரவைக்கும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது… 2022ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத்திலுள்ள Dingucha என்ற கிராமத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலிRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் பத்தாயிரம் டொலர் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற ஒருவர் இதுவரையில் உரிமை கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லொத்தர் சீட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதியுடன் காலாவதியாகின்றது. 14, 15, 25, 36, 42 மற்றும் 43 என்ற பரிசு இலக்கங்களையும் 9 என்ற போனஸ் இலக்கத்தையும் கொண்ட லொத்தர் சீட்டே இவ்வாறு உரிமை கோரப்படாதிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. LOTTARIO என்ற லொத்தர் சீட்டிலுப்பின் மூலம் இந்த பரிசுRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் களவாடப்பட்ட பெருந்தொகை வாகனங்கள் இத்தாலியில் மீட்கப்பட்டுள்ளன. சுமார் 251 வாகனங்கள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. களவாடப்பட்ட வாகனங்கள் இத்தாலி வழியாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்படவிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. விலை அதிகமான மற்றும் உயர் பண்டக்குறிகளைக் கொண்ட வாகனங்களே இவ்வாறு களவாடப்பட்டுள்ளன. இத்தாலிய பொலிஸார் இந்த வாகனங்களை மீட்டுள்ளனர். இன்டர்போல் மற்றும் கனடிய பொலிஸாரின் ஒத்துழைப்புடன் வாகனங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. போலியான தகவல்களுடன் இந்த வாகனங்கள் கொள்கலன்கள் ஊடாக அனுப்பிRead More →