சீனச் சமூகத்தை இலக்கு வைத்து கனடாவில் இடம்பெற்று வரும் மோசடி!
Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொலைபேசி வழியாக இந்த மோசடி சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனச் சமூகத்தைச் சேர்ந்த மக்களை இலக்கு வைத்து மோசடிகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவில் வாழ்ந்து வரும் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்படக்கூடிய அபாயத்தை எதிர்நோக்குவதாகத் தெரிவித்து மோசடி இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் இடம்பெற்ற மோசடியுடன் தொடர்புபடுத்தி கப்பம் கோர முயற்சிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Read More →