Reading Time: < 1 minuteஹுதி போராளிகளின் தாக்குதல்களை தடுக்கும் நோக்கில் செங்கடலில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப் பாதுகாப்பு படையில் கனடாவும் இணைந்து கொண்டுள்ளது. செங்கடலில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையணியினால் இந்த பாதுகாப்பு பணி முன்னெடுக்கப்பட உள்ளது. செங்கடலில் பரப்பில் பயணிக்கும் வர்த்தக கப்பல்கள் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் இந்த பாதுகாப்பு படையணியை உருவாக்கியுள்ளன. யேமனில் இயங்கி வரும் ஹுதி போராளிகள் செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல் மீதானRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ரொறன்ரோவில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. காசா போர் தொடங்கியது முதல் இதுவரையில் ரொறன்ரோவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குரோத உணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஓராண்டு காலப் பகுதியில் குரோத உணர்வு சம்பவங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் இந்தக் காலப் பகுதியில் 48 சம்பவங்களும் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் 98 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. ரொறன்ரோவில் இஸ்லாமியர்களுக்கும்,Read More →

Reading Time: < 1 minuteகனடாவுக்கு சமீபத்தில் வந்த இந்திய இளைஞர் ஒருவர், அசாதாரண விபத்தொன்றில் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் வாழும் மக்களிடையே அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோவிலுள்ள Kitchener என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடுகளில், சர்வதேச மாணவர்கள் பலர் தங்கியுள்ளார்கள். அவர்களில் இந்திய மாணவர்களும் அடங்குவர். கடந்த செவ்வாயன்று அதிகாலை 7.35 மணிக்கு அவசர உதவிக்குழுவினர் அந்த பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். எரிவாயுக் கசிவு என்று நினைத்து அவசர உதவிக்குழுவினர் அங்கு விரைந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் வீடு நிர்மானிப்போருக்கு மகிழ்ச்சியான தகவல் ஒன்றை பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார். நாட்டில் நிலவி வரும் வீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார். வருட இறுதியை முன்னிட்டு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். கனடாவில் வீடு நிர்மானிப்போருக்கு, குறைந்தளவு வட்டியுடனான கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஜீ7 நாடுகளில் கனடா பொருளாதார ரீதியில் சிறந்தRead More →

Reading Time: < 1 minuteஅரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான மறுசீரமைப்பு நடவடிக்கைகளை அடுத்து இலங்கைக்கான இரண்டாம் கட்ட நிதியுதவியாக 500 மில்லியன் டொலர்களை உலக வங்கி விடுவித்துள்ளது. இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் குறித்த நிதியுதவியை வழங்க கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி உலகவங்கி அனுமதியளித்தது. பொருளாதார ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்தல், வறிய மற்றும் நலிவுற்ற சமூகங்கள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்தல், அனைவரையும் உள்ளடக்கிய தனியார்துறை மீட்சிக்கு ஒத்துழைத்தல் ஆகியவற்றுக்கு உதவக்கூடியவகையில்Read More →

Reading Time: < 1 minuteகனடிய மொத்த சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த 2023ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் கனடாவின் சனத்தொகையானது 430000ஆல் அதிகரித்துள்ளது. தற்காலிக அடிப்படையிலான வெளிநாட்டுப் பிரஜைகளின் வருகை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோரின் வருகையின் காரணமாக சனத்தொகையில் வேகமான மாற்றம் பதிவாகியுள்ளது. சுமார் 66 ஆண்டுகளின் பின்னர் ஒரு காலாண்டில் கனடாவில் பதிவான மிக அதிகளவான சனத்தொகை வளர்ச்சி இந்தRead More →

Reading Time: < 1 minuteகனடாவிலிருந்தும், அமெரிக்காவிலிருந்தும் இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். 2022 – 23 கல்வியாண்டில், சுமார் 28 இந்திய மாணவர்கள் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல கனடாவிலிருந்தும் இந்தியர்கள், குறிப்பாக, இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. கனடாவைப் பொருத்தவரை, போலி கடிதங்கள் கொடுத்து கல்வி நிறுவனங்களில் சேர்ந்ததே இந்திய மாணவர்கள் நாடுகடத்தப்படுவதற்கு முக்கிய காரணம் என இந்திய வெளியுறவுத்துறை இணைRead More →

Reading Time: < 1 minuteகனடாவில் யூத எதிர்ப்பு நடவடிக்கைள் குறித்து பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ அச்சம் வெளியிட்டுள்ளார். அண்மையில் கனடாவின் ஒட்டாவாவ நகரில் 15 வயதான சிறுவனை பயங்கரவாத குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பிரதமர் இவ்வாறான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். யூத சமூகத்தின் மீது தாக்குதல் நடத்த குறித்த சிறுவன் முயற்சித்தாக கனடிய பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர். இந்த சிறுவன் மீது வெடிபொருட்கள் தொடர்பிலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minuteதிம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கும் யுக்தி அரசியலை முன்னெடுக்க விழையும், இமயமலைப் பிரகடனத்தின் கபட நோக்கங்களையும், திரிபுகளையும் முற்றாக நிராகரிப்பதாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த 69 சிவில் அமைப்புக்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் கையொப்பமிட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “உலகத் தமிழர் பேரவை – சிறப்பான இலங்கையை நோக்கிய சங்க ஒன்றியம் ஆகிய அமைப்புகள் இணைந்து வெளியிட்ட ‘இமயமலைப் பிரகடனம்’ வெளிப்படுத்தும் ஒன்று, இரண்டு, மூன்று நான்குRead More →

Reading Time: < 1 minuteகனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தைச் சேர்ந்த மக்கள் உள ஆரோக்கிய கேடுகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமையினால் மக்கள், ஆரோக்கிய பாதிப்புக்களினால் சிக்கியுள்ளனர். Ipsos என்ற நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. பணவீக்கம் மற்றும் வங்கி வட்டி வீத என்பனவற்றின் அதிகரிப்பு காரணமாக அழுத்தங்களை எதிர்நோக்குவதாக சுமார் 39 வீதமான ஒன்றாரியோ மாகாண பிரஜைகள் தெரிவித்துள்ளனர். நிதிRead More →

Reading Time: < 1 minuteவிடுமுறை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், கனேடியர்கள் பலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு ஆவலாக காத்திருக்கிறார்கள். அவர்களுக்காக, கனடா அரசு சில பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. சில நாடுகளில் குற்றச்செயல்கள், தீவிரவாத அச்சுறுத்தல், அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக, அங்கு சுற்றுலா செல்வதைத் தவிர்க்குமாறு கனடா அரசு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. அப்படி, பயணிக்கவேண்டாம் என கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ள 21 நாடுகள் பட்டியலில் ரஷ்யா, உக்ரைன், ஏமன், சூடான், சிரியா மற்றும்Read More →

Reading Time: < 1 minuteகனடாவில் இடம்பெற்ற குதிரை வண்டி விபத்தில் சிறுவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குதிரை வண்டியொன்றும் பயணிகள் வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குதிரை வண்டியில் பயணம் செய்த 13 வயதான ஒரு சிறுவர் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த குதிரை வண்டியில் பயணம் செய்த எட்டு வயதான மற்றுமொரு சிறாரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயணிகள் வாகனத்தைச் செலுத்திய சாரதியும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில்Read More →